1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

விசித்திரம்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, May 4, 2015.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    விழி மூடி இருக்கையில் உன் நினைவில்
    உள்ளே ததும்பி நீர் வழிந்திருக்கும்!
    உன் குரலையேனும் ஒரு பொழுதில்
    கேளேனோ? எனும் ஏக்கம் தலைதூக்கும்.

    ஏதோ ஒரு உள்ளுணர்வு உனக்குள்
    நாம் சேர வாய்ப்பில்லை என்றே
    வெகுநாள் முன்பே தெரிந்தது என்றாய்.
    எனக்கோ இன்னும் அது தெரியவில்லை.

    எங்கிருக்கிறாய் இப்போது?
    எப்படி இருக்கிறது வாழ்க்கை?
    குழந்தைகள் எத்தனை? இப்போதும்
    நூல்கள் வாங்கிடும் அவ்வாடிக்கை

    தொடர்கிறதா? இல்லை அது கூட
    எனைப் போல் எங்கேயோ ஒரு ஓரம்
    தொலைந்தே போனதா? நாள் ஓட
    தொலையும் நாட்காட்டித் தாள் போலும்?

    ஒரு மனது உனைப் பார்த்திட ஏங்கும்.
    பிறிதோ "வேண்டாமே! என மன்றாடும்.
    நீ நன்றாய் இருப்பாய் எங்கேனும்.
    என் நிலை அன்றே போல் தான் இன்றும்!

    சிலரை சந்திப்பதில் ஒரு இன்பம்.
    சிலரைத் தவிர்ப்பதிலும் அது உண்டு.
    சிலரே இரண்டிலுமாய் தள்ளாடும்
    நிலைக்காட்படுவார். நான் அதில் உண்டு!
     
    3 people like this.
  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Rgs அனைத்து கவிதைகளும் மிக அருமை .உங்கள் கவிதைகளை படிக்கும் போது அந்த காட்சி கண் முன்னே தெரிகிறது .இதுவே உண்மை கவிஞனின் அடையாளம்
     
    3 people like this.
  3. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @rgsrinivasan,

    No words to express my feeling after reading this. Somehow you have written poems regarding separation very recently.
     
    1 person likes this.
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுக்கும், பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி பெரியம்மா.
    தற்போது என் தமிழ் கவிதைகள் கவனம் பெறுவதால் நிறைய எழுத முயல்கிறேன். -ஸ்ரீ
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    There are a few feelings that can never be fully expressed, no matter how many people write numerous times on that, Harini. Longing and separation come under that. I wrote many on these in both english and tamil yet, feel that I have many to write on this again. Thanks for your appreciation and feedback. Just to clarify, a verse reflects the state of the writer at the point when it is written. -rgs
     
    1 person likes this.

Share This Page