Lalitha Sahasranamam - Tamil Meaning

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Jun 14, 2007.

Thread Status:
Not open for further replies.
  1. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Friends,
    I want to start this thread by posting a picture of
    Sree Lalithambikai
    as seen in the temple at Thirumeeyachur. That is the only place where there is a temple for Lalitha.

    Lalitha sahasranamam is said to have originated from here since the goddess here is Lalithambikai.
    This is near Peralam in the mayiladuthurai - thiruvarur bus route. One has to get down in PeraLam and walk 1 km to reach this temple.

    I seek Goddess Lalitha's blessings before I start writing the meaning of Lalitha Sahasranamam, in our forum.
    This is a translation by
    Pulavar Na Subramania Shivam.

    Please join me in this religious journey, my dear I L ites.
    Love,
    Chithra.
    Lalithambikai.jpg
     
    Sankarisiva, sumanrathi and brb_va like this.
    Loading...

  2. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சீர்மிகு லலிதா திருப்பெயர் ஆயிரம்:

    இந்தத் தமிழாக்கம் புலவர் ந.சுப்பிரமணிய சிவம் அவர்களால் இயற்றப் பட்டது.


    துதிப் பகுதி:

    திரு வினாயகர் துதி: (சுக்லாம்------சாந்தயே)

    சு(h)க்லாம்ப(4)ரத(4)ரம் விஷ்ணும்
    ச(h)சி(h)வர்ணம் சதுர்பு(4)ஜம்
    ப்ரஸன்ன வத(3)னம் த்(4)யாயேத்
    ஸர்வ விக்(4)னோப சா(h)ந்தயே

    ஒளிவெளிர் உடையவன் உறுவெளி நிறைபவன்
    ஒளிமதி நிறத்தினன் இரண்டிரு கரத்தினன்
    மலரருள் முகத்தினன் மலரடி பணிகுவாம்
    வளரிடர் களைகென வரகண பதியே

    அம்பிகைத் துதிகள்:

    1 - (ஸிந்தூராருண-------அம்பிகாம்)

    ஸிந்தூ(3)ராருண விக்(3)ரஹாம் த்ரிநயனாம் மாணிக்யமௌலிஸ்புரத்
    தாராநாயகசே(h)கராம் ஸ்திதமுகீம் ஆபீன வக்ஷோருஹாம்

    பாணிப்(4)யாம் அலிபூர்ண ரத்னசஷகம் ரக்தோத்பலம் பி(3)ப்(4)ரதீம்
    ஸௌம்யாம் ரத்ன-க(4)டஸ்த-ரக்த-சரணாம் த்(4)யாயேத் பராம் அம்பிகாம்


    சிந்தூர வண்ணத்து செம்மேனி அழகியை
    முந்தருள் பொழிமுக் கண்ணியை மாணிக்க
    திருமுடி பொலியும் மதிபுனை தலைவியை
    பெருவன முலையினை திருமுகழ் நகையினை
    அங்கையிற் செவ்வல்லி அளிமதுக் கிண்ணமும்
    தங்குபேர் அழகினை தங்கமணிக் கலசத்தில்
    செங்கதிர் மலர்த்தாள் சேர்த்தாளை, மேலான
    அம்மையை மனமொன்றி அகலாது துதித்திடுவோம்

    2 - (அருணாம்---------பவானீம்)

    அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம் த்(4)ருத-பாசா(h)ங்குச(h)-புஷ்ப-பா(3)ண-சாபாம்
    அணிமாதி(3)பி(4)ராவ்ருதாம் மயூகைரஹமித்யேவ விபா(4)வயே ப(4)வானீம்

    செவ்வியளை அலைபாயும் செங்கருணைக் கண்ணாளை
    வவ்வியபா சாங்குசமும் மலர்க்கணையும் வில்லோடு
    சேர்த்தாளை அணிமாதி சத்தியெல்லாம் பேரொளியாய்ச்
    சார்ந்தாளை பவானியை நானென்றும் பாவிப்பேன்

    3 - (த்யாயேத்------ப்ரதாத்ரீம்)

    த்(4)யாயேத் பத்(3)மா ஸனஸ்தாம் விகஸிதவத(3)னாம் பத்(3)மபத்ராயதாக்ஷீம்
    ஹேமாபா(4)ம் பீதவஸ்த்ராம் கரகலித லஸத்(3)தே(4)ம பத்(3)மாம் வராங்கீம்

    ஸர்வாலங்காரயுக்தாம் ஸததம் அப(4)யதா(3)ம் ப(4)க்தநம்ராம் ப(4)வானீம்
    ஸ்ரீவித்(4)யாம் சா(h)ந்தமூர்தி ஸகலஸுரனுதாம் ஸர்வ்ஸம்பத்ப்ரதா(3)த்ரீம்

