1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மீண்டும் மீண்டும் வா

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Aug 4, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    part 1

    காலை மணி 3:30AM
    வத்சலா எழுப்பிக் கொண்டிருந்தார், ஆசை மகளை என்றும் போல.
    "ஏய் உதி... எழுந்திரி டா கண்ணு... இப்பவே எழுந்தா தான் நேரம் சரியா இருக்கும் எல்லாத்துக்கும்"
    "ஐயோ... விடும்மா... என்னை கொஞ்சம் நிம்மதியா தான் தூங்கவிடேன்.. ஒரு காப்பி கலந்து எடுத்துட்டு வா.. அப்பறமா எந்திரிக்குறேன்"
    தலையிலடித்துக்கொண்டார் வத்சலா..."நீ என்னைக்கு தான் திருந்தபோறியோ..."

    அதே அறையில் இன்னொரு மூலையில் உள்ள மெத்தையில் சுகமாய் உறங்கிக்கொண்டிருந்த மஞ்சுவை எழுப்பி " அம்மா மஞ்சு... அவளை கொஞ்சம் எழுப்பேன்.. சுயநினைவே இல்லாமல் தூங்குகிறாள்.. காப்பி கலக்க வேண்டுமாம் மகாராணிக்கு. இன்று என்ன தினம், எங்கிருக்கிறோம் என்பதே இல்லாமல்...." சொல்லிக் கொண்டே அறையை விட்டு வெளியில் வந்தார்.


    எழுப்ப ஆரம்பித்தாள் அவளும்..." டீ உதி.. எழுந்திரிடி... " தோழியின் குரல் கேட்டதும் தூக்க கலக்கத்தில் உளறினாள் "வா மஞ்சு, என்னடி இவ்ளோ நேரத்துல வந்துட்ட...
    இன்னைக்கு எதாவது விசேஷமா? குழிபணியாரம் செய்து கொடுத்துவிட்டாங்களா ஆன்ட்டி?"
    "
    உனக்கு எப்பவும் சாப்பாட்டு ஞாபகமே தானா? ஐயோ... இன்னைக்கு உனக்கு கல்யாணம் "

    போர்த்தியிருந்த போர்வை வீராவேசமாய் இரண்டடி தாவி சென்று விழுந்தது. " ஓ.. கடவுளே, ஆமாமில்ல... இன்னைக்கும் இப்படி தூங்கிட்டேனே..
    இதோ குளிச்சு ரெடி ஆயிடுறேன். அதுக்குள்ளே நீ என் பட்டு புடவை, நகை இன்னும் தேவையான எல்லாத்தையும் எடுத்து வை"

    வெளியில் வந்து கணவனைப் பார்த்ததும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது வத்சலாவிடம் "என்னங்க.. இவ்ளோ அவசரமா வரீங்க? ஏதாவது மறந்து வீட்டுலயே வெச்சுட்டு வந்துடீங்களா? "
    "இல்ல வசு.. அது எல்லாம் இல்ல.. முதல் முறையா நாமே எடுத்து செய்யுற விசேஷம் இல்லையா.. அது தான் ஒரு பரபரப்பு எனக்குள்ள.எல்லாம் நல்லபடியா முடியனும் வசு.. ஆமா உன் பொண்ணு தயாராயிட்டாளா? "
    " அவ உங்களுக்கும் பொண்ணாச்சே.. எல்லாரையும் ஒரு வழி
    பண்ணாம ரெடி ஆவாளா? "
    "எனக்கு உன்ன நினைச்சா பெருமையா இருக்கு வசும்மா.. "
    " ஏங்க? "
    "
    எப்பவும் கணவனுக்கு வலிக்காம கால வாருறியே... அதுக்கு தான்.."
    இருவருமே சிரித்துவிட்டனர்... தூரத்திலிருந்து இவர்களைப் பார்த்த அன்பு மகன் அருகில் வந்தான்...
    " நல்லாருக்கு... பொண்ணுக்கு கல்யாணம்... அப்பா அம்மா ரெண்டு பேரும் கொஞ்சிக்கிட்டு நில்லுங்க இங்க..." முகத்தில் கோபத்திற்கு அறிகுறியே இல்லாது அவனும் இவர்களின் சிரிப்பை ரசித்ததின் அடையாளம் இருந்தது.
    அப்பா சேகரன் சொன்னார் " உனக்கு ஏன்டா பொறாமை?? வேணும் னா நீயும் சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் மனைவியோட சேர்ந்து டூயட் பாடேன்.. நாங்களா தடுக்கிறோம்? "
    "இப்ப இந்த பேச்சு
    ரொம்ப முக்கியமா அப்பா? வாங்க வந்து ஆக வேண்டிய வேலைகளை பாருங்க"

    கல்யாண வீட்டிற்கே உரிய பரபரப்பு, சந்தோசம், கிண்டல், பந்தல், மேளசத்தம்.... எல்லாமுமே இருந்தது அவ்விடத்தில். ஆனால் கல்யாணம் நடைப்பெற போவதில்லை அன்று அங்கே என்பது தெரிந்தால் இவை அனைத்தும் இருக்குமா?

     
    Last edited: Aug 5, 2010
    2 people like this.
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hey daa,

    Title romba nallaa irukku... vidaama padikka meendum meendum vaa solra maathiri :)

    Perellaam nallaa irukku... Ippo solli irukka varai ellaame nallaa irukku...

    Nalla aarambam... Vaazhthukkal Priya....:thumbsup
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Veni... Athu epdi correct ah aajar aaneenga...:) God.. enakku santhosham thaangala.. thanks a lot veni...
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Aachariyame vendaam daa. Yaar irukkaanga-nu nee nenachathu udane en manasila sms-aa vanthiduchu.. naanum en DH kitte sandai pottu system vaangittu vanthutten... :)
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    unga fb first ah varum nu naa ethirpaakave illa... neenga sandaiyellam poda maattinga nu oru news vanthuche...:hide:
     
    Last edited: Aug 5, 2010
  6. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    hey Deva..

    Super starting.. :thumbsup I love Udhi
     
  7. suria

    suria Silver IL'ite

    Messages:
    840
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Female
    starting sema super deva..:thumbsup first partla happiness,friendship,family,marriage ,suspense nu pataya kalapita deva..:thumbsup eager to read the next part..post soon..:thumbsup
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thanks ramya.. Udhi ndrathu short ah koopudra name.. :)
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thank you surya... daily one part post pandren... ok va..:)
     
  10. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    hi deva,
    first i wish you for your story,keep writing,and all the best.
    your title,is giving instruction to all to visit it again and again.
    nice title,character introduction also nice.nice dialogue delivery.
    situation also nice.keep it up.
    [in my MA-hindi,i used to write the story criticism,like this only.i remembered that,while writing this]
     

Share This Page