1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ருத்ர தாண்டவம் (ஆசிரியத்துறை)

Discussion in 'Regional Poetry' started by crvenkatesh, May 27, 2015.

  1. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    ருத்ர தாண்டவம் (ஆசிரியத்துறை)


    காற்றிலே குழலாட கண்ணிலே கனலாட
    கையிலாயன் ஆடும் நடனம்
    காற்றுடன் பேய்பூதம் கருப்பு பிசாசமும்
    கண்டுகுலை நடுங்கும் நடனம்


    மாற்றியே வைத்ததலை மத்தள வயிறனும்
    மயிலேறும் ஆறு முகனும்
    மறுபாதி ஆனஉமை அன்னையுமே கண்டு
    மருள்கின்ற ருத்ர நடனம்


    ஏற்றமிகு உமைபாகன் ஒருபாதம் தனைதூக்கி
    ஓடியே சாடும் நடனம்
    ஒதமிகு கடல்சினக்கும் ஊழிக் காலமதில்
    அவனாடும் இறுதி நடனம்


    பாட்டிலே அதைவைக்க பதறுதே என்நெஞ்சு
    பாடவொண் ணாத நடனம்
    பாட்டினையும் நீ யாத்து பாலனையும் நீ காத்து
    பரமனே அருள் புரியவா


    வீயார்
     
    1 person likes this.
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    மிக நன்றாக இருந்தது வெங்கடேஷ்! வாழ்த்துக்கள்!

    கொல்லும் முகத்தின் புன்சிரிப்பும்,
    கொள்ளும் எவரது மனதினையும்!
    வெல்லும் அவரது பேரன்பும்
    தள்ளும் ஈடாய் வரும் எதையும்!

    சொல்லும், அதன் பொருளும் மீறி
    தொல்பரமர் அவரது கழல் நாடி,
    கல்லாதோர் நாமவரை வேண்டி
    வில்லாளர் புகழைப் பாடுவமே!

    அறியாமை யானையின் தோல் போர்த்தி,
    பொய்யறிவெனும் புலி எளிதிற் கிழித்து
    மெய்யதில் பாதியை துணைக்கே நல்கி,
    உய்பவர் அருளே என்றும் நம் காப்பு!
     
    1 person likes this.
  3. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    நன்றி ஸ்ரீநிவாசன்
     
    1 person likes this.

Share This Page