    தாமரை உறைபவள் தண்மலர் முகத்தினள்
    தாமரை நீளிதழ்க் கண்ணினள் பிங்கலை
    பொன்னுடை மிளிர்ந்திடப் பொற்கமலம் கையேந்தும்
    உன்னரு மேனியள் நிறைவணித் தோற்றத்தாள்
    தஞ்சம் புகுந்தாரைத் தலைகுனிந்து குறையிரப்பாள்
    பவானி தேவியாள் சீர்வித்தை திருவுருவாள்
    தவாப்பெரு சாந்தத் திருவடிவாள் தேவரெலாம்
    பணிந்தேத்தும் பாதத்தாள் பரவினர்க் கென்றும்
    அணிபெருஞ் செல்வம் அளிப்பவள் தனைப்பணிவாம்

    4 - (ஸகுங்கும-------அம்பிகாம்)

    ஸகுங்குமைலேபனாம் அலிகசும்பி(3) கஸ்தூரிகாம்
    ஸமந்த(3) ஹஸிதேக்ஷணாம் ஸச(h)ர-சாப-பாசா(h)ங்குசா(h)ம்

    அசே(h)ஷஜனமோஹினீம் அருணமால்ய பூ(4)ஷாம்ப(3)ராம்
    ஜபாகுஸும பா(4_ஸுராம் ஜபவிதௌ(4) ஸ்மரேத(3)ம்பிகாம்

    நற்சாந்துப் பூச்சழகி நறுமணப் பொட்டழகி
    புன்னகைக்கும் கண்ணழகி புவிபோற்ற வில்லம்பு
    பாசமுடன் அங்குசமும் பூணழகி யாவரையும்
    நேசமுடன் தன்பாலே ஈர்ப்பழகி செம்மையுறு
    மாலைபூண் பட்டடை தாங்கிட்ட செம்பருத்தி
    வண்ணத்து அம்பிகையைச் செபவேளை துதிசெய்வோம்

    அன்புடன்
    சித்ரா.
     
  3. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Friends,
    I am posting the pdf file for the photo of
    Sree Lalithambikai.
    Love,
    Chithra.
     

    Attached Files:

    1 person likes this.
  4. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சீர்மிகு லலிதா திருப்பெயர் ஆயிரம்:

    போற்றிகள்:

    ஓம் ஸ்ரீமாத்ரே நம;
    ஓம் சீர்மிகு அன்னையே போற்றி

    ஓம் ஸ்ரீ மஹாராஞ்யை நம:
    ஓம் திருமலி பேரரசியே போற்றி

    ஓம் ஸ்ரீமத்ஸிம்ஹாஸனேச்(h)வர்யை நம:
    ஓம் ஏருறு சிங்காசனத் துறை தலைவியே போற்றி

    ஓம் சிதக்(3)னி குண்ட(3) ஸம்பூ(4)தாயை நம:
    ஓம் பேரறிவோமப் பெருங்கனல் உதித்தாளே போற்றி

    ஓமோம் தே(3)வகார்ய-ஸமுத்(4)யதாயை நம:
    ஓம் தாருறு தேவர்க்குச் செயல்பட முனைவோளே போற்றி

    ஓம் உத்(4)யத் பா(4)னு-ஸஹஸ்ரா[பா(4)யை நம:
    ஓம் உதிக்கும் செங்கதிர் ஆயிரம் ஒப்பாளே போற்றி

    ஓம் சதுர்பா(3)ஹு-ஸமன்விதாயை நம:
    ஓம் விதிக்கும் கரங்கள் நான்கினை உடையாளே போற்றி

    ஓம் ராக(3)ஸ்வரூப-பாசா(h)ட்(4)யாயை நம:
    ஓம் பற்றின் உருவத்துப் பாசத்தைக் கொண்டாளே போற்றி

    ஓம் க்ரோதா(4)ஙகாராங் குசோ(h)ஜ்ஜ்வலாயை நம:
    ஓம் சீற்றமது உருவமாம் அங்குசத் திலங்குவாளே போற்றி

    ஓம் மனோரூபேக்ஷு கோதண்டாயை நம:
    ஓம் மனமெனும் கரும்பினை வில்லாய்க் கொண்டாளே போற்றி


    ஓம் பஞ்சதன்மாத்ர-ஸாயகாயை நம:
    ஓம் குணமுறு பஞ்ச பூதமாம் கணையினாளே போற்றி

    ஓம் நிஜாருண ப்ரபா(4)பூர-மஜ்ஜத்(3)-ப்(3)ரஹ்மாண்ட மண்டலாயை நம:
    ஓம் தன் சிவப்பொளி மூழ்கு சகத்தினை உடையாளே போற்றி

