1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பெருமைக்கொள்வோம்!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Aug 15, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சுதந்திரம்!!!

    ஏமாற்று தந்திரங்களால்
    வாங்க இயலாமல்,
    அஹிம்சை எனும்
    ஒற்றை சொல் மந்திரத்தால்
    மகுடம் ஏறியது இந்திய தாயின் சிரசில்.

    ஊழல், அநீதி, சுரண்டல், தீவிரவாதம்
    எத்தனையோ இருக்கிறது
    சுதந்திரம் கிடைக்காமலேயே இருந்திருக்கலாமே
    என்று நாம் நினைக்க...

    இப்படி நினைப்பதால் தவறு செய்தவர்களுக்கு
    சவுக்கடி கொடுப்பதாய் தான் தோன்றும்
    ஆனால் உண்மையில் நாம் அவமதிப்பது,
    தன் உறவு, மக்கள், மனைவி, குடும்பம்
    என்பதை தாண்டி தன் நாடு என்று நினைத்து
    அதற்காகவே ஒவ்வொரு மணித்துளியும்,
    போராடிய நம் மகாத்மா காந்திகளை!!!!

    நினைத்து பார்க்க முடியுமா??
    தனக்கென்று ஒரு நாடில்லாமல்,
    அகதியாய், அடிமையாய் ஒரு வாழ்வை, நிதமும்??
    கனவிலே கூட சாத்தியமற்ற ஒன்றினை
    வெகு சாதாரணமாய் விமர்சிக்கிறோம்..
    இந்த சுதந்திரம் இருப்பதற்கு
    இல்லாமலேயே இருந்திருக்கலாமே என்று...

    நமக்காக போராடியவர்கள் நினைக்க வேண்டும் இதை
    இவர்களுக்காகவா போராடினோம் என்று...
    எப்படி கிடைக்கும் லஞ்சத்திலிருந்து சுதந்திரம்,
    நாம் கொடுத்து கொண்டே இருந்தால்??
    எப்படி கிடைக்கும் அநீதியிலிருந்து சுதந்திரம்,
    நாம் கைக்கட்டி வேடிக்கை பார்த்தால்??

    சுதந்திரம் என்பது, வாழ்வோடும் பணத்தோடும்
    மட்டும் எடைபோட படவேண்டிய ஒன்றல்ல....
    நாம் விடும் மூச்சிலிருந்து, பேசும் பேச்சுவரை
    நினைத்து மகிழ வேண்டிய ஒன்று....
    தவறுகளும், கொடுமைகளும் நடக்காத நாடில்லை
    அவர்கள் எல்லாம் நம்மை போல,
    கிடைத்த சுதந்திரத்தைப் பற்றி பேசி
    நேரத்தை வீணாக்குவதில்லை.
    மாறாக தன் அருகில் நடக்கும்
    தவறுகளை களைவார்கள்...
    நமக்கோ என்றும் தூரப்பார்வை தான்..

    உண்மையிலேயே உணர்ந்து சொல்லுவோம் "சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்"
     
    Last edited: Aug 15, 2010
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    DP,

    Ungalin "Desapatru" kavithai kku naan thalai vanangukinraen..:bowdown:bowdown

    HAPPY INDEPENDENCE DAY!!
     
  3. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Mudhala intha kaara saara karutha sonna unaku Bow..

    நல்லவர் நம் மூத்தோர், களி தின்று, கல்லுடைத்து, செக்கிழுத்து
    தூக்கில் தொங்கி,உண்ண உணவின்றி, வெறும் கதருடுத்தி,
    குருதி சிந்தி, சின்னவர் உயிர் சிந்தி, உணர்வை கொட்டி
    பெற்றுத்தந்த சுதந்திரத்தை நானும் மதிக்கவே செய்கிறேன்..

    அடிப்படை உரிமையாம் பேச்சுரிமை..
    சொந்த கருத்தை கொஞ்சம் அழுத்தமாய் சொல்லி
    முழுசாய் தான் இன்று வீடு திரும்ப முடியுமா??
    நம் சங்கடம் எல்லாம் சொல்லி தெளிய, இறங்கி களைய
    பின்புலமில்லா அரசியல் அவ்வளவு எளிதல்ல
    அரசியல் ஒன்றும் கோவில் குளம் அல்ல..

