1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இடி, மின்னலுடன் திடீர் மழை .. ..

Discussion in 'Regional Poetry' started by aasaiajiith, Jun 5, 2014.

  1. aasaiajiith

    aasaiajiith Silver IL'ite

    Messages:
    267
    Likes Received:
    207
    Trophy Points:
    93
    Gender:
    Male
    [h=1][/h] [h=2]இறந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம்
    அக்காலம்,இக்காலம்,எக்காலமென முக்காலங்களிலும் நினைவாலே
    உன்னோடே இருக்கும் எனக்கே
    உனை காண வேண்டுமென
    பேராவல் பொங்கி எழும் பொழுது

    வெறும் மழைக்காலத்தின்போது மட்டுமே
    பெருவாரியாய் பொழியும் மழைக்கும்
    அதுகாறும் இடிக்கும் , மின்னலுக்கும்
    உனைக்காண ஆசையிருக்காதா என்ன ?[/h]
     
    2 people like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    இந்த கவிதையின் நாயகி கொடுத்து வைத்தவள் .இயற்கையே அவளை காண ஆசை படுகின்றதே .
     
    1 person likes this.
  3. aasaiajiith

    aasaiajiith Silver IL'ite

    Messages:
    267
    Likes Received:
    207
    Trophy Points:
    93
    Gender:
    Male
    அகம் புறமென அத்தனை அங்கமும்
    அவளுக்கென அலைக்கழிந்து
    உருக்குலைந்து கிடக்குமென்
    யாக்கைக்கு பிரத்யோகமாய்
    கட்டிப்புடி வைத்தியம்
    கொடுத்ததுமில்லை

    ராமநாமம் போல
    அவள் நாம நாமத்தை
    ஓயாமல் உச்சரித்து ஓய்ந்தே போன
    உதடுகளுக்கு தன் உதட்டொத்தடம்
    கொடுத்ததுமில்லை

    மறுக்கூட்டல் (recharge) புரிந்து
    உயிர்கூட்டல் புரிந்தாலே
    பயன்படும் தொடுதிரை கைப்பேசிக்கு
    கிடைக்கும் தொடுதலும் தடவலும் கூட
    கொடுத்ததுமில்லை


    கோடிமுறை நினைவில்
    அவளை அமர்த்தி அழகுபார்க்கும்
    அற்பன் இவனுக்கு ஒரேயொரு முறையும்
    நேரெதிர் நின்று இதுவரை
    பார்வை வரமும்
    கொடுத்ததுமில்லை .....

    ஆக,
    என் மனம், நினைவு ,உயிர்
    மொத்தத்தையும்
    கெடுத்து வைத்தவள் என்றால்
    சால பொருந்தும்,

    கொடுத்து வைத்தவலென்று
    சொல்லவேண்டாம் அவளை !!


    வழிவழியாய்
    வந்து
    வாசித்து
    வாழ்த்து
    வழங்கியமைக்கு
    நன்றி !!!
     

Share This Page