    ஓம் சம்பகாசோ(h)க-புன்னாக(3)-ஸௌக(3)ந்தி(4)கலஸத்கசாயை நம:
    ஓம் செம்பகம் அசோகு செழுங்கொன்றை நறுங்குழலி போற்றி

    ஓம் குருவிந்த(3)-மணிச்(h)ரேணீ-கனத் கோடீர மண்டிதாயை நம:
    ஓம் செம்மணி வரியொளி சேர்மௌளி சிரத்தினளே போற்றி

    ஓம் அஷ்டமீ சந்த்(3)ர விப்(4)ராஜ-த(3)லிகஸ்தல-சோ(h)பி(4)தாயை நம:
    ஓம் இன்னொளி எட்டாம் பிறைமதி நெற்றியாளே போற்றி

    ஓம் முக சந்த்(3)ர-கலங்காப(4) ம்ருக(3)நாபி(4)-விசே(h)ஷகாயை நம:
    ஓம் முகமதிக் கறையெனக் கஸ்தூரிப் பொட்டினாளே போற்றி

    ஓம் வத(3)னஸ்மர-மாங்கல்ய-க்(3)ருஹதோரண-சில்லிகாயை நம:
    ஓம் மதன் திருவாயிலின் தோரணப் புருவத்தாளே போற்றி

    ஓம் வக்த்ரலக்ஷ்மீ-பரீவாஹ-சலன்மீனாப(4)-லோசனாயை நம:
    ஓம் முகத்தழகு வெள்ளத்தே மீனான கண்ணுடையாளே போற்றி

    ஓம் நவசம்பக-புஷ்பாப(4)-நாஸாத(3)ண்ட-விராஜிதாயை நம:
    ஓம் அன்றலர் செம்பகத்து மலர்போல மூக்குடையாளே போற்றி

    ஓம் தாராகாந்தி -திரஸ்காரி-நாஸாப(4)ரண-பா(4)ஸுராயை நம:
    ஓம் விண்மீனின் ஒளியோட்டும் விளங்கு மூக்கணியுடையாளே போற்றி

    ஓம்கத(3)ம்ப(3_ மஞ்சரீ-க்லுப்த-கர்ணபூர-மனோஹராயை நம:
    ஓம் செவிப்பூவால் மனங்கவரும் கதம்பப் பூங்கொத்துடையாளே போற்றி

    ஓம் தாடங்க-யுக(3)லீபூ(4)த-தபனோடு(3)ப-மண்ட(3)லாயை நம:
    ஓம் இரவி மதிகள் மண்டலத்தோடு இலங்குநல் தோடுடையாளே போற்றி

    ஓம் பத்(3)மராக(3)-சி(h)லாத(3)ர்ச(h)-பரிபா(4_)வி-கபோலப(4)வே நம:
    ஓம் பதுமராக ஒளிதோற்கும் கன்ணாடி கன்னத்தாளே போற்றி

    ஓம் நவவித்(3)ரும-பி(3)ம்ப(3)ஸ்ரீ-ந்யக்காரி த(3)ச(h)னச்சிதா(3)யை நம:
    ஓம் புதுப்பவளம் கொவ்வைகளும் புறங்காட்டும் இதழ்படைத்தாளே போற்றி

    ஓம் சு(h)த்(3)த(4)-வித்(4)யாங்குராகார-த்(3)விஜபங்க்தி-த்(3)வயோஜ்ஜ்வலாயை நம:
    ஓம் சுத்த வித்தை முளைகளெனத் தோன்று இருபல்வரிசையினாளே போற்றி 25

    அன்புடன்
    சித்ரா.
     
    Sankarisiva likes this.
  5. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் கர்பூர வீடிகாமோத(3)-ஸமாகர்ஷ தி(4)க(3)ந்தராயை நம:
    ஓம் தாம்பூல நறுமணத்தைத் தானிழுக்கும் திசையுடையாளே போற்றி

    ஓம் நிஜஸல்லாப-மாது(4)ர்ய-வினிர்ப(4)ர்த்ஸித-கச்சாயை நம:
    ஓம் கலைமகளின் வீணைக்கு மதிப்பழ்த்த இன்னுரையாளே போற்றி

    ஓம் மந்த(3)ஸ்மித-ப்ரபா(4)பூர-மஜ்ஜத்காமேச(h)-மானஸாயை நம:
    ஓம் புன்னகையின் ஒளி மூழ்கு காமேசன் மனம் படைத்தாளே போற்றி

    ஓம் அனாகலித-சாத்(4)ருச்(h)ய-சுபு(3)க-ஸ்ரீவிராஜிதாயை நம:
    ஓம் ஒப்புமையே நினைப்பரிய உயர்மோவாய்க் கட்டழகியே போற்றி

