1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

யாரிந்தக் கம்பநாடன் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, May 21, 2015.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தேரழுந்தூர் எனும் தஞ்சை சேர் பகுதி தான்
    பார்புகழ்ந்தேத்திடும் புலவனாம் கம்பன் ஊர் !
    பெருவளம் மிக்க அச்சோழ தேசத்திலே வாணி
    அருள்வளம் கைப்பெற்று வாழ்ந்தவன் கம்பநாடன் !

    வெண்ணை நல்லூரில் வாழ் சடையப்ப வள்ளலும்
    தன்னை ஆதரித்ததால் தான் கண்ட காவியம்
    தன்னிலே இராமன் முடிசூடிடும் காட்சியில்
    நன்றியும் காட்டினான் நயத்துடன் கம்பநாடன் !

    வடமொழிப் புலமையும் தமிழிலே திறமையும்
    காட்டியே காவியம் படைத்துப் பெரும் பாக்கியம்
    கூட்டியப் பெருமகன், தமிழுக்கு அணிகலம்
    பூட்டியத் துணிவுளக் கவிஞனாம் கம்பநாடன் !

    பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட நமக்காக
    உறக்கத்தில் விழிப்போடு உலகத்தைக் காக்கின்ற
    பாற்கடல் தாலாட்டும் பரமன் அவதாரத்தை
    சொற்கடல் நீராட்டி சிறப்பித்தான் கம்பநாடன் !

    அரங்கத்து வள்ளலாம் அரியவன் சபையிலே,
    சிரம் தாழ்த்திச் சிறப்பித்த சான்றோர் முன்னிலையிலே,
    வரம் பெற்று வந்தவன் தானிவன் எனத்
    தெரியும்படி அரங்கேற்றினான் காவியம் கம்பநாடன் !

    வால்மீகி முனிவரின் இராமகதை மூலத்தைத்
    தோல்நீக்கித் திருத்திய பலாவினது சுவையுடன்
    மாலவனின் அன்னையிவன் என்றுத் தோன்றுமாப்
    போல் ,கனிவுடன் கடவுள் கதை சொன்னவன் கம்பநாடன்
    !




    Regards

    Pavithra

     
    6 people like this.
  2. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Ennadhu? Seriyapochu!! faintingsmiley Brb to comment later! Onnumey vilangala right now... :coffee
     
  3. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    kamban veettu kattuth thari paadumo illayo theriyala
    aanaa pavithra arumayaa paadittaanga kamban pukazh

    nice one P'
     
    3 people like this.
  4. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    கொம்புத்தேன் கற்கண்டு கன்னல்பால் என்றினுக்கும்
    கம்பநாடன் மீதுன் கவி


    ஒரு விகற்பக் குறள் வெண்பா
    வெங்கடேஷ்
     
    5 people like this.
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    @kaniths use agarathi.com. Pavi Enna solla arumai only word.
     
    2 people like this.
  6. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
    [​IMG]
    -
    :hatsoff
     
    1 person likes this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அழியா காவியம் படைத்த கம்பனது புகழ் பாடும் பெண்கவி பவித்ரா ஓங்குக உன் புகழ் .
     
    3 people like this.
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @periamma, @jskls , @ayyasamy1944, (Kavidhai ezhudhum podhey neenga adhukkup podappora kamba uruvaththai manasula ninaichchen, ayya samy avargaley ! , mikka nandri !) @GoogleGlass, @kaniths Thank you all for patroning my poems and giving encouraging FBs...I am moved .:exactly::thankyou2:



    @crvenkatesh Wow ! Thank you for the Kural Venba ,my favorite paa vagai , which is excellent , Kambar varalaaru deserves it but I do not know whether my poem deserves it.. I am honored.


    Regards,

    Pavithra
     
    1 person likes this.
  9. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    @PavithraS

    தேனிலே தோய்த்தத் தீந்தமிழ் சொற்களால்
    யாவரும் போற்றிட ஒருகவி தந்தனை
    வளமுடன் வாழ்கநீ வரமெலாம் சூழவே
    அளவிலாக் கவிமழை இங்குநீ பொழிகவே


    நிலைமண்டில ஆசிரியப்பா
    வீயார்
     
    5 people like this.
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female

    OMG !!!mademydaysmiley


    I do not know what to say, VR ! I bow to thy Thamizh ! I am boosted by your wishes !

    Hope the Sacred Mother Thamizh bless us all !


    Regards,

    Pavithra
     
    2 people like this.

Share This Page