|  | | 
12th March 2009, 03:09 AM
|  | Platinum ILite | | Join Date: Sep 2007 City: Mumbai State: Maharastra Country: India
Posts: 2,595
Referrals: 1
| | ஆணென்ன ! பெண்ணென்ன!-சிறுகதை ஆணென்ன ! பெண்ணென்ன! அன்று காலையில் தலைவலியுடன் தான் எழுந்தாள் கமலா. மேல் வேலை செய்யும் சீதம்மா கடந்த 2 நாட்களாய் வேலைக்கு மட்டம் போட்டதால், சமையல் , அலுவலக வேலையும் சேர்த்து செய்த அலுப்பில்...இன்று உடம்பு ஓய்வுக்கு கெஞ்சியது. கடவுளே! இன்றாவது,சீதம்மா வேலைக்கு வந்துவிட வேண்டும்-என்ற நினைப்புடன் எழுந்தவள்,பரபரவென்று வேலையில் ஈடுபட்டாள்.ஆனால்,இன்றும் அவள் வரவில்லை. வேலையின் அலுப்பு முகத்தில் தெரிய, சிடுசிடுவென்று அவளை பார்த்தவுடனே அவள் கணவன் ராகவனுக்கு புரிந்து போயிற்று.
'என்ன கமலா, சீதம்மா இன்றும் வரவில்லையா ?'' ப்ச்சு..என்னாச்சுன்னே தெரியலிங்க...இப்படி மட்டம் போடவே மாட்டா...ஒரு வேலை உடம்பு சரியில்லையோ என்னவோ....? ஆமா...எனக்கு மட்டும் உடம்பு நல்லாவா இருக்கு? "எல்லா வேலையும் ஒற்றையாளாய் பார்க்கிறதுன்னா முடியவே இல்லீங்க.வீட்டிலே வேலை எல்லாம் முடிச்சிட்டு,அலுவலகம் போக லேட்டானதால மானேஜர் கிட்ட வேற வாங்கி கட்டிகிட்டேன்!"
"இந்த பிரச்சினைக்கு, நான் ஒரு வழி சொல்லவா?'' கமலா, ஆவலுடன் கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.
''நான் உனக்கு வீட்டு வேலைகளில் உத்தாசை செய்கிறேன் கமலா"என்று கணவன் சொல்லமாட்டானா என்ற நப்பாசை அவளுக்கு.. ஆனால், ராகவனோ, சர்வ சாதரணமாக,"நீ வேலையை விட்டுவிடு...வீட்டோடு இருந்து வீட்டை மட்டும் பார்த்துகொண்டால் போதும்" சொன்னான். அதென்னவோ ஆண்களுக்கு, "மனைவி வேலைக்குப்போவது பிடிப்பதில்லை.என்னடா...இன்னும் சொல்லலையேன்னு பார்த்தென்...ஆன்னா ஊன்னா இது ஒண்ணை சொல்லிடுவீங்களே...என்னடா ...பொண்டாட்டி,தனியா எல்லா வேலையும் பார்க்கிறாளேன்ற கரிசனம் இல்லைன்னா கூட பரவாயில்லை.ஒத்தாசை செய்யணும் கூட நான் எதிர்ப்பார்க்கலை...ஆனால் வேலையை விட்டுடு...பல்லைவியை மட்டும் தயவு செய்து...பாடாதீங்க"
"ரொம்ப சிரமப்படறியேன்னு சொன்னேன்.கேட்கலைன்னா போ...எனக்கென்னெ வந்தது?..."
கமலாவின் கோபம் மகளின் மீது திரும்பியது. நோட்டில் குறிப்பு எழுதிகொண்டிருந்த கவிதாவின் தலையில் நங்கென்று குட்டினாள்.அந்த 10 வயது பெண் வலியில் துடித்து போய்,அம்மாவை பயத்துடன் பார்த்தாள்.
ஏண்டி, கழுதை,வயசாகுதுஇல்லை.அம்மா ஒண்டியாளாய் கஷ்டப்படறாளே,...வீட்டுவேலையில் கொஞ்சம் ஒத்தாசை பண்ணுவோம்கிற நினைப்பாவது இருக்கா? அப்பாவுக்குப்பொண்ணு தப்பாமப் பொறந்துருக்கே.காலையில்,எழுந்தாப் புக்கை எடுத்துவச்சுகிட்டு உட்கார்ந்துடறே.....உங்கப்பா..செய்தித்தாளை வச்சுகிட்டு உட்கார்ந்துடற மாதிரி....?