    ஓம் காமேச(h) ப(3)த்(3)த(4) மாங்கல்ய-ஸூத்ரசோ(ஹ்)பி(4)த-கந்த(4)ராயை நம:
    ஓம் காமேசன் கட்டிட்ட மங்கலநாண் கழுத்தழகி போற்றி 30

    ஓம் கனகாங்க(3)த(3)-கேயூர-கமனீய-பு(4)ஜான்விதாயை நம:
    ஓம் பொன்னங் கதமோடுகேயூரத் தோளழகியே போற்றி

    ஓம் ரத்னக்(3)ரைவேய-சிந்தாக-லோலமுக்தாபலான்விதாயை நம:
    ஓம் செம்மணியின் அட்டிகைசேர் பதக்கத்து முத்துடையாளே போற்றி

    ஓம் காமேச்(h)வர-ப்ரேமரத்ன-மணிப்ரதிபணஸ்தன்யை நம:
    ஓம் காமேசன் மனம் வாங்கும் கலச முலைப் பேரழகி போற்றி

    ஓம் நாப்(4)யால-வால-ரோமாலி-லதாபல-குசத்(3)வய்யை நம:
    ஓம் கொப்புழாம் தோட்டத்துக் கொடிபழுத்த குவிமுலையாளே போற்றி

    ஓம் லக்ஷ்யரோமலதா-தா(4)ரதா-ஸமுன்னேய-மத்(4)யமாயை நம:
    ஓம் உரோமத்தின் கொடியதனால் உணர்ந்தறியும் மின்னிடையாளே போற்றி 35

    ஓம் ஸ்தனபா(4)ர-த(3)லன்மத்(4)ய-பட்டப(3)ந்த(4)-வலித்ரயாயை நம:
    ஓம் தனபாரம் தாங்கற்கு அமைந்தனைய மும்மடிப்பை
    இனமாகக் கொண்டிட்ட இடையழகு மிக்குடையாளே போற்றி

    ஓம் அருணாருண-கௌஸும்ப(4)-வஸ்த்ர-பா(40ஸ்வத்-கடீதட்யை நம:
    ஓம் செம்மைமிகு பட்டாடை சேர்ந்தொளிரும் நல்லிடையாளே போற்றி

    ஒம் ரத்ன-கிங்கிணிகாரம்ய--ரச(h)னாதா(3)ம-பூ(4)ஷிதாயை நம:
    ஓம் செம்மணியின் கிங்கிணிகள் ஒலிசெய்யும் மேகலையாளே போற்றி

    ஓம் காமேச(h)-ஞாத-ஸௌபா(4)க்(3)ய-மார்த(3()வோருத்(3)வயன்விதாயை நம:
    ஓம் காமேசனே அறியும் கவின்மென்மைத் தொடையினாளே போற்றி

    ஓம் மாணிக்ய-மகுடாகார-ஜானுத்(3)வய-விராஜிதாயை நம:
    ஓம் மாணிக்க மகுடமென விளங்குமுழந் தாளினாளே போற்றி 40

    அன்புடன்
    சித்ரா.
     
  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் இந்த்(3)ரகோ(3)ப-பரிக்ஷிப்த-ஸ்மர-தூணாப(4)-ஜங்கி(4)காயை நம;
    ஓம் காமனம்புக் கலம்போலும் கவின் மிகுந்த கணைக்காலாளே போற்றி

    ஓம் கூ(3)ட(4)கு(3)ல்பாயை நம:
    ஓம் மறைந்தழகு வெளிக்காட்டும் மாண்பு கணுக்காலுடையாளே போற்றி

    ஓம் கூர்மப்ருஷ்ட-ஜயிஷ்ணு-ப்ரபதா(3)ன்விதாயை நம:
    ஓம் ஆமையதன் முதுகனைய அழகுபுறப் பாதத்தாளே போற்றி

    ஓம் நகதீ(3)தி(4)தி-சஞ்சன்ன-நமஜ்ஜன-தமோகுணாயை நம:
    ஓம் தாமசமாம் குணம்மறைக்கும் காமர்நக ஒளியுடையாளே போற்றி

    ஓம் பத(3)த்(3)வய-ப்ரபா(4)ஜால-பராக்ருத-ஸரோருஹாயை நம:
    ஓம் தாமரைகள் தோற்றோடும் தகவுடைய திருவடியாளே போற்றி 45

    ஓம் சி(h)ஞ்சானமணி-மஞ்சீர-மண்டிதஸ்ரீ-பதா(3)ம்பு(3)ஜாயை நம:
    ஓம் ஒளிமிகுந்த ரத்தினக்கல் சிலம்பலம்பு சேவடியாளே போற்றி

