Murugan song - i loved to share

Discussion in 'Religious places & Spiritual people' started by mscoomar, Jan 21, 2014.

  1. mscoomar

    mscoomar Senior IL'ite

    Messages:
    34
    Likes Received:
    18
    Trophy Points:
    23
    Gender:
    Male
    Hi

    I heard this song, i wish to share it with you all, hope you all too like, attached is the mp3 format of the same.

    ஒரு தரம் சரவணபவ என்று
    உரைப்பவர் உள்ளத்தினில், நினைத்ததெலாம்
    உடனே கைகூடும் என வேதங்கள் மொழியுதே

    உண்மை அறிவான பொருளே பரிவாக உனையே நான்
    அனந்தந்தரம் சரவணபவ என்று சொல்லியும் பாங்கு மிகு காங்கேயா
    அடியனே, எண்ணியது பலியாது இருப்பது ஏனோ

    குருபர, முருகையா, கந்தா, கடம்பா, சொல் குமரா,
    குகா, சண்முகா, கோலாகலா, வெற்றி வடிவேலா
    எனக்கு அருள் கொடுத்து வாழ்-வை முத்தையனே

    அருமலர் குழல் அழகா, தேவர் குஞ்சரி வள்ளி மணவனே
    என் துணைவனே வண்ண மயில் வாகனா
    பொன்னேரகப்பதியில் வளர் சுவாமி நாதா குருவே
    சுவாமி நாதா குருவே சுவாமி நாதா குருவே

    ஓர் ஆறு முகம் ஆட, இர் ஆறு புயம் ஆட, ஓங்கு வடிவேலும் ஆட,
    உச்சித குண்டலம் கட்சிநோடு முடியாட, ஒலியன சுட்டி ஆட,
    பாரால தண்டயோடு பாதச்சிலம்பாட பணிந்திடும் பக்தர் ஆட,
    பின்னிருகரம் ஆட, அணிந்த பூஷணம் ஆட, பவள வெண்குடைகள் ஆட,

    கோவான மயில் ஆட, குவச கோழியும் ஆட, துலங்கு நீ ஆவி ஆட,
    தொண்டர்கள் முதல்லான சண்டிகேஸ்வரர் ஆட, கொண்ட நவவீரர் ஆட,
    தளராத தவமுனிவர் தானாட தமியனே முன்பு வருவாய்,
    தக தக என மயிலேறி திருநடனம் ஆடி வரும் தணிகசல கடவுளே
    தணிகசல கடவுளே தணிகசல கடவுளே

    பேராதவிக்கும் அடியவர் தம், பிறப்பை ஒழித்து,
    பெருவாழ்வும், பேரும் கொடுக்க வரும், பிள்ளை பெருமனெனும்,
    பேரால, நேரா நிருதர் குலகலாக, சேவல் கோடியாய்,
    திருசெந்தூர் தேவா, தேவர் சிறைமீட்ட செல்வா

    என்று உன் திருமுகத்தை பாராமகிழ்ந்து, முளைதாயர் பரவி புகழ்ந்து
    திருகுடன் அப்பா வா வா என்று உன்னை போற்றி பரிந்து மகிழ்ந்து
    வரவழைத்தல் வாராதிருக்க வழக்குண்டோ, வடிவேல் முருகா வருகவே
    வளரும் கலப குரும்பை முளை வள்ளி கணவா வருகவே
    வள்ளி கணவா வருகவே வள்ளி கணவா வருகவே

    உலகெலாம் போற்றிடும் ஓர் ஆறு முகம் உடைய உக்ர கம்பிர முருகா,
    உன்னையே கதிஎன்று நம்பினனேன் இதுவரையில்
    உண்மையாய் பாரு முருகா, உண்மையாய் பாரு முருகா,
    உலகெலாம் போற்றிடும் ஓர் ஆறு முகம் உடைய உக்ர கம்பிர முருகா

    கல கல என சிலம்பொலி ஓசைகள் முழங்கிட கடுகிவா ஜோதி முருகா
    கமண்டல ருத்ரச காவி அலங்கரனே
    கார்த்திகை தீப முருகா, கார்த்திகை தீப முருகா
    உலகெலாம் போற்றிடும் ஓர் ஆறு முகம் உடைய உக்ர கம்பிர முருகா

    மல மல மயில்மீது ஏறி என் முன்பு வா வடிவேல் தரித்த முருகா
    மங்கள கல்யாண குண வராத கம்பிரனே
    வரம் அருள வாரும் முருகா, வரம் அருள வாரும் முருகா
    உலகெலாம் போற்றிடும் ஓர் ஆறு முகம் உடைய உக்ர கம்பிர முருகா,

    பல பல என பிரகாச இரத்தின மகுடம் புனையும் பவள திருமேனி அழகா
    பட்சமுடன் இச்சை வைபோகம் அருள் கதிர்காம பதியில் வாழ் வடிவேலனே
    கதிர்காம பதியில் வாழ் வடிவேலனே, கதிர்காம பதியில் வாழ் வடிவேலனே

    பொன்னே வருக, பொன்னை அரைஞான் பூட்ட வருக,
    திருசதங்கை புனைய வருக, மணிபதக்கம் பூன வருக, தவழ்ந்தோடி முன்னே வருக,
    செவிலியர் தன் முகத்தோடு அனைத்து சீராட்டி முத்தம் இடுவதற்கு வருக

    எதிர் மொழிகள் மழலை சொல வருக,
    தன்னேர் இல்லா முதல் திலகம் தரிக்க வருக
    விழியினில் மை சாற்ற வருக, மேலகதனே வருக,
    தேவர் தொழும் மன்னே வருக, மமாலின் மருகா வருக வருகவே,

    வளம்சேர் பழனி சிவகிரி வாழ் வடிவேல் முருகா வருகவே,
    வளம்சேர் பழனி சிவகிரி வாழ் வடிவேல் முருகா வருகவே.

    Vazhga Vallamudan
    mscoomar
     

    Attached Files:

    Loading...

  2. kingking

    kingking New IL'ite

    Messages:
    1
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Thank you SIR

    I'm searching this song for years. This is the song my Grandfather used to sing when I was in childhood days and now my father sings but I could not find full version. No I found it and I can transfer to my next generations to sing it.

    Ur AWESOMEness
     

Share This Page