1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இராமகதையில் அனுமன் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, May 23, 2015.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Attention please : This is going to be a long post and religious as well not exactly a poem !! Please excuse me , readers !



    ஆஞ்சநேயராம் ,வாயுபுத்ரராம், ருத்ர அம்சராம்,நற்றவராம் !
    சூரியதேவரை கனியென்றெண்ணியே வாயில் விழுங்கிடப் பாய்ந்தவராம் !

    தேவர் பலரிடம் வரங்கள் பெற்றுயர் கல்வி கேள்விகளில் சிறந்தவராம் !
    சுக்ரீவனாம் வாலி தம்பியின் வானர அரசவை அமைச்சராம் !

    இராம இலக்குவர்கள் தேடிவருகையில் சோதனை செய்த அறிஞராம் !
    அவர்கள் விளம்பிய மொழியின் மூலமவர் பரம்பொருளென உணர்ந்தவராம் !

    இராம சுக்ரீவ நட்பு மலரவே நல்ல விதையும் அன்று விதைத்தவராம் !
    சீதைத் தேடியே சென்ற வீரர்களில் தெற்கு திசை நோக்கிச் சென்றவராம் !

    ஆழக்கடலையே கடக்க அஞ்சிய வானரர் கலக்கம் களைந்தவராம் !
    நூறு யோஜனை அகலக்கடலையே குட்டையென்று தான் கடந்தவராம் !

    வழியில் தோன்றிய தடங்கல் யாவையும் மதியினுதவியால் வென்றவராம் !
    இலங்கைக் காவலாம் இலங்கினியவள் கலங்கி விழும்படிச் செய்தவராம் !

    இரவுவேளை பிறர் அறிந்திடாமலே ஒற்று வேலையும் பார்த்தவராம் !
    அசோகவனத்திலே சோகவடிவாக சீதாதேவியைக் கண்டவராம் !

    இராமனின்னுயிர் தேவிதன்னுயிர் நீக்க முயலுகையில் தடுத்தவராம் !
    இராமகதையை அவள் செவியில் செப்பியவள் நம்பிக்கையும் பெற்றவராம் !

    இராமனடையாள மோதிரந்தன்னை சீதையிடந்தான் அளித்தவராம் !
    அவளினடையாளம் இராமனுமறிய சூடாமணியைப் பெற்றவராம் !

    பத்துத்தலையனுக்கு அச்சமூட்டும்படி அஷயகுமாரனை வதைத்தவராம் !
    பிரம்மாஸ்திரத்தைப் பணிந்துயேற்று அவர் வாலில் வைத்தத் தீப்
    பொறுத்தவராம் !

    இராமதூதராய் இலங்கை அவையிலே சீதையைத் திருப்பிடச் சொன்னவராம் !
    அரக்கனவனது மறுப்பைச் சொன்னதும் இலங்கையழிய தீ வைத்தவராம் !

    திரும்பித்தான் சென்று இராமன் மனங்குளிர 'கண்டேன் சீதையை' என்றவராம் !
    கடலில் பாலமது செய்து வானரர்கள் இலங்கைச் சேர வழி வகுத்தவராம் !

    அடைக்கலமென்று வந்த வீடணனை இராமன் ஏற்கவும் சொன்னவராம் !
    யுத்தமூண்ட பின்னர் தமது வீரத்திறன் யாவும் காட்டிப்போர் புரிந்தவராம் !

    கும்பகர்ணனென்னும் இராவணன் அருமைத் தம்பியைப் போரிலே வதைத்தவராம் !
    நாகபாணத்தின் விஷத்தையறுக்கவே சஞ்சீவி மலையைக் கொணர்ந்தவராம் !

    மாயப்போர் புரிந்த இந்திரஜித்தை இலக்குவண் கொல்லத் துணை செய்தவராம் !
    போரில் வென்றப்பின் இராமன் சீதையுடன் திரும்பும் செய்தியைச் சேர்த்தவராம் !

    தீயில் விழுதந்துயிர் மாய்க்கவெண்ணிய பரதனாருயிரும் காத்தவராம் !
    இராமதொண்டுதான் வாழ்வினர்த்தமென அறிந்து அவன் பணி செய்தவராம் !

    இராம பக்தர்கள் உற்றத்துயர் துடைக்க என்றும் துரிதமாய் வருபவராம்
    இராமகதை எந்த இடத்திலுரைத்தாலும் தாமும் வந்தங்கு இரசிப்பவராம் !

    ஸ்ரீராமபக்த ஹனுமார் , அவர் நாமும் வாழ அருள்வார் !
    தன் நாமம் சொல்லுபவரின் பயங்கள் போக்கி விடுவார் ! (2)


    P.S This is in memory of my Great Grand Father who was a Tamil Scholar and poet. He wrote "Dhinasari Paaraayana Raamaayana Saaram " , just 108 lines poem covering whole Raamaayanaa story !

    Kindly forgive if there are any mistakes or omissions...Thank you !

    Regards,

    Pavithra





     
    7 people like this.
    Loading...

  2. VanithaSudhir

    VanithaSudhir Platinum IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    3,977
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Superb Pavi...

    "anjile onru petraan, anjile ondrai thaavi
    anjile onraaraaga aariyarkaaga yegi
    anjile onru petra anangai kandayalaar ooril
    anjile ondrai vaithai avan emmai alithu kaappaan"

    Jai Hanuman..Jai Jai SriRam
     
    3 people like this.
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Wonderful Pavi.
     
    1 person likes this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @VanithaSudhir , @jskls , Thank You so much , my Patrons ! :thankyou2:

    Regards,

    Pavithra
     
    2 people like this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா சனிக்கிழமை காலையில் அனுமன் தரிசனம் மனதுக்கு நிறைவாக இருந்தது .
     
    1 person likes this.
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female

    I too intentionally posted for India Saturday , Periamma. Thank you for your appreciation

    Respects & Regards,

    Pavithra
     
  7. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Great to know about your great grandfather. Is Dhinasari Paarayaana RamasYana Saaram available as a book
     
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thanks for asking , jskls.

    We have only a limited number of printed books at our home back in India. He was an unsung hero. His works did not enjoy the respect as they should have got. He never intended to boast his skills as well.

    Apart from Dhinasari...He also penned "Ilanchei Irubadhu " 20 venba on Lord Muruga, "Nalla Naayagi Naanmani maalai " on Goddess Sathgunaambikai at Sri Pasupatheswarar temple, Thiruvetkalam, Annamalai nagar Chidambaram - This has poem verses in ,Venba, Aasiriyappa, Kalippa, Viruththappa , all one by one..

    I feel sad for not having seen the man alive...


    Regards,

    Pavithra
     
    5 people like this.
  9. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Wow so many literary works. Great to know. Keep writing more.
     
    1 person likes this.
  10. VanithaSudhir

    VanithaSudhir Platinum IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    3,977
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Pavi.. If you can scan the 108 verses of Dhinasari Ramayaan and post for us.. it will benefit everyone.

    Btwn, no wonder your poetry is a class apart. The scholarly blood runs in the veins. Blessed ! :)
     
    2 people like this.

Share This Page