    ஓம் மராலீமந்த(3)க(3)மனாயை நம:
    ஓம் களிய்ன்னப் பேடனைய தளிர் மென்மை நடையினாளே போற்றி

    ஓம் மஹாலாவண்ய சே(h)வத்(4)யை நம:
    ஓம் பேரழகுப் பெட்டகத்தாளே போற்றி

    ஓம் ஸர்வாருணாயை நம:
    ஓம் செம்மையெங்கும் சேர்ந்தொளிர்வாளே போற்றி

    ஓம் அனவத்(4)யாங்யை நம:
    ஓம் ஓர்ந்தாலும் ஓர் குறையும் காணரிய உருவத்தாளே போற்றி 50

    ஓம் ஸர்வாப(4)ரண பூ(4)ஷிதாயை நம:
    ஓம் சீரணிகள் எல்லாமும் சிறப்படையப் பூண்டிட்டாளே போற்றி

    ஓம் சி(h)வகாமேச்(h)வராங்கஸ்தாயை நம:
    ஓம் சிவகாமேசன் திருமடியில் அமர்ந்திடுவாளே போற்றி

    ஓம் சி(h)வாயை நம:
    ஓம் சிவானியே போற்றி

    ஓம் ஸ்வாதீ(4)ன வல்லபா(4)யை நம:
    ஓம் கணவனைத் தன்வயமாய் ஆக்கியவளே போற்றி

    ஓம் ஸுமேரு-மத்(4)ய-ச்(h)ருங்க(3)ஸ்தாயை நம:
    ஓம் மேருமலை நடுவுற்ற கொடி முடியாளே போற்றி 55

    ஓம் ஸ்ரீமன் நக(3)ர நாயிகாயை நம:
    ஓம் சீர் நகர் நாயகியாளே போற்றி

    ஓம் சிந்தாமணி க்(3)ருஹாந்தஸ்தாயை நம:
    ஓம் சிந்தாமணி வீட்டில் வாழ்ந்திடுவாளே போற்றி

    ஓம் பஞ்சப்(3)ரஹ்மாஸன ஸ்திதாயை நம:
    ஓம் ஐந்தென்னும் பிரமங்கள் ஆசனமாய் அமர்ந்திட்டாளே போற்றி

    ஓம் மஹாபத்(3)மாடவீ ஸம்ஸ்தாயை நம:
    ஓம் பெருந்தாமரைக் காடு வாழ்பவளே போற்றி

    ஓம் கதம்ப(3)வன வாஸின்யை நம:
    ஓம் கதம்பப் பெருங்காட்டில் வாழ்பவளே போற்றி 60

    அன்புடன்
    சித்ரா.
     
  7. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் ஸுதா(4)ஸாக(3)ர மத்(4)யஸ்தாயை நம:
    ஓம் பேரமுதக் கடல் நடுவே நிலைபெற்றாளே போற்றி

    ஓம் காமாக்ஷ்யை நம்:
    ஓம் காமாட்சியே போற்றி

    ஓம் காமதா(3)யின்யை நம:
    ஓம் விரும்புவன வழங்கிடுவாளே போற்றி

    ஓம் தே(3)வர்ஷிக(3)ண ஸங்கா(4)த ஸ்தூயமானாத்ம வைப(4)வாயை நம:
    ஓம் தேவமுனிக் கூட்டங்கள் துதிசெய்யும் சிறப்புடையாளே போற்றி

    ஓம் ப(4)ண்டா(3)ஸுர வதோ(4)த்(3)யுகத ச(h)க்திஸேனா ஸமன்விதாயை நம:
    ஓம் பண்டனை அழிக்க முனையும் சக்தி சேனை தனையுடையாளே போற்றி 65

    ஓம் ஸம்பத்கரீ ஸமாரூட(3) ஸிந்தூ(3)ரவ்ரஜ-ஸேவிதாயை நம:
    ஓம் சம்பத்கரி நடத்திடும் நல் கரிப்படையால் சூழுற்றாளே போற்றி

    ஓம் அச்(h)வாரூடா(4)தி(3)ஷ்டிதாச்(h)வ கோடிகோடிபி(4) ராவ்ருதாயை நம:
    ஓம் அச்வாரூடா செலுத்தும் பல்கோடிப் பரிப்படையாளே போற்றி

    ஓம் சக்ரராஜ ரதா(2)ரூட(4) மந்த்ரிணீ-பரிஸேவிதாயை நம:
    ஓம் சீர்சக்கரதேர் மேவும் படைக்கலன்கள் புடை சூழ்வாளே போற்றி

    ஓம் கே(3)ய சக்ர ரதாரூட(4) மந்த்ரிணீ பரிஸேவிதாயை நம:
    ஓம் கேயசக்கரத் தேருரும் மந்திரிணி தொழ நிற்பாளே போற்றி

