Tamil Archanais - Murugan-3 sets

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Oct 15, 2010.

Thread Status:
Not open for further replies.
  1. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    முருகன் 108 போற்றிகள்;

    திங்கள், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளும்,
    சஷ்டி திதியும், கிருத்திகை நக்ஷத்திரமும் முருகனுக்கு உகந்த நாட்கள்.

    ஓம் ஆறுமுகனே போற்றி
    ஓம் ஆண்டியே போற்றி
    ஓம் அரன் மகனே போற்றி
    ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி
    ஓம் அழகா போற்றி
    ஓம் அபயா போற்றி
    ஓம் ஆதிமூலமே போற்றி
    ஓம் ஆவினன் குடியோய் போற்றி
    ஓம் இறைவனே போற்றி
    ஓம் இளையவனே போற்றி (10)

    ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
    ஓம் இடரைக் களைவோனே போற்றி
    ஓம் ஈசன் மைந்தனே போற்றி
    ஓம் ஈராறு கண்ணனே போற்றி
    ஓம் உமையவள் மகனே போற்றி
    ஓம் உலக நாயகனே போற்றி
    ஓம் ஐயனே போற்றி
    ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
    ஓம் ஒன்றே போற்றி
    ஓம் ஓங்காரனே போற்றி (20)

    ஓம் ஓதுவார்க்கினியனே போற்றி
    ஓம் ஔவைக்கருளியவனே போற்றி
    ஓம் கருணாகரனே போற்றி
    ஓம் கதிர் வேலவனே போற்றி
    ஓம் கந்தனே போற்றி
    ஓம் கடம்பனே போற்றி
    ஓம் கவசப்பிரியனே போற்றி
    ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
    ஓம் கிரிராஜனே போற்றி
    ஓம் கிருபாநிதியே போற்றி (30)

    ஓம் குகனே போற்றி
    ஓம் குமரனே போற்றி
    ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி
    ஓம் குறத்தி நாதனே போற்றி
    ஓம் குரவனே போற்றி
    ஓம் குருபரனே போற்றி
    ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
    ஓம் சஷ்டி நாயகனே போற்றி
    ஓம் சரவணபவனே போற்றி
    ஓம் சரணாகதியே போற்றி (40)

    ஓம் சத்ரு சங்காரனே போற்றி
    ஓம் சர்வேஸ்வரனே போற்றி
    ஓம் சிக்கல்பதியே போற்றி
    ஓம் சிங்காரனே போற்றி
    ஓம் சுப்பிரமணியனே போற்றி
    ஓம் சுரபூபதியே போற்றி
    ஓம் சுந்தரனே போற்றி
    ஓம் சுகுமாரனே போற்றி
    ஓம் சுவாமிநாதனே போற்றி
    ஓம் சுருதிப் பொருளுரைத்தவனே போற்றி (50)

    ஓம் சூழ் ஒளியே போற்றி
    ஓம் சூரசம்ஹாரனே போற்றி
    ஓம் செல்வனே போற்றி
    ஓம் செந்தூர்க்காவலனே போற்றி
    ஓம் சேகரனே போற்றி
    ஓம் சேவகனே போற்றி
    ஓம் சேனாபதியே போற்றி
    ஓம் சேவற்கொடியோனே போற்றி
    ஓம் சொற்பதங்கடந்தவனே போற்றி
    ஓம் சோலையப்பனே போற்றி (60)

    ஓம் ஞானியே போற்றி
    ஓம் ஞாயிறே போற்றி
    ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
    ஓம் ஞானோபதேசியே போற்றி
    ஓம் தணிகாசலனே போற்றி
    ஓம் தயாபரனே போற்றி
    ஓம் தண்டாயுதபாணியே போற்றி
    ஓம் தகப்பன் சாமியே போற்றி
    ஓம் திருவே போற்றி
    ஓம் திங்களே போற்றி (70)

    ஓம் திருவருளே போற்றி
    ஓம் தினைப்பணம் புகுந்தோய் போற்றி
    ஓம் துணைவா போற்றி
    ஓம் துரந்தரா போற்றி
    ஓம் தென்பரங்குன்றனே போற்றி
    ஓம் தெவிட்டா இன்பமே போற்றி
    ஓம் தேவாதி தேவனே போற்றி
    ஓம் தேவசேனாபதியே போற்றி
    ஓம் தேவனே போற்றி
    ஓம் தேயனே போற்றி (80)