"என்னையே எப்ப பார்த்தாலும் குத்தம் சொல்லு...விடிஞ்சு இவ்வளவு நேரமாகியும்...உன் புள்ள தூங்கிட்ட்டிருக்கானே....அவனை மட்டும் எதுவும் சொல்லமாட்டியே....''மகள் முணுமுணுப்பது காதில் விழ அம்மாவின் கோபம் அதிகமாகியது.
எதிர்த்து பேசின பல்லில போடுவேன்.அவன் ஆம்பளைப்பிள்ளடி...காலம் முழுக்க காலாட்டிகிட்டே இருக்கலாம்..உங்கப்பா மாதிரி.ஆனால் நீ பொம்பளப்புள்ள..என்னிக்கு இருந்தாலும் அடுக்களையில் கரண்டி நீ தான் பிடிக்கணும்.....
மனைவியின் பேச்சைக்கேட்டு,ராகவன் ஆவேசமாய் எழுந்துவந்து,"காலையில் ஏன் இப்படி ருத்ரதாண்டவம் ஆடுகிறாய்.வேலைக்காரி வரலேன்னா....பச்சைப்புள்ளயவா வேலை வாங்குவே?"
"ஆமா...பச்சைப்புள்ள தொட்டில்ல போட்டு ஆட்டுங்க..என்னவாயிருந்தாலும் உங்க பொண்ணு நாளைக்கு ஒரு வீட்டுக்கு மருமகளாப் போக வேண்டியவ தான்.எந்த வேலயும் செய்யாமலிருந்தா நாளைக்கு வாழ்க்கைபடற இடத்திலே, பொண்ணை வளர்த்த லட்சணத்தை பாரு...என் தலை தான் உருளும்."
''படிக்கிறப் பொண்ணைப் போட்டுப் படுத்தாதேடி, பாவம்.....''
பொண்டாட்டி வேலைக்கு போகக்கூடாது...ஆனால் பொண்ணு மட்டும் படிச்சு கலெக்டர் உத்யோகம் பார்க்கணுமாக்கும்.ரொம்ப நன்னா இருக்கு...உங்க நியாயம்? படிக்கிறது ராமாயணம் இடிகிறது பெருமாள் கோயில்னு...உங்களை மாதிரி ஆளுங்களுக்கு தான் சொன்னாங்களோ?
"உன் கிட்டெ மனுஷன் பேசுவானா?"ராகவன் வெறுத்து போனான்.
"எங்க 2 பேரையும் இந்த காய்ச்சு காய்சறியே...ஏன் உன் பிள்ளை உனக்கு ஒத்தாசை பண்றானா...2 வயசு மூத்தவன் தானே...இன்னும் எழுந்துக்கவேல்ல...அவனை கண்டிக்க வக்கில்லை.பெரிசா பேச வந்துட்டா..அவ மேல கைய வச்சா எனக்கு கெட்ட கோபம் வரும்.சொல்லிட்டேன்.."
கணவரின் கோபம் நியாயமானது தான் என்று கமலாவிற்கு புரிந்த்து.
கடன்காரி! சீதம்மா வராததல் தான் இத்தனை குழப்பம்...?
கடகடவென்று வேலைகளை முடித்துவிட்டு,அலுவலகம் கிளம்பினாள்.ஆனால் அன்று பார்த்து,நடுவ்ழியில் ஸ்கூட்டி மக்கர் பண்ணி நின்று போனது...வண்டியை தள்ளிக்கொண்டு,அருகிலிருந்த மெக்கானிக் ஷெட்டிற்கு போனவள்,வேலை பார்த்து கொண்டிருந்தப் பையனைப் பார்த்து திகைத்து விட்டாள். அந்தப்பையன் வேறு யாருமில்லை....சீதம்மாவின் சீமந்தப்புத்திரன். என்னடா பாபு...இங்கெ..வேலை பார்த்துட்டிருக்கே? உன் படிப்பு என்னச்சு? பள்ளிக்கு போகலையா? உன் அம்மாவும் 2 நாளா வேலைக்கு வரலையே....ஏன்..என்னாச்சு..உன்னை வேலைக்கு அனுப்பிட்டு உங்கம்மா வீட்டோட இருக்காளா? "அய்யய்யோ...அப்படியில்லமா...அம்மாவுக்கு 2 நாளாய் சுரம்...அதான்....என்று அசடு வ்ழிந்தான் அந்தச்சிறுவன். நீங்க வண்டியை விட்டுட்டு போங்கம்மா....நான் சரி பண்ணி வூட்டான்ட கொண்டாறேன்....." அனுபவசாலி போல் அவன் பேசவும்,வண்டியை விட்டுட்டு அலுவலகத்திற்கு கிளம்பிய கமலாவின் மனமெங்கும் சீதம்மாவின் மீது கோபம் வந்தது...அவள் வேலைக்கு வராத காரணத்தினால் அல்ல...சின்ன குழந்தையை வேலைக்கு அனுப்பியிருக்காளே என்று... ஒரு முறை..இதெ போல உடம்பு சுகமில்லை என்று மட்டம் போட்ட சீதம்மாவிடம் கமலா, உன் பெண்ணை உதவிக்கு அனுப்புமாறு கேட்க போது, என்னமாய் கோபப்பட்டாள் சீதம்மா? அம்மா நான் தான் படிக்காதவ...வேலை செஞ்சு கஷ்டபடறேன்...என் பொண்ணுமா அப்படியிருக்கணும்? அவ படிச்சு,உங்கள மாதிரி ஆபீசுல பார்க்கணும்மா....என்றவள் பையனை மட்டும் மெக்கானிக் ஷெட்டில் வேலைக்கு விடுவானேன்? ஒரு கண்ணில் வெண்ணெய்....மறு கண்ணில் சுண்ணாம்பு என்று..சீதம்மாவிற்கு ஏன் இந்த மனப்பான்மை?