    ஓம் கி(3)ரிசக்ர ரதா(4)ரூட(4)-த(3)ண்ட(4)நாத(2) புரஸ்க்ருதாயை நம:
    ஓம் கிரிசக்கரத் தேருடைய தண்டினியை முன்னிட்டாளே போற்றி 70

    ஓம் ஜ்வாலா மாலினிகா க்ஷிப்த வஹ்னிப்ராகார-மத்(4)யகாயை நம:
    ஓம் ஜ்வாலா மலினி வைத்த தீக்கோட்டை நடுவிருப்பாய் போற்றி

    ஓம் ப(4)ண்ட(3) ஸைன்ய வதோ(4)த்(3)யுக்த ச(h)க்தி விக்ரம ஹர்ஷிதாயை நம:
    ஓம் பண்டன்படை அழிக்கவரும் சக்திசேனை திறன்கண்டு மிகமகிழ்வாளே போற்றி

    ஓம் நித்யா பராக்ரமாடோப நிரீக்ஷண ஸமுத்ஸுகாயை நம;
    ஓம் நித்தியா தேவிகளின் பெருவீரம் கண்டுவகை மிகவுற்றாளே போற்றி

    ஓம் ப(4)ண்ட((3) புத்ரவதோ(4)த்(3)யுகத-பா(3)லாவிக்ரம நந்தி(3)தாயை நம:
    ஓம் பண்டந்தரு மக்கள் தமையழிக்கும் பாலாவின் திறன் மகிழ்வாளே போற்றி

    ஓம் மந்த்ரிண்யம்பா(3) விரசித விஷங்க(3)-வத(4)தோஷிதாயை நம:
    ஓம் மந்த்ரிணி விசங்களை அழித்தமையால் மகிழ்ந்திடுவாளே போற்றி

    ஓம் விசு(h)க்ர ப்ராணஹரண வாராஹீ வீர்ய நந்தி(3)தாயை நம:
    ஓம் விசுக்கிரன் உயிர் போக்கும் தண்டினியைப் புகழ்ந்திடுவாளே போற்றி

    ஓம் காமேச்(h)வரமுகாலோக கல்பித-ஸ்ரீ க(3)ணேச்(h)வராயை நம:
    ஓம் காமேசன் முகம் பார்த்து கணேசனைத் தோற்றுவித்தாளே போற்றி

    ஓம் மஹாக(3)ணேச(h) நிர்பி(4)ன்ன விக்(4)ன யந்த்ர ப்ரஹர்ஷிதாயை நம:
    ஓம் மாகணேசன் உடைத்திட்ட இடர்ப்பொறியால் மிகமகிழ்வாய் போற்றி

    ஓம் ப(4)ண்டா(3)சுரேந்த்(3)ர நிர்முக்த-ச(h)ஸ்த்ர ப்ரத்யஸ்த்ர வர்ஷிண்யை நம:
    ஓம் பண்டன்விடு படைக்கெதிராய் கணைமழையைத் தான் பொழிவாளே போற்றி

    ஓம் கராங்குலி நகோத்பன்ன நாராயண-த(3)சா(h)க்ருத்யை நம:
    ஓம் தன் நகத்தால் நாரணன்பத் தவதாரம் படைத்தாளே போற்றி 80

    அன்புடன்
    சித்ரா.
     
  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் மஹாபாசு(h)பதாஸ்தாக்(3)நி-நிர்த(3)க்(4)தா(3)ஸுர ஸைனிகாயை நம:
    ஓம் பாசுபதக் கணைத் தீயால் அரக்கர் படை அழித்திட்டாய் போற்றி

    ஓம் காமேச்(h)வராஸ்த்ர நிர்த(3)க்(4)த(3)-ஸப(4)ண்டாஸுர
    சூ(h)ன்யகாயை நம:
    ஓம் காமேசன் கணையதனால் பண்டாஸுரனோடவன் தீமாவாம்
    தலைநகரம் சூனியகம் எரித்திட்டாளே போற்றி

    ஓம் ப்(3)ரஹ்மோபேந்த்(3)ர மஹேந்த்(3)ராதி(3) தே(3)வ-ஸம்ஸ்துத வைப(4)வாயை நம:
    ஓம் பிரமனரி இந்திரரும் தேவர்களும் தொழநின்றாளே போற்றி

    ஓம் ஹர நேத்ராக்(3)நி ஸந்த(3)க்(4)த(3) -காமஸஞ்ஜீவ நௌஷத்(4)யை நம:
    ஓம் அரனெரித்த மதனுயிரைத் தருமருந்துக் கொடியானாளே போற்றி

