1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வருவாளா?

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Sep 29, 2014.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    அவள் பெயரைச் சொல்லி அவன் அழைத்ததில்லை!
    நீ உண்டாயா? என ஒரு நாளும் வினவியதுமில்லை!
    அவள் அவனை இதற்கு முன்னர் தவிக்க விட்டதில்லை!
    தன் சோகத்தை பிறரிடம் பகிர்ந்து கொண்டதுமில்லை!

    ஒரு நாள் அவன் திரும்பி வந்த பொழுது அவளில்லை.
    எதிர்வீட்டில் அவன் இது வரை சாவி வாங்கியதில்லை!
    "என்ன இது?", என நினைத்த படி அவன் அவளைத் திட்டி
    உள்நுழைந்தான்; உடை மாற்றி தன் முகத்தைக் கழுவி!

    நீண்டது அந்த இரவு! பெருகியது அவன் பயமும்!
    சென்றவளோ மீண்டும் அங்கு திரும்பவேயில்லை!
    திட்டியவன் தானழும் நிலைக்குச் சென்று விட்டான்!
    திரும்பிடுவாள் எனும் நினைவும் தேய்ந்து விடக் கண்டான்!

    அடுக்களைக்குள் நுழைந்தான்! அங்கு மூடி வைத்திருந்த
    இரவுணவைக் கண்டான். தன விழி பெருகி நின்றான்!
    அவள் பெயரைச் சொல்லி சொல்லி அவன் அன்று உண்டான்!
    இன்று வரை அவள் வருவாள் என்றே இருக்கின்றான்!
     
  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    யார் அந்த அன்னபூரணி ..அருகில் இருக்கும் போது அருமை உணராமல் பின் அழுது என்ன பயன்
     
    2 people like this.
  3. kalpavriksham

    kalpavriksham Gold IL'ite

    Messages:
    884
    Likes Received:
    473
    Trophy Points:
    138
    Gender:
    Female
    nizhalin arumai veyilil dhan theriyum
     
    1 person likes this.
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    You are right Periamma. But he realizes her presence only in her absence and longs for her, hoping that she will come back. Thanks for your nice feedback. -rgs
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    You are right Kalpavriksham. Thanks for a crisp feedback. -rgs
     

Share This Page