1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மீண்டும் வா!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Jul 1, 2014.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்?
    எதற்கு, யாரை இவ்வேளையில் அழைக்கிறாய்?
    எதனாலோ நீ எந்தன் நெஞ்சினை நிறைக்கிறாய்!
    என்னுள்ளே ஓர் நதியை பெருகச் செய்கிறாய்!

    உன் ஒலியால் அது இருப்பதை நானறிந்து கொண்டேன்!
    உடனேயே ஒரு வியப்பும் உடன் பெருகக் கண்டேன்!
    உள்ளெல்லாம் ஒரு வெளிச்சம் பரவுவதை உணர்ந்தேன்!
    உறைதயிர் போல் ஒரு பூரிப்பும் எனுள் பொங்க, மகிழ்ந்தேன்!

    நரம்பெல்லாம் ஒரு மென்னதிர்வு கொண்டு சிலிர்க்க,
    உடம்பெல்லாம் மென்மயிர்கள் குத்திட்டு நிற்க,
    விழியெல்லாம் ஏனோ கண்ணீராலே நிறைய,
    உடல் தளர்ந்து, அசைவற்று அவ்விடத்தில் உறைய,

    நானிருக்கையில் உன் குரலும் தேய்ந்து, பின் மறைய,
    வெளி வெளுத்து, சூரியனின் எழுதலை அறிவிக்க,
    மனமின்றி, நான் இருப்பிடம் விட்டுப் போனேன்!
    சிறு குயிலே! உனை மீண்டும் எதிர்பார்த்திருப்பேன்!
     
    3 people like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Rgs இந்த குயில் பெண் குயிலா அல்ல மாமரத்து குயிலா .
     
    1 person likes this.
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Its just the bird Periamma. Thanks for your feedback. Liked the mild tease too! -rgs
     
  4. darmesh

    darmesh Platinum IL'ite

    Messages:
    1,779
    Likes Received:
    1,010
    Trophy Points:
    208
    Gender:
    Male
    அற்புதம் ஸ்ரீனிவாசன் !

    எனக்கும் இந்தக் குயிலைப் பிடித்துள்ளது !
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your appreciation Darmesh. Happy to receive a first from you. -rgs
     

Share This Page