Aghasthiyar Arul Vakku

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Swethasri, May 12, 2013.

  1. Swethasri

    Swethasri Platinum IL'ite

    Messages:
    1,653
    Likes Received:
    1,567
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hai,I got the below General Arul Vakku from Sri Maha Muni Aghasthiyar from the internet.Really wanted to Share it in IL.

    வந்திருக்கும் எம் சேய்கள் அனைவரும்,அவரவர்கள் வாழ்விலே எத்தனையோ துன்பங்களையும்,துயரங்களையும் கண்டுகொண்டுதான் இருக்கிறார்கள்.பலருக்கு உளைச்சல்களும்,வேதனைகளும் அதிகமாகவே இருக்கிறது.
    ”இறைவனை வணங்கியும்,சித்தர்களை வணங்கியும்,சித்தர்களின் வாக்கை எல்லாம் கூடுமானவரைப் பின்பற்றியும் துன்பம் எதுவும் தீர்ந்ததாகத் தெரியவில்லையே?எஃதாவது வெளிப்படையான மாற்றம்,வாழ்க்கையிலே மனம் எதிர்பார்க்கின்ற நிலையில் நடந்தால்தானே,சித்தர்கள் வழியை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நம்பலாம்” என்று பலரின் மனம் எண்ணுகிறது.இதை நாங்கள் மறுக்கவில்லை.குறையாகவும் பேசவில்லை.
    ஆனால் எம் வழியில் தீவிரமாக வரவேண்டும் என்றால்,100/100 எமது வாக்குகளைப் பின்பற்ற வேண்டுமென்றால் அதிக நிதானமும்,பொறுமையும்,சுயக்கட்டுப்பாடும் அவசியம் தேவை.இந்த குணங்களை வளர்த்துக்கொண்டே வந்தால்,மெல்ல,மெல்ல “நாங்கள் உரைத்தும் ஏன் ஒரு விஷயம் நடக்கவில்லை?” என்பதும் புரியும்.”நாங்கள் உரைக்காமலேயே பல விஷயங்கள் ஏன் நடந்தன?” என்பதும் புரியும்.




    திருப்பதி” பற்றி:
    திருப்பதியைப் பற்றி எத்தனையோ மகத்துவங்கள் எல்லாம் கூரவேண்டுமப்பா.பெருமாளின் அம்சம் அங்கு இருக்கிறது என்பது உண்மை.அங்குள்ள வராகர் சந்நிதியில் வணங்கினால் குழந்தைகளின் புத்தி கூர்மைக்கு உதவும்.அச்சந்நிதியிலே ஹயக்ரீவரும்,அன்னை கலைவாணியும் அரூபமாக இருந்து தவம் செய்வதுண்டு. பெருமாளை வணங்குவதற்கு முன் வராஹரை வணங்க வேண்டும்.திருப்பதி என்பது சாக்ஷாத் பூலோக வைகுண்டம்தான்.

     
    2 people like this.
    Loading...

  2. Swethasri

    Swethasri Platinum IL'ite

    Messages:
    1,653
    Likes Received:
    1,567
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பொதுவாக தவறுகள் பல செய்து வாழ்ந்த ஆத்மாக்கள் கடைசி காலத்தில் பிதற்றுவதும்,மனம் வருந்துவதும் ஒருபுறமிருக்க,பாவம் செய்த ஆன்மாக்களுக்கு அந்திமக்காலம் என்பது கடுமையாகத்தான் இருக்கும்.அதே சமயம் நல்ல ஆன்மாக்களுக்கும் இருக்கின்ற கொஞ்ச,நஞ்ச பாவங்களையும் எடுத்து விட இறைவன் விரும்பினால் அவர்களின் அந்திமக்காலமும் வேதனை தரக்கூடியதாகத்தான் இருக்கும்.இந்த இரண்டில் எது? என்பதை இறைவன்தான் தேர்ந்து எடுக்கிறார்.


    எனவே சுகமான மரணம் நிகழ்ந்து விட்டால்,அவன்,புண்ணிய ஆத்மா என்றும்,மிகக்கொடூரமான மரணம் நடந்தால்,அவன்,பாவ ஆத்மா என்றும் மனிதன் ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது.எத்தனையோ சூட்சுமக்கணக்குகள் இறைவனால் வகுக்கப்பட்டு,தொகுக்கப்பட்டு,பகுக்கப்பட்டு,பெருக்கப்பட்டு பிறகுதான்
    கழிக்கப்படுகிறது.
     