    ஓம் ஸ்ரீமத்(3)வாக்(3)ப(4)வ கூடைக-ஸ்வரூபமுக(2) பங்கஜாயை நம:
    ஓம் சீர்மிகுந்த வாக்பவத்தின் கூடத்தைத் தன்னுடைய
    ஏருற்ற முகத்தாமரையாகக் கொண்டிட்டாளே போற்றி

    ஓம் கண்டாத(4):கடிபர்யந்த மத்(4)யகூட ஸ்வரூபிண்யை நம:
    ஓம் கண்டமுதல் இடைவரையில் காமராஜ நடுக்கூடம்
    கொண்ட திரூருவானாளே போற்றி

    ஓம் ச(h)க்திகூடைகதாபன்ன கட்யதோ(4)-பா(4)க(3)
    தா(4)ரிண்யை நம:
    ஓம் குலவுமிடைக் கீழ்ப்பகுதி சக்திபீடமொன்றிட்ட தனிப்பகுதியாய்க்
    கொண்டாளே போற்றி

    ஓம் மூலமந்த்ராத்மிகாயை நம:
    ஓம் மூலமாம் பெருமந்திரம் தானாகி விளங்குவாளே போற்றி

    ஓம் மூலகூடத்ரயகலேப(3)ராயை நம:
    ஓம் மூலத்தின் முக்கூடம் தன்னுடலாய்த் தான்கொண்டாளே போற்றி

    ஓம் குலாம்ருதைக ரஸிகாயை நம:
    ஓம் குலாமுதச் சுவையினில் தனியின்பம் கண்டிட்டாளே போற்றி

    ஓம் குலஸங்கே(3)தபாலின்யை நம:
    ஓம் குலமறையைக் காத்திடுவாளே போற்றி

    ஓம் குலாங்க(3)னாயை நம:
    ஓம் குலமகளாய்த் தான் திகழ்வாளே போற்றி

    ஓம் குலாந்தஸ்தாயை நம:
    ஓம் குலத்துள்ளே உறைந்திடுவாளே போற்றி

    ஓம் கௌலின்யை நம:
    ஓம் கௌலவழிபாடுறுவாளே போற்றி

    ஓம் குலயோகி(3)ன்யை நம:
    ஓம் குலப்பிறப்பாம் யோகத்தை வரச்செய்யும் அருளுடையாளே போற்றி

    ஓம் அகுலாயை நம:
    ஓம் அகுலமாம் சுழுமுனையாளே போற்றி

    ஓம் ஸமயாந்தஸ்தாயை நம:
    ஓம் சமயத்தின் நடுநிற்பாளே போற்றி

    ஓம் ஸமயாசரதத்பராயை நம:
    ஓம் ஆறாதார வழிபாட்டால் அகமகிழ்ந்திடுபவளே போற்றி

    ஓம் மூலாதா(4)ரைக நிலயாயை நம:
    ஓம் மூலாதாரத் தனியாளே போற்றி

    ஓம் ப்(3)ரஹ்மக்(3)ரந்தி விபே(4)தி(3)ன்யை நம:
    ஓம் பிரமநாடி முடிப் பொடிப்பாளே போற்றி 100

    அன்புடன்,
    சித்ரா.
     
  9. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் மணிபூராந்தருதி(3)தாயை நம:
    ஓம் மணிப்பூரகத்தில் உதிப்பாளே போற்றி

    ஓம் விஷ்ணுக்(3)ரந்தி விபே(4)தி(3)ன்யை நம:
    ஓம் மால்முடிப்பைப் பிளந்திடுவாளே போற்றி

    ஓம் ஆக்ஞாசக்ராந்தராலஸ்தாயை நம:
    ஓம் ஆக்கினைச் சக்கரத்தின் நடுவே திகழ்பவளே போற்றி

    ஓம் ருத்(3)ரக்(3)ரந்தி விபே(4)தி(3)ன்யை நம:
    ஓம் உருத்திர நாடியதன் உறுமுடிப்பை ஒடித்திடுவாளே போற்றி

    ஓம் ஸஹஸ்ராராம்பு(3)ஜாரூடா(4)யை நம:
    ஓம் ஆயிரமாம் இதழ்கொண்ட தாமரையில் வீற்றிருப்பாளே போற்றி

    ஓம் ஸுதா(4)ஸாராபி(4)வர்ஷிண்யை நம:
    ஓம் அமுதத்தைப் பெருமழையாய் அகம்புறத்தே பொழிவிப்பாளே போற்றி

