1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஏன் அழுதான்?

Discussion in 'Regional Poetry' started by crvenkatesh, May 24, 2015.

  1. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    ஏன் அழுதான்?

    இலைகளினூடே சில்லறையாய்
    இறைந்திருந்த வெய்யில்.
    மரத்தின் நிழல்
    மனதுக்கும் உடலுக்கும் இதம்.

    காலையில் சாப்பிடாத வயிறு
    கண்களைத் தாலாட்ட
    வந்த கனவிலும் பசி.

    ஏதோ ஒரு கை
    (பார்த்தேயிராத அம்மாவுடையதோ?)
    ஒரு கவளம் சோறு
    ஊட்ட யத்தனித்தபோது
    உதை விழுந்தது.

    வலியில் துடித்து விழித்தன கண்கள்.

    "மாட்டுக்குத் தண்ணி வக்காம
    தூக்கம் என்னலே சவமே? த்தூ..."

    மேலே வழிந்த எச்சிலில்
    பன்னீர் புகையிலை வாசம்.

    அழுக்குச் சட்டையால்
    அவமானத்தைத் துடைத்துக் கொண்டு
    மாட்டுக்குத் தண்ணி வைக்கையில்
    அது சிரித்த மாதிரி இருந்தது.

    திரும்ப யத்தனித்தக் கால்கள்
    தனிமையை உணர்ந்து
    தான் வாங்கிய உதையை
    மாட்டுக்குத் தானம் செய்தன.

    "சிரிப்பால சிரிச்ச?"

    மாடு அழுதது.
    எதற்கென்று தெரியாமல்
    அவனும் அழுதான்.

    Venkatesh Radhakrishnan
     
    7 people like this.
    Loading...

  2. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
    [​IMG]
    -
    கவிதை நன்று...
    -
    ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான்?
    நாவலை நினைவுக்கு கொண்டு வந்தது...
    -
     
    3 people like this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Kodidhu kodidhu varumai kodidhu, adhaninum kodidhu ilamaiyil varumai - avvaiyin mozhi . ungal kavidhaiyil adhai velippaduththiyirukkum vidhathil padippavar nenjilum udhai vizhum, avaravar manaththilum kanneer perugum !

    Nidharsanaththin aanma padhivu !

    Regards,
    Pavithra
     
    3 people like this.
  4. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @crvenkatesh,

    நிதர்சனம் - முகத்தில் அறைகிறது.வருமைக்காரனமாக குழத்தை பருவத்தை தொலைத்த குழத்தை தொழிலாளி
     
    3 people like this.

Share This Page