  3. Swethasri

    Swethasri Platinum IL'ite

    Messages:
    1,653
    Likes Received:
    1,567
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்றன்று காலம் விதிப்படி,விதிப்பயனாக,அவனவன் செய்த வினையின் எதிரொலியாக ஆண்டாண்டு காலம் சில கஷ்டங்களும்,மன உளைச்சல்களும் தொடரத்தான் செய்யும்.கஷ்டங்கள் தொடர்கிறதே என்று இறை வழி விட்டு விலகக்கூடாது.சிறப்பில்லா வாழ்க்கையிலே,சிறப்பில்லா சம்பவங்கள் எதிர்பட்டாலும்,இறை வணங்க மறுத்தல் கூடாது.செய்கின்ற தர்மத்தை விடக்கூடாது.சிந்தை கொள்.ஒவ்வொரு மனிதனின் மனம் எப்படி? என்று எமக்குத் தெரியும்.ஒவ்வொரு மனிதனையும்,இறை சக்தியைக் கொண்டு பக்குவம் அடைந்த மனிதனாக மாற்ற முடியும் என்றாலும் கூட,இறைக்கு வேலை அதுவல்ல.அன்னவனே உழன்று,சிதிலப்பட்டு,வேதனைப்பட்டு, கவலைப்பட்டு,கஷ்டப்பட்டு,பக்குவப்பட்டு,தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் இறையின் எண்ணமாகும்.அறிவிலே தெளிவும்,மனதிலே உறுதியும் இருக்க வேண்டும்.இது கிடைப்பதற்கு மனிதன் வாழ்விலே துன்பங்கள் பட வேண்டும்.அதை அறிவிலே ஊடுருவி நாங்களே தெளிய வைப்போம்.அஃதொப்ப சதுரகிரியோ,திருவண்ணாமலையோ இயன்றபோது சென்று வா.நல்லதொரு அனுபவங்களும்,இறை அருளாசியும் உனக்குக் கிடைக்கும்.தொடர்ந்து பூஜைகள் செய்ய முடியவில்லையே? என்று வருந்தாதே.அந்த ஏக்கமே ஒரு பூஜைதான்.எந்த இடத்திலே அமைதி கிடைக்கிறதோ,அங்கு அமர்ந்து நீ பூஜை செய்யலாம்.அங்குதான்,இங்குதான்,அதிகாலைதான்,உச்சிப்பொழுதுதான் என்பது இல்லை.இறையை வணங்க காலம்,நாழிகை,சூழல் எதுவும் தேவையில்லை.மனம் ஒன்றி இருந்தால் மட்டும் போதும்.எனவே,இதனை எண்ணி அமைதியாக வாழ்.நல்லதொரு வாழ்க்கை இறைவன் அருளால் உனக்கு கிடைக்கும்.ஆசிகள்.சுபம்.
     
  4. Swethasri

    Swethasri Platinum IL'ite

    Messages:
    1,653
    Likes Received:
    1,567
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இஹ்தொப்ப கால காலம் வாழ்வியல் துன்பங்களுக்கு தீர்வு தேடி மாந்தர்களில் சிலர் எம்மை நாடுவது உண்டு .துன்பங்கள் எல்லாம் ஒரு கணப்பொழுதில் அல்லது விழி மூடி விழி திறப்பதற்குள் தீர்க்கப்படவேண்டும் என்பதே மனிதனின் நோக்கமாக இருக்கிறது.அணுவளவும் துன்பமே இல்லாமல் வாழவேண்டும்,சதாசர்வகாலமும் இன்பமும்,சாந்தியும் வாழ்வில் நிலவவேண்டும் என்பதே மனிதர்களின் எண்ணமாக இருக்கிறது . இதை தவறு என்று நாங்கள் கூறமாட்டோம்.ஆனால் இந்த இன்பமும்,நிம்மதியும் இந்தந்த விதத்தில்தான் இருக்கவேண்டும் என்று மனிதன் எதிர்பார்க்கிறானே,அந்த எதிர்பார்ப்புதான் குறையாக மாறிவிடுகிறது.எனவே மனிதர்கள் எதிர்பார்க்கக்கூடிய நீடித்த இன்பமும்,நிலைத்த சாந்தியும் இறைவனின் பாதாரவிந்தங்களை சரண் அடைந்து இறையோடு சாயுச்சமோ,சாரூபமோ,சாலோகமோ,சாமீபமோ எஹ்தாவது ஒரு ஆன்ம பரிணாம வளர்ச்சி நிலை அடைந்தால் ஒழிய மனிதனுக்கு கிட்டாது.இந்த உலக வாழ்விலே உன்னதங்களை அடைந்தால் நிம்மதி,சந்தோஷம் என்று அதை அடைவதற்கு முன்னால் ஒரு மனிதன் எண்ணுவான்.

