1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அவ்வளவே!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, May 26, 2015.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    "இத்தனை பெரிதா?" என கண்டவையெல்லாம்
    திகைப்பும், சற்று பயமும் கொண்டிட,
    அதுவோ ஒரு பெருமிதத்துடன் செல்வம்
    திடீரென அடைந்த ஏழை போல் மிதந்திட,

    சற்றே தொலைவில் நீருள் மூழ்கி
    சிப்பிகளை முடியும் வரை அள்ளி
    எடுத்துச் சென்ற பரதவர் சிலரும்,
    அதனைக் கண்டு சற்றே மிரண்டும்

    தள்ளியே சென்றதில் இன்னும் பருத்து,
    தனையே குழிக்குள் தள்ளியதன் செவிக்கு
    தணிவாய் ஒரு குரல் ஒலித்திட உறுத்து,
    தலையசைப்பில் 'இல்லை' என்றது மறுத்து.

    கேள்வியோ இது தான்! "இதுவே உன் நேரம்!
    எங்கு சென்றிடுவது உந்தன் விருப்பம்?
    கோயிலில் நற்பசுவின் பாலும் கொண்டிடும்,
    ஆண்டவரை நிதமும் முழுக்காட்டும்

    அப்பேறும் வேண்டுமா?" என்பதற்கே,
    மறுத்தது மீண்டும் பலவற்றுக்கே
    மறுத்தே தனித்தே பன்னெடுங்காலம்
    கழிந்தே இறுதியில் ஒரு மழைக்காலம்

    மேல் வந்து கரை ஒதுங்கி நின்றதுவாம்!
    ஒருவர் கை மேல் பட சிலிர்த்ததுவாம்!
    தானிருக்கும் அவ்விடமும் எதுவென்று,
    கண்டதும் நொந்தது கப்பரையாஞ் சங்கு!

    குறிப்பு: இன்று காலையில் ஒரு பிச்சைக்காரர் கையில் கண்ட பெருஞ்சங்கைக் கண்டு வந்த கற்பனை இது!
     
    5 people like this.
    Loading...

  2. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    வித்தியாசமான கற்பனை rgs. நன்று.
     
    1 person likes this.
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுக்கும், இப்பத்தியை விரும்பியதற்கும் நன்றி வெங்கடேஷ்!
     
    1 person likes this.
  4. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @rgsrinivasan,

    நன்று.நல்லத்தொரு கற்பனை.
     
    1 person likes this.
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your appreciation and like, @Harini73.
    Actually, I was completely immersed in the subtext of this post which propelled me to write this. -rgs
     
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Aandik kolaththile vandhavan Aandavanai irukkalame ? Andha Sangirku adhu theriyaamal nondhirukkalaame ?

    Regards,

    Pavithra
     
    3 people like this.
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் கருத்துக்கும், அதில் கண்ட கருணைக்கும் நன்றி பவித்ரா.

    தானெனத் தருக்கி நிற்கும் எதுவும்,
    தாழ்வெனும் நிலையில் என்றும் இருக்கும்.
    அச்சங்கென மனதைக் கொண்டிட புரியும்
    பங்கயத்தாரின் கை சேராமல் தவிக்கும்!
     
    1 person likes this.

Share This Page