1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வென்றிடுவாய்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, May 6, 2015.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    தொடும் காரியம் யாவிலும் தோல்வியையே
    அடைந்தாலும் மனமே கலங்காதே!
    பெருஞ்சாதனையாளர் வாழ்வினையே
    நீ பார்த்தால் அவையும் வெற்றியையே

    அத்தனை எளிதில் அடைந்ததில்லை
    என்பது உனக்குப் புரிந்து விடும்.
    எத்தனை வரினும் சோர்வதில்லை
    எனும் உறுதியைக் கொண்டிடவும் வேண்டும்.

    எறும்பும் அத்தனை எளிதாக
    தன் முயற்சியை விடுவதுமில்லை.
    நீ மட்டும் ஏன் உடனடியாக
    பின்வாங்குகிறாய்? இது சரியில்லை.

    ஏன் தோற்கின்றாய்? அதை எண்ணிப் பார்!
    உன் தவறுகளை நீ திருத்திக் கொள்!
    தெரியாதவற்றை சொல்லித் தருவார்
    எவரெனக் கண்டு, நீ கேட்டுக் கொள்!

    எப்போதும் வென்றவர் யாருண்டு?
    இப்போதே எழுந்திரு! தயங்காதே!
    நல்லோரின் துணையைக் கைக்கொண்டு
    நிச்சயம் வென்றிடுவாய்! கலங்காதே!
     
    4 people like this.
  2. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
    கருத்தும் கவிதை நடையும் அருமை...:hatsoff
    -

    நாம் கூறும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் சக்தி உண்டு
    -
    உன்னால் முடியும், பரவாயில்லை, அடுத்தமுறை வென்றிடுவாய்,
    தொடர்ந்து முயற்சி செய், நிச்சயம் நீ வெற்றி பெருவாய்,என்பன
    போன்ற வார்த்தைகள் மனதிற்குள் ஒரு உந்துதலையும்,
    வைராக்கியத்தையும் கொடுக்கும்...
    -
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுக்கு நன்றி அய்யாசாமி. நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. -rgs
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கலக்கம் இன்றி இலக்கை நோக்கி சென்றால் வெற்றி நிச்சயம் .நன்று நன்று
     
    1 person likes this.
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your appreciation Periamma. -rgs
     

Share This Page