    அடைந்த பிறகு அப்படி அவனால் நிம்மதியாக,சந்தோஷமாக வாழ இயலாது.மனித மனம் பக்குவம்,பக்குவம்,பக்குவம் என்று பக்குவத்தின் உச்ச நிலையிலே நின்று பார்க்கும் பொழுது அவன் எதிர்பார்க்கின்ற அனைத்தும் அபத்தமாகத் தெரியும்.யாங்கள் மிகத் தெளிவாகக் கூறுகிறோம் என்றாலும் மனிதனால் புரிந்து கொள்ள முடியாத நிலை அவன் கர்மாவில் அடங்கி இருக்கிறது.பெற்று வந்த கர்ம பாவத்தை நுகர்வதற்காக வந்த உடல் சார்ந்த விஷயங்களுக்கு மட்டும் வாழ்வது என்பது மனிதனின் இயல்பான விஷயம்.அதை எதிர்த்து இறை நோக்கி செல்வதுதான் மகான்களின் ஆன்ம போதனையாகும்.எனவே இயல்பான விஷயங்களுக்காக ஒரு மகானையோ,ஞாநியையோ மனிதன் நாட வேண்டியதில்லை .அதற்காக இயல்பான விஷயங்களே வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை.விதி போக்கில் எப்படியெல்லாம் அவை கிட்டுகிறதோ,அப்படியே மனிதன் அதை ஏற்றுக் கொள்ளட்டும்.

    ஒரு வேளை அவன் விரும்புவது போல் அது கிட்டாமல் போனாலும் மிகப் பெரிய இழப்பு ஏதும் இல்லை.ஆனால் ஆன்மீக வழியில் வராமல்,வரும் சிந்தனை கூட இல்லாமல்,பாவம்,புண்ணியம் என்கிற பேதம் தெரியாமல் வெறும் விலங்குகளைப் போல் உண்டு,உறங்கி,சந்ததிகளை உற்பத்தி செய்து வாழும் மனிதர்கள் அனைவரும் எம் பார்வையில் பரிதாபத்திற்கு உரியவர்கள்.அவர்கள் இன்னும் எத்தனையோ பிறவிகள் எடுத்துதான் ஆன்ம ஞான வழியை நோக்கி செல்ல இயலும். அது போன்ற மனிதர்களை கூட சேர்த்துக் கொள்ளலாம்.

    ஆனால், பல்வேறு பிறவிகளில் சேர்த்த ஓரளவு புண்ணியத்தின் காரணமாக எஹ்தாவது ஒரு பிறவியிலே நல்ல வழியை இறைவன் காட்டிக் கொடுத்தாலும் கூட தடுமாற்றத்தாலும்,குழப்பத்தாலும் வேறு,வேறு வாழ்வியல் சிக்கலை முன்னிறுத்தி அந்த ஆன்மீக வழியை புரிந்து கொள்ள மாட்டேன் என்றோ அல்லது புரிந்தாலும் அதன் வழியாக வரமாட்டேன் என்று சில மனிதர்கள் வாழ்கிறார்களே,அதுதான் விதியின் கொடுமையிலும் கொடுமை ஆகும்.எனவே உலகியல் வாழ்விற்காக கடுமையாக ஒருவன் போராடக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை.கடுமையாக ஒருவன் உழைக்கக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை.அந்த செயலின் காரணமாக மறந்தும் பாவத்தை சேர்க்கக் கூடாது என்பதுதான் எமது கோட்பாடாகும்.கூடுமானவரை யாரையும் பாதிக்காமல்,யார் மனதையும் புண்படுத்தாமல் தத்தம் கடமைகளை நேர்மையாக ஆற்றி,தன்னால் முடிந்த தர்ம காரியங்களை ஆற்றி அன்றாடம் இறை நாமாவளியை ஆழ் மனநிலையில் நிறுத்தி சிந்தித்து ஒரு மனிதன் வாழ்ந்தாலே தேடுகின்ற நிம்மதியும்,சந்தோஷமும் அவனைப் பின்தொடரும்.