மறுநாள் வேலைக்கு வந்த சீதம்மாவிடம் கமலா தன் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தாள். ஏன் சீதம்மா,அன்னிக்கு ஒரே நாள் எனக்கு ஒத்தாசைக்கு உன் பொண்ணை வேலைக்கு அனுப்பு கேட்கப்போ ..என்ன எகிறு ....எகிறுனே? ஆனா, இன்னிக்கு என்னடான்னா,உன் பையனை மெக்கானிக் ஷெட்டில வேலைக்கு சேர்த்து விட்டுருக்கே...இது உனக்கே நியாயமா...?
நான் என்னம்மா பண்ணுவேன்? கிறுக்கு பய புள்ளைக்கு படிப்பு வரலையே.நானும் என் சக்திக்கு மீறி ட்யூஷன்லாம் கூட வெச்சுப்பார்த்தும், படிக்காமல் ஊரை சுத்தில்ல வந்தான்.இப்படியே விட்டா சரிப்படாதுன்னு தான் பயலை மெக்கானிக் ஷெட்டில தொழில் கத்துக்கட்டுமேன்னு விட்டேன்.திருடக்கூடாது.பொய் சொல்ல கூடாது...பிச்சை எடுக்ககூடாது.மத்த படி எது வேணா செய்யலாமே.பள்ளிகூடம் போய் படிச்சாதான் அரசாளணும்.பெண் பிள்ளை அடங்கிப் போகணும்ற பித்துகுளிதனமெல்லாம் எனக்கு கிடையாது.பையனுக்கு வராத படிப்பு,பெண்ணுக்கு தன்னால வருது...அதனால அவள படிக்க வைக்கறேன். சீதம்மா சொன்ன பதில் ,கமலாவிற்கு அசர வைத்தது. மறுநாள் எழுந்த கவிதா அம்மா திட்டுவாளே என்ற பயத்துடனே அடுக்களையில் ஒத்தாசை பண்ண வந்த, மகளின் கையில் பால் கோப்பையைக் கொடுத்த அம்மாவின் முகத்தில் புன்னகை. "பரீட்சை வருகிறது இல்ல.போய்ப் படி.அம்மாவுக்கு விடுமுறை நாட்களில் உதவி பண்ணலாம்". தாயின் மனமாற்றத்திற்கு காரணம் புரியாமல் மகள் திகைத்தாள். கவிதாவிற்குத் தெரியுமா? பட்டதாரியான அவளுடைய அம்மா படிக்காத சீதம்மாவிடம் பாடம் கற்றது,அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.அனுபவத்தை மிஞ்சிய ஆசான் உண்டா என்ன?
__________________ JAI SAIRAM S.SaiKripa | 
12th March 2009, 04:10 AM
|  | Gold ILite | | Join Date: Jul 2008 City: Chennai State: Tamil nadu Country: India
Posts: 1,775
Referrals: 1
| | Re: ஆணென்ன ! பெண்ணென்ன!-சிறுகதை
Saikrupa
Romba nalla irukku. Gents chellama valarthal yeppadi future-la veettu velai seivanga?
Parents than avangalai mislead panranga. Kavitha manam mariyadhu nalla irukku. Keep it up.
Andal
__________________ LIFE IS TOO WONDERFUL TO BE SPENT WORRYING. | 
12th March 2009, 05:11 AM
|  | Senior ILite | | Join Date: Oct 2008 City: chennai State: TamilNadu Country: India
Posts: 331
Referrals: 2
| | Re: ஆணென்ன ! பெண்ணென்ன!-சிறுகதை
SaiKripa....
romba nalla irundudu...
namba le namba ponnangala veetu velai seyarathukaga...dan nu thappa nenaikarom..nu romba nalla sollirukeenga...
enaku anda purushan character suthama pidikala...Rant
enga veetla enga amma paiyan ponnunu engala thaniya pirichu valarthade illa....elarume ella velayume seivom.... Andal madam sonadu romba correct.  .