    ஓம் நாதனே போற்றி
    ஓம் நிமலனே போற்றி
    ஓம் நிறணந்தவனே போற்றி
    ஓம் பிரணவமே போற்றி
    ஓம் பரப்பிரம்மமே போற்றி
    ஓம் பழனியாண்டவனே போற்றி
    ஓம் பாலகுமாரனே போற்றி
    ஓம் பன்னிரு கையனே போற்றி
    ஓம் பகை ஒழிப்பவனே போற்றி
    ஓம் போகர் நாதனே போற்றி (90)

    ஓம் போற்றப்படுவோனே போற்றி
    ஓம் மறை நாயகனே போற்றி
    ஓம் மயில் வாகனனே போற்றி
    ஓம் மகா சேனனே போற்றி
    ஓம் மருத மலையானே போற்றி
    ஓம் மால் மருகனே போற்றி
    ஓம் மாவித்தையே போற்றி
    ஓம் முருகனே போற்றி
    ஓம் மூவாப் பொருளே போற்றி
    ஓம் யோக சித்தியே போற்றி (100)

    ஓம் வயலூரானே போற்றி
    ஓம் வள்ளி நாயகனே போற்றி
    ஓம் விறலிமலையானே போற்றி
    ஓம் வினாயகர் சோதரனே போற்றி
    ஓம் வேலவனே போற்றி
    ஓம் வேதமுதல்வனே போற்றி
    ஓம் கலியுக வரதனே போற்றி
    ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி (108)
     
    Loading...

  2. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    "வேல்" முருகன் போற்றிகள் - 1
     
    ஓம் அருள் வேல் போற்றி
    ஓம் அபயவேல் போற்றி
    ஓம் அழகுவேல் போற்றி
    ஓம் அரிய வேல் போற்றி
    ஓம் அயில் வேல் போற்றி
    ஓம் அனைய வேல் போற்றி
    ஓம் அன்பு வேல் போற்றி
    ஓம் அற்புத வேல் போற்றி
    ஓம் அடக்கும் வேல் போற்றி
    ஓம் அகராந்தக வேல் போற்றி
    ஓம் ஆளும் வேல் போற்றி
    ஓம் ஆட்கொள் வேல் போற்றி
     
     
    ஓம் இனிய வேல் போற்றி
    ஓம் இரங்கு வேல் போற்றி
    ஓம் இலை வேல் போற்றி
    ஓம் இறை வேல் போற்றி
    ஓம் ஈர்க்கும் வேல் போற்றி
    ஓம் ஈறிலா வேல் போற்றி
    ஓம் உக்கிர வேல் போற்றி
    ஓம் உய்க்கும் வேல் போற்றி
    ஓம் எழில் வேல் போற்றி
    ஓம் எளிய வேல் போற்றி
    ஓம் எரி வேல் போற்றி
    ஓம் எதிர் வேல் போற்றி
     
     
    ஓம் ஒளிர் வேல் போற்றி
    ஓம் ஒப்பில் வேல் போற்றி
    ஓம் ஒடுக்கும் வேல் போற்றி
    ஓம் ஓங்கார வேல் போற்றி
    ஓம் கதிர் வேல் போற்றி
    ஓம் கனக வேல் போற்றி
    ஓம் கருணை வேல் போற்றி
    ஓம் கந்தன் வேல் போற்றி
    ஓம் கற்பக வேல் போற்றி
    ஓம் கம்பீர வேல் போற்றி
    ஓம் கூர் வேல் போற்றி
    ஓம் கூத்தன் வேல் போற்றி
     
  3. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    "வேல்" முருகன் போற்றிகள் - 2
     
    ஓம் கொடு வேல் போற்றி
    ஓம் கொற்ற வேல் போற்றி
    ஓம் சமர் வேல் போற்றி
    ஓம் சம்கார வேல் போற்றி
    ஓம் சக்தி வேல் போற்றி
    ஓம் சதுர் வேல் போற்றி
    ஓம் சங்கரன் வேல் போற்றி
    ஓம் சண்முக வேல் போற்றி
    ஓம் சமரில் வேல் போற்றி
    ஓம் சர்வ சக்தி வேல் போற்றி
    ஓம் சின வேல் போற்றி
    ஓம் சீறும் வேல் போற்றி
     
     
    ஓம் சிவ வேல் போற்றி
    ஓம் சிறை மீட்கும் வேல் போற்றி
    ஓம் சித்ர வேல் போற்றி
    ஓம் சிங்காரன் வேல் போற்றி
    ஓம் கரர் வேல் போற்றி
    ஓம் சுடர் வேல் போற்றி
    ஓம் சுழல் வேல் போற்றி
    ஓம் சூர வேல் போற்றி
    ஓம் ஞான வேல் போற்றி
    ஓம் ஞானரக்ஷக வேல் போற்றி
    ஓம் தனி வேல் போற்றி
    ஓம் தாரை வேல் போற்றி
     