    குறை சொல்ல மட்டும் விரும்பவில்லை
    இறங்கி களங்கம் களையவும் விரும்புகிறேன்..
    ஆனால் காலை எழுந்ததும் என் கை தேடும் என் மகள் முகம் பார்த்து
    போராடவும் கொஞ்சம் தயங்குகிறேன்,
    என் நிலையை எண்ணி நானும் கொஞ்சம் வெதும்புகிறேன்..

    அகதியாய் வாழ ஆசை ஒன்றுமில்லை எனக்கு..
    நல்ல பிரஜையாய் என் மூப்பு வரை உயிர்த்து வாழவே விரும்புகிறேன்..
    எதில் இல்லை ஊழல்..
    எங்கு இல்லை லஞ்சம,
    எங்கு நடக்கவில்லை குற்றம்,
    எங்கு தான் போற்றப்படவில்லை சுதந்திரம்..
    நீக்கமற எங்கும் எதுவும் நிறைந்திடினும்..
    இன்னும் எதுவோ குறைவது போல ஒரு எண்ணம்..
    இருப்பினும் என் நாட்டின் சுதந்திரம் போற்ற நெஞ்சம் கொள்ளா பெருமைதான் எனக்கு..

    சுதந்திரம் கோவில் சிலை தான்..
    அதை தொட்டு, தடவி, உணர்ந்து, சிலிர்த்து,
    என்றும் போற்றி பாதுகாக்க எனக்கும் ஆசை தான்
    சுதந்திர நாடாம் என் இந்தியா பற்றி என்றும் எனக்கு பெருமை தான்..
    கண்ணில் எல்லாம் குறைகள் நிறைய தெரியினும்..
    தாயை போற்றா மகளும் உண்டோ??
    தாயை மறந்தால் வேறு கதியும் உண்டோ??

    என்றும் எங்கும் எதிலும் உன் நினைவு தான்...

    சுதந்திரம் போற்றுவோம்..
    இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்...
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thank you Veda.. Wish you the same..:)
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ரம்யா... இதை தான் சொல்ல வருகிறேன்...

    களைய சொன்னது அரசியலில் மட்டும் அல்ல... அதுவரை யோசிக்கவே தேவையில்லை....

    பக்கத்து வீட்டினரோடு கூட இயல்பாய் பழக யோசிப்பது,
    தெருவில் ரோடு போட்டால் கூட, அது தன் வீட்டு பாதையில் இருக்க வேண்டுமென நினைப்பது... (நானே பார்த்தவர்களை தான் சொல்கிறேன்:bang)
    நாமே ஊழலை தொடங்கி வைப்பது...
    ஏன், நமக்கான உரிமையை (Consumer Rights) தேவை இருந்தும் உபயோகிக்காதது கூட தவறு தான்.

    அரசியல்வாதிகள் மட்டுமே கொடுமை புரிவதில்லை ரம்யா... மக்களும் தான்.. ஆனால் அது திரையில் வருவதில்லை...
     
  6. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    unmai thaan Priya.. naama ellam thara readya irukara naala thaan thappe nadakudhu.. aana adhukku munnodi yaar?? pin pulam yaar?? innaiku pakkathu veetu vaasalku road podanumnu sonna.. konjam edhir kelvi ketaa namma veetla night kallu vanthu vilaatha.. antha bayam thaan solla vanthen.. ketaa en avangala therium ivangala theriumnu solla vendiyadhu.. basement romba weak nu thonuthu...
     
  7. suria

    suria Silver IL'ite

    Messages:
    840
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Female
    nice apt one for the day deva..:thumbsup:thumbsup
     
  8. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Very nice patriotic poem.Super dear
     
  9. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Anbu Deva,
    தாய்நாட்டின் மீது நீ கொண்டுள்ள பற்று ரொம்ப அழகாக புரிகிறது உன்னுடைய இந்த கவிதையின் வழியாக.:thumbsup
     
  10. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    அருமையான சிந்தனை தங்கையே,
    இப்படிப்பட்ட,சிந்தனை மிகுந்த இளையவர்கள் கையில் இந்தியா வரும் போது,நிச்சயமாய்,நாம் பெற்ற சுதந்திரத்தின் பயனை அடைவோம்.
    அந்நாளும் வெகுதொலைவில்,இல்லை என்ற நம்பிக்கையும் கொள்வோம்,
    சுதந்திரத்தை,போற்றி,தியாகிகளை வணங்கி,சுதந்திரத்தை பேணி,இந்தியாவை,சிறந்த மானுடம் சிறந்த,வல்லமை நிறைந்த பொன்னாடாக மாற்றுவோம்.
    ஜெய்ஹிந்த்!
     

Share This Page