1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அங்காடி - புதுக் கவிதை வடிவம்

Discussion in 'Regional Poetry' started by crvenkatesh, May 29, 2015.

  1. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    அங்காடி


    விலைவாசி ஏறிவிட்டதென
    யார் சொன்னது?


    மனிதனின் மனசாட்சி
    மிகக் குறைந்த விலையில்
    விற்கப் படுகிறது இங்கு


    காசுக்காக கற்பு
    கை மாறுகிறது
    அது சரி
    கற்பு இங்கிருந்தால் என்ன
    அங்கிருந்தால் என்ன
    கால் வயிற்றுக்காவது
    கஞ்சி கிடைத்தால் நன்று


    நாணயம் குறைந்து விட்டது என்று
    நெஞ்சு பதறுகிறவர்களே
    அரசாங்கமே அதன்
    அளவைக் குறைத்துவிட்டபின்
    மக்களிடம் அதைப் பெரிய அளவில்
    எதிர்பார்ப்பதில் என்ன நியாயம்?


    சரி மாறிவரும் உலகில்
    மாறாதிருப்பது இது தான் என்று
    திரும்பிப் பார்த்தால்
    தாய்மையும்
    தூக்குப் போட்டுக்கொண்டு விட்டது


    குழந்தையைக் குப்பைத் தொட்டியில்
    தூக்கிப் போட்டு விட்டது


    மனிதனின் மனசாட்சி
    மிகக் குறைந்த விலையில்
    விற்கப் படுகிறது இங்கு


    வீயார்
     
    2 people like this.
    Loading...

  2. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @crvenkatesh,

    In this fast world everything is money oriented and all are weighed by money.So,rest all like our trust,inner soul etc are going silent.

    Good one.
     
    1 person likes this.
  3. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male

Share This Page