     
    ஓம் திரு வேல் போற்றி
    ஓம் திகழ் வேல் போற்றி
    ஓம் தீர வேல் போற்றி
    ஓம் தீதழி வேல் போற்றி
    ஓம் துணை வேல் போற்றி
    ஓம் துளைக்கும் வேல் போற்றி
    ஓம் நல் வேல் போற்றி
    ஓம் நீள் வேல் போற்றி
    ஓம் நுண் வேல் போற்றி
    ஓம் நெடு வேல் போற்றி
    ஓம் பரு வேல் போற்றி
    ஓம் பரன் வேல் போற்றி
     
  4. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    "வேல்" போற்றிகள் - 3
     
    ஓம் படை வேல் போற்றி
    ஓம் பக்தர் வேல் போற்றி
    ஓம் புகழ் வேல் போற்றி
    ஓம் புகல் வேல் போற்றி
    ஓம் புஷ்ப வேல் போற்றி
    ஓம் புனித வேல் போற்றி
    ஓம் புண்ய வேல் போற்றி
    ஓம் பூஜ்ய வேல் போற்றி
    ஓம் பெரு வேல் போற்றி
    ஓம் பிரம்ம வேல் போற்றி
    ஓம் பொரு வேல் போற்றி
    ஓம் பொறுக்கும் வேல் போற்றி
     
     
    ஓம் மந்திர வேல் போற்றி
    ஓம் மலநாசக வேல் போற்றி
    ஓம் முனை வேல் போற்றி
    ஓம் முரண் வேல் போற்றி
    ஓம் முருகன் வேல் போற்றி
    ஓம் முக்தி தரு வேல் போற்றி
    ஓம் ரத்தின வேல் போற்றி
    ஓம் ராஜ வேல் போற்றி
    ஓம் ருத்திர வேல் போற்றி
    ஓம் ருணமோசன வேல் போற்றி
    ஓம் வடிவேல் போற்றி
    ஓம் வஜ்ஜிரவேல் போற்றி
     
     
    ஓம் வல் வேல் போற்றி
    ஓம் வளர் வேல் போற்றி
    ஓம் வழிவிடு வேல் போற்றி
    ஓம் வரமருள் வேல் போற்றி
    ஓம் விளயாடும் வேல் போற்றி
    ஓம் வினைபொடி வேல் போற்றி
    ஓம் வீரவேல் போற்றி
    ஓம் விசித்திர வேல் போற்றி
    ஓம் வெல் வேல் போற்றி
    ஓம் வெற்றி வேல் போற்றி
    ஓம் ஜய வேல் போற்றி
    ஓம் ஜகஜ்ஜோதி வேல் போற்றி
     
  5. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    திருப்புகழ் ஸ்ரீ முருகன் போற்றிகள் - 1

    ஓம் போத நிர்க்குண போதா நமோ நம
    ஓம் நாத நிஷ்கள நமோ நம
    ஓம் பூரணக் கலை சாரா நமோ நம
    ஓம் பஞ்சபாண பூபன் மைத்துன நமோ நம
    ஓம் நீப புஷ்பக தாளா நமோ நம
    ஓம் போக சொர்க்கபு பாலா நமோ நம
    ஓம் சங்கமேறும் மாதழித்ரய சேயே நமோ நம
    ஓம் வேத னத்ரய வேளே நமோ நம
    ஓம் வாழ்க சகத்ரய வேளே நமோ நம
    ஓம் வேத வித்தகா சாமீ நமோ நம
    ஓம் வேல் மிகுந்த மாசூரா நமோ நம
    ஓம் விம சரக்யு காளா நமோ நம
     
     
    ஓம் விந்து்நாத வீரபத்ம சீர்பாதா நமோ நம
    ஓம் நீலமிக்க கூதாளா நமோ நம
    ஓம் மேக மொத்த மாயூரா நமோ நம
    ஓம் விண்டிடாத போத மொத்த பேர் போதா நமோ நம
    ஓம் பூத மற்றுமே ஆனாய் நமோ நம
    ஓம் பூரணத்துளே வாழ்வாய் நமோ நம
    ஓம் துங்கமேவும் பூதரத்தெலாம் வாழ்வாய் நமோ நம
    ஓம் ஆறிரட்டி நள் தோளா நமோ நம
    ஓம் பூஷணத்துமா மார்பா நமோ நம
    ஓம் ஆர்யை பெற்ற சீராளா நமோ நம
    ஓம் சூரையிட்து நீள் பேரா நமோ நம
    ஓம் ஆரணத்தினா வாழ்வே நமோ நம
     
