1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மன்னிப்பாயா என் அன்னையே

Discussion in 'Regional Poetry' started by periamma, Dec 28, 2010.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அடுக்கடுக்காய் வீடு கட்டி
    உன் மேல் பாரத்தை வைத்து
    ஆகாயத்தை தொட துடிக்கும்
    என்னை மன்னிப்பாயா பூமி தாயே

    ஆழ்துளை கிணறு வெட்டி
    உன்னை குத்தி கிழித்து
    பாதாளத்தை பார்க்க நினைக்கும்
    என்னை மன்னிப்பாயா பூமி தாயே

    நீ வரும் பாதை எல்லாம்
    சாய நீர் கழிவு நீர் கலக்கி
    உன் அழகை மாசு படுத்தும்
    என்னை மன்னிப்பாயா நதி அன்னையே

    நான் சுவாசிக்க நல்ல காற்று தந்த
    நான் புசிக்க நல்ல காய்கனிகள் தந்த
    நான் குடிக்க நீர் தரும் மழை தந்த
    உன்னை அழிக்க நினைக்கும்
    என்னை மன்னிப்பாயா மலைமகளே

    பத்து மாதம் சுமந்து பெற்ற அன்னையை
    காலால் எட்டி உதைப்பது போன்றதே
    நாம் இயற்கையை அழிக்க நினைப்பது
    தவறுகளை திருத்தி கொள்வோம்
    உலகம் உய்ய செய்வோம்
     
    1 person likes this.
    Loading...

  2. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    நல்ல சவுக்கடி , ரொம்ப நல்ல எழுதிருக்கீங்க
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மன்னிப்பதால் தான் இன்னும் நாம் நன்றாக இருக்க முடிகிறது பூமியில்...ஆனால் நாம் அதை உணராமல் மேலும் மேலும் அவள் பொறுமையை சோதிக்கிறோம்..நன்று அம்மா கவிதை!!!!
     
  4. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    நீங்கள் கேட்ட மன்னிப்பை
    உலகம் முழுதும் கேட்டே
    இயற்கைக்கு முரண்பட்ட
    வாழ்வை சற்றே மாற்றி
    வாழ்ந்தாலே
    இயற்கையும் காக்கப்படும்
    நாமும் நலம் பெறுவோமே
    என்று வருமோ இந்த விழிப்புணர்வு
    என்று ஏங்கியே நானும் நினைப்பதுண்டு
    அந்த நாள் இனிய நாள்
    வரும் நாள் எப்போதோ?
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்
    நாங்கள் இடி மேல் இடி கொடுத்ததும்
    இவுலகம் தந்து எம்முயிர் காத்தாய்
    எல்லாமும் தந்தாய் தாயே ஏனோ நாங்கள்
    உன்னைத் தள்ளினோம்

    அவசியம் உண்டோ இன்னும் துன்பம் கொடுக்க
    அவகாசம் இல்லை இனியும் தாமதிக்க
    எந் நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய் நன்றி கொன்ற மகற்கு
    .....

    அம்மா பூமித்தாயை காத்திடக் கோரும் உங்கள் வரிகள் அருமை
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female

    உங்கள் பாராட்டுக்கு நன்றி லதா.
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி ப்ரியா.எல்லை மீறினால் என்ன நடக்கும் என்று நாம் சில இயற்கை சீற்றத்தை கண் கூடாக பார்த்திருக்கிறோம்.
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி ரமா.அந்த இனிய நாளுக்காக நானும் ஏங்குகிறேன்.
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி சரோஜ்.நம் அன்னையை பாதுகாக்க நாம் அனைவரும் முன் நிற்போம்
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    இந்த பதிவை மீண்டும் பதிவு செய்கிறேன்.பூமி தாயே எங்களை மன்னித்து விடுங்கள்
     

Share This Page