"Understanding meaning of Slokas" [Thanks to Kalki for this output.]

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Renukamanian, Jul 20, 2011.

  1. Renukamanian

    Renukamanian Senior IL'ite

    Messages:
    36
    Likes Received:
    23
    Trophy Points:
    23
    Gender:
    Male
    நான் சொல்லுவதெல்லாம் ஜபம்!

    டாக்டர்.சுதா சேஷய்யன்
    [​IMG]
    மனித மனம் வினோதமானது. செய்யவேண்டும் என்று சிலவற்றைத் திட்டம் போடும்; செய்வதற்கான முயற்சி எடுக்கும்; ஆனால், தொடர்ந்து செய்ய வேண்டி வந்தால், ஏதோவிதமான சோம்பலிலும் விரக்தியிலும் விழுந்து புரண்டு விடும். :rotfl பணக்காரன் - ஏழை வித்தியாசமில்லாமல், சாதி மத வேறுபாடில்லாமல், பதவி - அந்தஸ்து - ஆர்ப்பாட்டம் வகை தொகைகள் இல்லாமல், பெரும்பாலான மனித மனங்களை ஆட்டிப் படைக்கும் வினோதம் இது. :)

    இனி நல்லவனாக இருப்பேன் என்று எடுக்கப்படுகிற அனைத்து வைராக்கியங்களும், இனி நன்மைகளை மாத்திரமே செய்வேன் என்று ஏற்கப்படுகிற அத்தனை சபதங்களும், இந்த வினோதத்தால் விலாசமிழந்துபோவதை, நாம் ஒவ்வொருவரும் சந்தித்திருக்கிறோம். வைராக்கியத்தையும் சூளுரைகளையும் தக்கவைத்துக் கொள்வது மட்டுமல்லாமல், அவற்றை வெற்றி பெறச் செய்வது எப்படி?
    [​IMG]
    எளிமையானதொரு வழியை ‘சௌந்தர்ய லஹரி’ என்னும் நூல் சொல்லித் தருகிறது. சூளுரைப்பவரை, அம்பிகை பராசக்தியின் திருமுன்னர் நிற்கச் சொல்கிறது. பின்வருமாறு கூறச் செய்கிறது:



    ஜபோ ஜல்ப: சில்பம் ஸகலம் அபி முத்ரா விரசநா
    கதி: பிராதக்ஷிண்ய க்ரமணம் அசனாத் யாஹுதி விதி
    ப்ரணாம: ஸம்வேச: ஸுகம் அகிலம் ஆத்மார்பண த்ருஷா
    ஸ்பர்யா பர்யாய: தவ பவது யந் மே விலஸிதம்


    (ஆதிசங்கரர் - சௌந் தர்ய லஹரி - 27)

    ‘நான் பேசுவதெல்லாம் உன் ஜபமாக ஆகட்டும்; நான் கைகளால் செய்கிற அனைத்துச் செயல்களும், உன்னுடைய பூஜையில் காட்டப்படுகிற முத்திரைகளாகட் டும்; நான் நடக்கிற நடையெல்லாம், முறையாக உன்னை வலம் வருவதாகட்டும்; நான் உண்ணும் உணவெல்லாம் உனக்குக் கொடுக்கப்படும் அர்ப்பணம் ஆகட்டும்; நான் படுத்துக்கொண்டால், அதுவே உனக்கான நமஸ்காரம் ஆகட்டும்; நான் செய்யும் அத்தனையும் (சொல்லும் சொல்லும் நினைக்கும் நினைப்பும் உட்பட) உனக்கான பூஜைமுறைகள் ஆகட்டும்.’
    இதிலென்ன வசதி, எளிமை?
    இருக்கிறதே! தாம் போகிற வழியில் சிவலிங்கத்தைப் பார்த்தார் ஒருவர்; கையில் மலர் இல்லை- தூவி வழிபடுவதற்கு; நீரும் இல்லை - அர்க்கியம் தருவதற்கு; அருகில் கல்லொன்று கிடந்தது. எடுத்தார்; ‘இதையே மலராக எண்ணிக்கொள் மஹேசனே’ என்று சொல்லிக் கொண்டே வீசினார்; அடுத்த நாள் அந்த வழியே அவர் சென்றபோது, ‘எமது மலர் எங்கே?’ என்று கேட்டு, கல்லடி வாங்கிக் கொண்டாராம் கடவுள்!
    ‘நான் செய்வதெல்லாம் உனக்கான பூஜை என்று எண்ணிக்கொள்’ என்று கடவுளிடம் சொன்னால், கடவுள் அப்படியே அதை ஏற்றுக் கொள்வார். ஆனால், அதனால் நமக்கென்ன பலன் இருக்கிறது? சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வது, கடவுளின் வைராக்கியமாகலாம். அதற்கும் நம்முடைய வைராக்கியத்துக்கும் என்ன தொடர்பு?
    [​IMG]
    நிறையவே உண்டு. ‘என் வாய் சொல்வதெல்லாம் இறைவனுக்கான ஜபம்; என் கை செய்வதெல்லாம் இறைவனுக்கான பூஜை; என் மனம் நினைப்பதெல்லாம் இறைவனுக்கான அர்ப்பணம்’ என்கிற சிந்தனையோடு சொன்னால், செய்தால், அர்ப்பணித்தால்... வாய் தவறு செய்யுமா? கை தீங்கிழைக்குமா? மனம் தடுமாறுமா?
    ‘கடவுளுக்கு அர்ப்பணம்’ என்பது கடவுளுக்கான வசதியோ, மேன்மையோ அல்ல ; மனிதர்களுக்கான வசதி- மானுடத்துக்கான வாய்ப்பு. நாம் அர்ப்பணம் செய்தாலும் செய்யாவிட்டாலும் கடவுளுக்கு அதனால் லாபமுமில்லை; நட்டமுமில்லை. ஆனால், ‘கடவுள் பெயரால்’ என்று கட்டுப் போட்டுவிட்டால், அதன் பின்னர் தடம் புரள வழியில்லை; தவறிழைக்கவும் தடமில்லை. கடவுளுக்காகச் செய்கிறோம் என்கிற எண்ணம், தடங்கலின்றிச் செய்யவும் வைக்கும்.
    நம்முடைய உறுதியைக் காப்பாற்ற, அத்தனை எளிமையான வழி! :thumbsup

    -----------------------------------------------------------------------------------------------------------------------------
    The crux of the matter is [what comes to my very small mind is] that every individual must be sincere and remain devoted to the Lord and dedicate every act he/she performs in this world to HIM/HER. If one is bound by the chains with the Lord that will lead one to a safer state and his/her mind shall remain free from any sin. "அனைத்தும் அந்த ஆண்டவனுக்கே அர்ப்பணிக்கிறேன்."



    Comments are welcome.


    "Renukamanian"

     
    Loading...

  2. anurar20

    anurar20 IL Hall of Fame

    Messages:
    2,577
    Likes Received:
    1,140
    Trophy Points:
    308
    Gender:
    Female
    thanks for sharing.......
     

Share This Page