     
    ஓம் சீதள வாரிஜ பதா நமோ நம
    ஓம் நாரத கீத வினோதா நமோ நம
    ஓம் சேவல மாமயில் ப்ரீதா நமோ நம
    ஓம் மறைசாரா தேடுஞ் சேகரமான ப்ரதாபா நமோ நம
    ஓம் ஆகமசார சொரூபா நமோ நம
    ஓம் தேவர்கள் சேனை மகீபா நமோ நம
    ஓம் க்தி தோயப் பாதக நீவு குடாரா நமோ நம
    ஓம் மாவசிரேச கடோரா நமோ நம
    ஓம் பாரினிலே ஜய வீரா நமோ நம
    ஓம் மலைமாது பார்வதியால் தரு பாலா நமோ நம
    ஓம் நாவல ஞான மனோலா நமோ நம
    ஓம் பால குமார சுவாமீ நமோ நம
     
  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    திருப்புகழ் ஸ்ரீ முருகன் போற்றிகள் - 2
     
    ஓம் வேத மந்த்ர சொரூபா நமோ நம
    ஓம் ஞான பண்தித ஸ்வாமீ நமோ நம
    ஓம் வெகு கோடி நாமசம்பு குமாரா நமோ நம
    ஓம் போக அந்தரி பாலா நமோ நம
    ஓம் நாகபந்த மயூரா நமோ நம
    ஓம் பரசூரர் சேததண்ட நிநோதா நமோ நம
    ஓம் கீத கிண்கிணி பாதா நமோ நம
    ஓம் தீர சம்ப்ரம வீரா நமோ நம
    ஓம் கிரிராஜ தீபமங்கள ஜோதீ நமோ நம
    ஓம் தூய அம்பல லீலா நமோ நம
    ஓம் தேவகுஞ்சரி பாகா நமோ நம
    ஓம் நீதி தங்கிய தேவா நமோ நம
     
     
    ஓம் பூதலந்தனை யாள்வாய் நமோ நம
    ஓம் பணியாவும் பூணுகின்ற பிரானே நமோ நம
    ஓம் வேடர் தங்கொடிமாலா நமோ நம
    ஓம் போதவன் புக சாமீ நமோ நம
    ஓம் அரிதான வேத மந்திர ரூபா நமோ நம
    ஓம் ஞான பண்டித நாதா நமோ நம
    ஓம் வீர கண்டை கொள் தாளா நமோ நம
    ஓம் அழகான மேனி தங்கிய வேளே நமோ நம
    ஓம் வானபைந்தொதி வாழ்வே நமோ நம
    ஓம் வீறுகொண்ட விசாகா நமோ நம
    ஓம் சிவசிவ ஹரஹர தேவா நமோ நம
    ஓம் தரிசன பரகதி ஆனாய் நமோ நம
     
     
    ஓம் திசையினு மிசையினும் வாழ்வே நமோ நம
    ஓம் செஞ்சொல் சேரும் திருதரு க்லவி மணாளா நமோ நம
    ஓம் திரிபுர மெரிசெய்த கோவே நமோ நம
    ஓம் ஜெயஜெய ஹரஹர தேவா நமோ நம
    ஓம் உம்பர்கள் ஸ்வாமீ நமோ நம
    ஓம் எம்பெருமானே நமோ நம
    ஓம் ஒண்டொடி மோகா நமோ நம
    ஓம் சரவண ஜாதா நமோ நம
    ஓம் சத தள பாதா நமோ நம
    ஓம் கருணைய தீதா நமோ நம
    ஓம் அபிராமி தருணக தீரா நமோ நம
    ஓம் நிருபமர் வீரா நமோ நம
     
  7. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    திருப்புகழ் ஸ்ரீ முருகன் போற்றிகள் - 3

    ஓம் சமதள ஊரா நமோ நம
    ஓம் ஜகதீச பரம சொரூபா நமோ நம
    ஓம் சுரர் பதி பூபர் நமோ நம
    ஓம் பரிமள நீபா நமோ நம
    ஓம் உமைகாளி பகவதி பாலா நமோ நம
    ஓம் இகபரமூலா நமோ நம
    ஓம் பவுருஷ சீலா நமோ நம
    ஓம் சத்தி பாணீ நமோ நம
    ஓம் முத்தி ஞானீ நமோ நம
    ஓம் தத்வ ஆதீ நமோ நம
    ஓம் விந்து நாத சத்து ரூபா நமோ நம
    ஓம் ரத்ன தீபா நமோ நம
     