__________________ I have donated my Eyes, Have you? | 
12th March 2009, 06:17 AM
|  | Platinum ILite | | Join Date: Sep 2007 City: Mumbai State: Maharastra Country: India
Posts: 2,595
Referrals: 1
| | Re: ஆணென்ன ! பெண்ணென்ன!-சிறுகதை Quote:
Originally Posted by swathi14 Saikrupa
Romba nalla irukku. Gents chellama valarthal yeppadi future-la veettu velai seivanga?
Parents than avangalai mislead panranga. Kavitha manam mariyadhu nalla irukku. Keep it up.
Andal | Neengal sonnathu mika sari thaan...Andal.
thanks for 1st FB ...........
__________________ JAI SAIRAM S.SaiKripa | 
12th March 2009, 06:18 AM
|  | Platinum ILite | | Join Date: Sep 2007 City: Mumbai State: Maharastra Country: India
Posts: 2,595
Referrals: 1
| | Re: ஆணென்ன ! பெண்ணென்ன!-சிறுகதை Quote:
Originally Posted by manasa_gs SaiKripa....
romba nalla irundudu...
namba le namba ponnangala veetu velai seyarathukaga...dan nu thappa nenaikarom..nu romba nalla sollirukeenga...
enaku anda purushan character suthama pidikala...Rant
enga veetla enga amma paiyan ponnunu engala thaniya pirichu valarthade illa....elarume ella velayume seivom.... Andal madam sonadu romba correct.  . | manasa,
thanks for reading this story.........enga ammavum appadi than ungha ammavai mathiri ..varathargal
__________________ JAI SAIRAM S.SaiKripa | 
12th March 2009, 08:23 AM
|  | Platinum ILite | | Join Date: Mar 2008 City: chennai State: tamilnadu Country: India
Posts: 2,745
Referrals: 3
| | Re: ஆணென்ன ! பெண்ணென்ன!-சிறுகதை dear sai,
melum oru asara vaikkum kadhai unnidam irundhu.padiththu velaikkup pogum penn, padikkadha velaikkariyidam, padam katrukkollum vidam ezhudhi iruppadhu arumai!!!!ettu suraikkai karikku udhavadhu enru purigiradhu. varththaigalil vilayadi irukkirai.
with love
pad.
Last edited by Padmini; 12th March 2009 at 09:37 PM.
| 
13th March 2009, 12:35 AM
|  | Platinum ILite | | Join Date: Sep 2007 City: Mumbai State: Maharastra Country: India
Posts: 2,595
Referrals: 1
| | Re: ஆணென்ன ! பெண்ணென்ன!-சிறுகதை Quote:
Originally Posted by Padmini dear sai,
melum oru asara vaikkum kadhai unnidam irundhu.padiththu velaikkup pogum penn, padikkadha velaikkariyidam, padam katrukkollum vidam ezhudhi iruppadhu arumai!!!!ettu suraikkai karikku udhavadhu enru purigiradhu. varththaigalil vilayadi irukkirai.
with love
pad. | thanks for the lovely Fb....Padmini amma
__________________ JAI SAIRAM S.SaiKripa | 
13th March 2009, 02:59 AM
| | Silver ILite | | Join Date: Mar 2008 City: Bangalore State: Karnataka Country: India
Posts: 991
Referrals: 3
| | Re: ஆணென்ன ! பெண்ணென்ன!-சிறுகதை
ஸாயிகிருபா கதை அருமை. புத்தி புகட்டும் கதை.
Cheers,
Priya Lokesh
| 
14th March 2009, 06:45 AM
|  | Platinum ILite | | Join Date: Sep 2007 City: Mumbai State: Maharastra Country: India
Posts: 2,595
Referrals: 1
| | Re: ஆணென்ன ! பெண்ணென்ன!-சிறுகதை Quote:
Originally Posted by Priesh ஸாயிகிருபா கதை அருமை. புத்தி புகட்டும் கதை.
Cheers,
Priya Lokesh | thanks Priya.....
__________________ JAI SAIRAM S.SaiKripa | 
14th March 2009, 11:53 AM
| | Junior ILite | | Join Date: Sep 2007 City: Doha State: Doha Country: Qatar
Posts: 115
Referrals: 2
| | Re: ஆணென்ன ! பெண்ணென்ன!-சிறுகதை
sai,
Roomba Nalla Irrukku.... vazhthukkal....
keep posting
revathib
|  | | | Thread Tools | | | | Display Modes | Linear Mode | |