    இறைவனின் அருளாசியும் வந்து சேருமப்பா.இதை சரியான விகிதாசாரத்திலே புரிந்து கொண்டு எந்த விதமான காழ்ப்பு உணர்ச்சிக்கும் இடம் தராமல் எம் வழியில் வர முயற்சி செய்தால்,இறைவன் அருளைக்கொண்டு யாமே அஹ்தொப்ப மனிதனை கரை சேர்ப்போம் அப்பா.
     
  5. Swethasri

    Swethasri Platinum IL'ite

    Messages:
    1,653
    Likes Received:
    1,567
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஒரு அன்பர்: ஐயனே! தங்களை,எங்களுக்குக் காட்டி அருள வேண்டும்:

    எத்தனையோ தர்ம வழிகளை காட்டி அருளுகிறோம்.எத்தனையோ நீதி வழிகளை காட்டி அருளுகிறோம்.எத்தனையோ சத்திய வழிகளைக் காட்டி அருளுகிறோம்.எத்தனையோ இறை வழிகளை காட்டி அருளுகிறோம்.எனவே,இறையே “காட்டானை”மீது அமர்ந்து வந்தாலும்,தன்னைக் “காட்டானை,காட்டானை” என்றுதான்,இறையே இருக்கிறார்.அஹ்தொப்ப,”காட்டானை”யை நீ பிடித்து நன்றாக வழிபடு.”காட்டானை” உன் அருகில் இருக்க,அதைத் தவிர வேறு ”காட்டானை” எதற்கு?.எனவே, ”காட்டானை”, ”காட்டானை” ஆக இருக்க,நாங்கள் மட்டும் காட்டி அருளும் தன்மைக்கு ஏன் வர வேண்டும்? இருந்தாலும்,காட்டிக் காட்டிக் காட்டி அருளுகிறோம். ”காட்டானை” திருவடி வணங்கி,நாங்கள் காட்டி அருளுகிறோம் ”காட்டானை”.தன்னைக் காட்டாத ”காட்டானை”, நாங்கள் காட்டி அருளுகிறோம்.அந்தக் ”காட்டானை”யின் திருவருளாலே,எங்களைக் காட்டி அருளுகிறோம்.எங்களைக் காட்டி அருளுமாறு,அந்தக் ”காட்டானை” அருள் புரிந்தால்,நாங்கள்,எங்களையும் காட்டி அருளுகிறோம். ”காட்டானை”அருள வேண்டும் என்று,தன்னைக் ”காட்டானை” திருவடி வணங்கி வேண்டிக்கொள்.
     
  6. geevee68

    geevee68 Platinum IL'ite

    Messages:
    4,143
    Likes Received:
    566
    Trophy Points:
    233
    Gender:
    Female
    Could you kindly translate this in English for a whole lot of us to understand the meaning.That will be very helpful.
     
    2 people like this.
  7. naliniravi

    naliniravi Gold IL'ite

    Messages:
    990
    Likes Received:
    492
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Dear Swethasri,

    Thank you for sharing Aghasthiyar Arul Vakku. It has answered few of my questions. Can u give me the internet address pl.

    om sai ram
     
  8. lilacgal77

    lilacgal77 Silver IL'ite

    Messages:
    103
    Likes Received:
    214
    Trophy Points:
    93
    Gender:
    Female
    thanks for sharing
     
    1 person likes this.
  9. Swethasri

    Swethasri Platinum IL'ite

    Messages:
    1,653
    Likes Received:
    1,567
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Geevee sorry ya,i don't have time to do that.iam not typing this iam just copying and pasting if somebody else who has time are very welcome totranslate it.
    Thanks
     
  10. Swethasri

    Swethasri Platinum IL'ite

    Messages:
    1,653
    Likes Received:
    1,567
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Nalini,happy that my post are usefull to you.is it ok if I PM you regarding the website?
     

Share This Page