     
     
    ஓம் தற்பர தாபா நமோ நம
    ஓம் சிங்கார ரூப மயில் வாஹன நமோ நம
    ஓம் கந்தகுமார சிவ தேசிக நமோ நம
    ஓம் சிந்தூர பார்வதி சுதாகர நமோ நம
    ஓம் விருதோதை சிந்தான சோதி கதிவேலவ நமோ நம
    ஓம் கங்காள வேணிகுரு வானவ நமோ நம
    ஓம் அரிமரு கோனே நமோ நம
    ஓம் அறுதியிலானே நமோ நம
    ஓம் அறுமுக வேளை நமோ நம
    ஓம் அரகர சேயே நமோ நம
    ஓம் இமையவர் வாழ்வே நமோ நம
    ஓம் அருண சொரூபா நமோ நம
     
     
    ஓம் தென்பரங் குன்றுறை தேவா நமோ நம
    ஓம் செந்திலம் பதிவாளர் சேயே நமோ நம
    ஓம் தென்பழனி மலை மேவுதீரா நமோ நம
    ஓம் திருவே ரகத்திலுறை தேனே நமோ நம
    ஓம் குன்றுதோ றாடல்புரி குமரா நமோ நம
    ஓம் பழமுதிர் சோலை வளர் பதியே நமோ நம
    ஓம் மயில்மிசை வருமொரு வரதா நமோ நம
    ஓம் சேகர வாரண வேல்வீரா நமோ நம
    ஓம் மைவருகங் கடத்தர் மைந்தா நமோ நம
    ஓம் குருவாய் வருவாய் குகனே நமோ நம
     
  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: Exclusive tamil shlokas

    முருகன் துணயிருப்பான்:

    முருகப் பெருமானை வணங்குவோர் நாளும் கோளும் பற்றி கவலை கொள்ள வேண்டாம். உண்டாகும் துன்பங்களிலிருந்து விடுபட எளிய அருமையான வழியும் இருக்கிறது. கந்தர் அலங்காரப் பாடல் ஒன்று இதற்கு சாட்சி. இதோ அப்பாடல்:
     
    நாளென் செயும் வினை தான் என் செய்யும் எனை நாடி வந்த
    கோளென் செயும் கொடுங்கூற்றென் செயும் குமரசர் இரு
    தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
    தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

    இந்தப் பாடலுக்குள்ளேயே அனைத்தும் அடங்கி விடுகின்றன.

    இந்தப் பாடலின் பொருள்:

    நாளென் செயும் - அஷ்டமி, நவமி போன்ற நாட்கள் நம்மை என்ன செய்யும்?

    வினை தான் என் செய்யும் - தீய வினைகள் போன்ற கர்ம வினைகள் தான் நம்மை என்ன செய்யும்?

    கொடுங்கூற்றென் செயும் - கொடிய யமன் தான் என்ன செய்ய முடியும்?
     
    குமரேசர் - குமரக் கடவுளாகிய முருகப் பெருமானின்

    இரு தாளும் - திருப் பாதங்களும் (2)
     
    சிலம்பும் - பாதத்தில் அணிந்திருக்கும் சிலம்பணியும் (2)
     
    சதங்கையும் - சலங்கைகள் இரண்டும் (2)
     
    தண்டையும் - தண்டைகளும் (2)
     
     
    சண்முகமும் - ஆறு முகங்களும் (6)
     
     
    தோளும் - பன்னிரண்டு தோள்களும் (12)
     
     
    கடம்பும் - மார்பில் ஆடும் கடம்ப மலர் மாலையும் (1)
     
    ஆக 27ம் எனக்கு முன்னே வந்து அருள் பாலிக்கும்போது நான் ஏன் நாளையும், கோளையும் கண்டு பயப்பட வேண்டும் என்கிறார், இப்பாடலாசிரியர் அருணகிரி நாதர்.
    இந்தப் பாடலைப் பாடினால், குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி பற்றியெல்லாம் கவலையில்லை.
    வேலவன் பாதுகாப்பான். 27 நட்சத்திரங்களில், எதில் பிறந்திருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை.
     
Thread Status:
Not open for further replies.

Share This Page