1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வீடுபேறு !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, May 25, 2015.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    இம்மையில் இன்னல் கூட்டும்
    ஆணவம் கன்மம் மாயை
    மும்மலம் நீக்கக் கிட்டும்
    ஆண்டவன் வீடுபேறு !

    அறம் பொருளின்பம் யாவும்
    துய்த்துள அமைதி காணும்
    திறம் கொண்டத் தூயவர்க்கே
    வாய்த்திடும் வீடுபேறு !

    பொறுமையுள் பூமி போல
    பணிவுடன் கடமை தீர்த்துச்
    சிறுமைகள் நீக்கி உயரக்
    கனிந்திடும் வீடுபேறு!

    பெற்றிடும் கல்வி ஞானம்
    மற்றுள உலக இன்பப்
    பற்றெலாம் அற்ற நிலையில்
    உற்றிடும் வீடுபேறு !

    நயமுடன் கருணை காட்டி
    நலிந்தவர்க்கு அருளிச் செய்யும்
    பயனுள்ள வாழ்க்கை வாழ
    பொலிந்திடும் வீடுபேறு !

    வையத்து உயிர்கள் எல்லாம்
    பரமனின் வடிவே என்று
    ஐயமற உணர வாய்க்கும்
    வரமன்றோ வீடுபேறு !



    Regards

    Pavithra
     
    8 people like this.
  2. Poetlatha

    Poetlatha Platinum IL'ite

    Messages:
    1,058
    Likes Received:
    1,944
    Trophy Points:
    290
    Gender:
    Female
    nice poem, what is the meaning of the title? The way its written and the style is nice. @ pavitra i would appreciate a little translation of the title and the theme.
     
    1 person likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female

    Poetlatha, the title and the theme of this poem is about Moksha, liberation of the soul

    Regards,

    Pavithra
     
    2 people like this.
  4. Poetlatha

    Poetlatha Platinum IL'ite

    Messages:
    1,058
    Likes Received:
    1,944
    Trophy Points:
    290
    Gender:
    Female
    thank-you dear, i thought it was related to the abode of God, this word was very new to me, i appreciate your prompt clarification! EXCELLENT Poem!
     
    1 person likes this.
  5. VanithaSudhir

    VanithaSudhir Platinum IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    3,977
    Trophy Points:
    283
    Gender:
    Female
    As usual awesome Pavi..

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார் !! :)
     
    3 people like this.
  6. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
    [​IMG]
    -
    முக்தி – வீடு பேறு தான் முடிவான லட்சியம்
    -
    தெய்வ நிலைக்கு முன்னேறிய மனிதன்,
    எந்த ஒரு மூலப் பொருளிடமிருந்து
    வந்தானோ. அந்தப் பரம்பொருளிடம் மீண்டும்
    சென்று ஒடுங்குவதே முக்தி!
    அதுவே மோட்சம்!
    அதுவே வீடுபேறு. அதுவே ஆன்ம விடுதலை!
    -
    அந்த ஒரு லட்சியத்தை மையமாக வைத்தே
    பரம்பொருளான ஆதிபராசக்தி இந்த உலக
    நாடகத்தைத் தொடர்ந்து நடத்திய படி இருக்கிறாள்.
    -
    இந்த உண்மையைப் புரிந்து கொண்ட ஞானிகள்,
    யோகிகள், சித்தர்கள் எல்லோரும் நம்மைப் போல
    ஆசாபாசங்கட்கு ஆட்படாமல் தெய்வ நிலைக்கு
    முன்னேறிச் செல்கிறார்கள்
    -
    ---------
     
    4 people like this.
  7. girvani

    girvani Platinum IL'ite

    Messages:
    1,020
    Likes Received:
    2,914
    Trophy Points:
    283
    Gender:
    Female
    pavithra, very nice, nicely constructed verses
     
    2 people like this.
  8. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @PavithraS,

    :clapஅருமை அருமை
     
    2 people like this.
  9. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    @PavithraS,

    அழகியச் சந்தம் கொண்டு
    அருந்தமிழ் கவிதை செய்தாய்
    பழுதில்லாக் கருத்தை வைத்து
    பாடலை நீயும் நெய்தாய்


    இதுபோன்ற கவிகள் செய்ய
    உன்போன்ற கவிகள் இருக்க
    விதிகளை வென்று தமிழும்
    வாழ்வாங்கு வாழும் இங்கே
     
    3 people like this.
  10. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Super Pavithra ...
     
    1 person likes this.

Share This Page