    ஓம் தடி(4)ல்லதா ஸமருச்யை நம:
    ஓம் மின்னலென ஒளிர்ந்திடுவாளே போற்றி

    ஓம் ஷட்சக்ரோபரி ஸம்ஸ்திதாயை நம:
    ஓம் ஆறுசக்கரமேல் நிலைப்பாளே போற்றி

    ஓம் மஹாசக்த்யை நம:
    ஓம் திருவிழாவில் மிகமகிழ்வாளே போற்றி

    ஓம் குண்டலின்யை நம:
    ஓம் குண்டலமாய்ச் சுருண்டிடுவாய் போற்றி

    ஓம் பி(3)ஸதந்து தனீயஸ்யை நம:
    ஓம் தாமரையின் நூல்போல மெல்லியலாய் விளங்கிடுவாளே போற்றி

    ஓம் ப(4)வான்யை நம:
    ஓம் பவானியாளே போற்றி

    ஓம் பா(4)வனாக(3)ம்யாயை நம:
    ஓம் பாவனையால் அடையத்தக்காளே போற்றி

    ஓம் ப(4)வாரிண்ய குடாரிகாயை நம:
    ஓம் பிறவியெனும் காடழிக்கும் கோடரியாவளே போற்றி

    ஓம் ப(4)த்(3)ரப்ரியாயை நம:
    ஓம் மங்கலத்தை விரும்புவாளே போற்றி

    ஓம் ப(4)த்(3)ரமூர்தயே நம:
    ஓம் மங்கலத் திருவுருவாளே போற்றி

    ஓம் ப(4)க்தஸௌபா(4)க்(3)யதா(3)யின்யை நம:
    ஓம் அன்பருக்கு நல்லவெல்லாம் அருள்செய வல்லாளே போற்றி

    ஓம் ப(4)க்தி ப்ரியாயை நம:
    ஓம் பக்திதனை விரும்புவாளே போற்றி

    ஓம் ப(4)க்திக(3)ம்யாயை நம:
    ஓம் பக்தியால் அடைய வல்லாளே போற்றி

    ஓம் ப(4)க்தி வச்(h)யாயை நம:
    ஓம் பக்திக்கே வசமாவாளே போற்றி 120

    அன்புடன்
    சித்ரா.
     
  10. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் ப(4)யாபஹாயை நம:
    ஓம் பயத்தினைப் போக்குவாளே போற்றி

    ஓம் சா(h)ம்ப(4)வ்யை நம:
    ஓம் சம்புவின் சக்தியே போற்றி

    ஓம் சா(h)ரதா(3)ராத்(4)யாயை நம:
    ஓம் சாரதையாள் பூசிப்பவளே போற்றி

    ஓம் ச(h)ர்வாண்யை நம:
    ஓம் சர்வாணியே போற்றி

    ஓம் ச(h)ர்மதா(3)யின்யை நம:
    ஓம் நல்லின்பம் என்றும் தருபவாளே போற்றி

    ஓம் சா(h)ங்கர்யை நம:
    ஓம் சங்கரன் பத்தினியாளே போற்றி

    ஓம் ஸ்ரீகர்யை நம:
    ஓம் செல்வமெல்லாம் நல்கிடுவாளே போற்றி

    ம் ஸாத்(4)வ்யை நம:
    ஓம் பதிவிரதையே போற்றி

    ஓம் ச(h)ரச்சந்த்(3)ர நிபா(4)னனாயை நம:
    ஓம் சரத்கால மதியனைய முகத்தினாளே

    ஓம் சா(h)தோத(3)ர்யை நம:
    ஓம் நுணங்கிய வயிறுடையாளே போற்றி

    ஓம் சா(h)ந்திமத்யை நம:
    ஓம் சாந்தி நிறை வடிவானவளே போற்றி

    ஓம் நிராதா(4)ராயை நம:
    ஓம் ஆதாரமில்லாதாளே போற்றி

    ஓம் நிரஞ்சனாயை நம:
    ஓம் அழுக்கற்றாளே போற்றி

    ஓம் நிர்லேபாயை நம:
    ஓம் பற்றிலாளே போற்றி

    ஓம் நிர்மலாயை நம:
    ஓம் மும்மல மொட்டாதாளே போற்றி

    ஓம் நித்யாயை நம:
    ஓம் நிலை பெற்றவளே போற்றி

    ஓம் நிராகாராயை நம:
    ஓம் உருவிலாளே போற்றி

    ஓம் நிராகுலாயை நம;
    ஓம் கலக்கமொன்றில்லாதவளே போற்றி

    ஓம் நிர்கு(3)ணாயை நம:
    ஓம் முக்குணங்கட்கு எட்டாதாளே போற்றி

    ஓம் நிஷ்கலாயை நம:
    ஓம் கூறுபடாத் தன்மையாளே போற்றி 140

    அன்புடன்
    சித்ரா.
     
    johnthanjavur, Shyamalak4 and subhsar like this.
Thread Status:
Not open for further replies.

Share This Page