நவராத்ரி - முப்பெருந்தேவியர் அர்ச்சனை

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Oct 2, 2010.

Thread Status:
Not open for further replies.
  1. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Last edited: Oct 3, 2010
  2. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    துர்கா அர்ச்சனை:

    ஓம் துர்கையே போற்றி
    ஓம் அன்னையே போற்றி
    ஓம் அக்னீச்வரியே போற்றி
    ஓம் அஷ்டமி நாயகியே போற்றி
    ஓம் அவதூறு ஒழிப்பவளே போற்றி
    ஓம் அசுரர்க்கு எமனே போற்றி
    ஓம் அன்பர்க்கு எளியவளே போற்றி
    ஓம் அமரரைக் காப்பவளே போற்றி
    ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
    ஓம் அறக்காவலே போற்றி
    ஓம் அபயகரத்தாளே போற்றி
    ஓம் ஆதார சக்தியே போற்றி

    ஓம் இறைவியே போற்றி
    ஓம் இச்சா சக்தியே போற்றி
    ஓம் ஈர்ப்பவளே போற்றி
    ஓம் ஈடிலாளே போற்றி
    ஓம் உக்ர தேவதையே போற்றி
    ஓம் உன்மத்த பங்கியே போற்றி
    ஓம் எண் கரத்தாளே போற்றி
    ஓம் எட்டாக் குழலியே போற்றி
    ஓம் எலுமிச்சை விரும்பியே போற்றி
    ஓம் எதிர்ப்பைக் குலைப்பவளே போற்றி
    ஓம் ஏழ்மையகற்றுபவளே போற்றி
    ஓம் ஏவல் குலைப்பவளே போற்றி

    ஓம் ஒளிர்பவளே போற்றி
    ஓம் ஓங்காரியே போற்றி
    ஓம் கம்பீர உருவமே போற்றி
    ஓம் கவலையறச் செய்பவளே போற்றி
    ஓம் காளியே போற்றி
    ஓம் கதாயுத தாரியே போற்றி
    ஓம் காபாலியே போற்றி
    ஓம் காப்பவளே போற்றி
    ஓம் கிரிதுர்கையே போற்றி
    ஓம் கிருஷ்ண சோதரியே போற்றி
    ஓம் குமாரியே போற்றி
    ஓம் குறு நகையளே போற்றி
     
     
     
     
     
     
     
  3. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    துர்கா அர்ச்சனை:-2

    ஓம் குங்குமப் பிரியையே போற்றி
    ஓம் குலக் காவலே போற்றி
    ஓம் க்ரியா சக்தியே போற்றி
    ஓம் கோள் வினை தீர்ப்பவளே போற்றி
    ஓம் சசண்டிகேசுவரியே போற்றி
    ஓம் சர்வ சக்தியே போற்றி
    ஓம் சந்தனப் பிரியையே போற்றி
    ஓம் சர்வாலங்காரியே போற்றி
    ஓம் சாமுண்டியே போற்றி
    ஓம் ஸர்வாயுத தாரியே போற்றி
    ஓம் சிவ துர்கையே போற்றி
    ஓம் சினவேல் கண்ணியே போற்றி

    ஓம் சிம்ம வாஹினியே போற்றி
    ஓம் சித்தி அளிப்பவளே போற்றி
    ஓம் சியாமளையே போற்றி
    ஓம் சீதளையே போற்றி
    ஓம் செம்மேனியளே போற்றி
    ஓம் செவ்வண்ணப் பிரியையே போற்றி
    ஓம் ஜயதேவியே போற்றி
    ஓம் ஜோதிக் கனலே போற்றி
    ஓம் ஞான சக்தியே போற்றி
    ஓம் ஞாலக் காவலே போற்றி
    ஓம் தற்பரமே போற்றி
    ஓம் தயாபரியே போற்றி

    ஓம் திருவுருவே போற்றி
    ஓம் திரிசூலியே போற்றி
    ஓம் தீதழிப்பவளே போற்றி
    ஓம் தீனர்க் காவலே போற்றி
    ஓம் துட்டர்க்குத் தீயே போற்றி
    ஓம் துர்கனை அழித்தவளே போற்றி
    ஓம் துக்கம் தீர்ப்பவளே போற்றி
    ஓம் நலமளிப்பவளே போற்றி
    ஓம் நந்தர்க் குலக் கொழுந்தே போற்றி
    ஓம் நவசக்தியே போற்றி
    ஓம் ந்வகோணத் துறைபவளே போற்றி
    ஓம் நிமலையே போற்றி
     
  4. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    துர்கா அர்ச்சனை: - 3

    ஓம் நிலவணியாளே போற்றி
    ஓம் நிறைவே போற்றி
    ஓம் நிறைந்தவளே போற்றி
    ஓம் படைத்தவளே போற்றி
    ஓம் பாலிப்பவளே போற்றி
    ஓம் பயிரவியே போற்றி
    ஓம் பயநாசினியே போற்றி
    ஓம் பிரம்மசாரிணியே போற்றி
    ஓம் பயங்கரியே போற்றி
    ஓம் புவனேசுவரியே போற்றி
    ஓம் பூஜிக்கப் படுபவளே போற்றி
    ஓம் மலநாசினியே போற்றி

    ஓம் மஹிஷாசுர மர்த்தனியே போற்றி
    ஓம் மங்கலவடிவே போற்றி
    ஓம் மஹேச்வரியே போற்றி
    ஓம் மங்கயர்க்கரசியே போற்றி
    ஓம் மகவளிப்பவளே போற்றி
    ஓம் மாதர் துணையே போற்றி
    ஓம் மாங்கல்யம் காப்பவளே போற்றி
    ஓம் முக்கண்ணியே போற்றி
    ஓம் முக்தியளிப்பவளே போற்றி
    ஓம் மூத்தவளே போற்றி
    ஓம் மூலப்பொருளே போற்றி
    ஓம் மூவுலகத் தாயே போற்றி

    ஓம் மூவுலகும் வென்றவளே போற்றி
    ஓம் யசோத புத்ரியே போற்றி
    ஓம் யமபயம் தீர்ப்பவளே போற்றி
    ஓம் ராகுகால தேவதையே போற்றி
    ஓம் ரௌத்திரியே போற்றி
    ஓம் வல்லவளே போற்றி
    ஓம் வாராஹியே போற்றி
    ஓம் வீர உருவமே போற்றி
    ஓம் விஷ்ணு துர்கையே போற்றி
    ஓம் வையகக் காப்பே போற்றி
    ஓம் வைஷ்ணவியே போற்றி
    ஓம் வெற்றியளிப்பவளே போற்றி
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
  5. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    திருமகள் அர்ச்சனை - 1

    :
    This is different from the one already posted in
    Goddess Lakshmi 108 Potris (post160)
     
    திருமா மகளே செல்வி போற்றி
    திருமால் உளத்தில் திகழ்வாய் போற்றி
    திருப் பாற் கடல்வரு தேவே போற்றி
    இருநல மக்கள் இறைவீ போற்றி
    அருளே உருவாய் அமைந்தாய் போற்றி
    மருநிறை மலரில் வாழ்வாய் போற்றி
    குருவென ஞானம் கொடுப்பாய் போற்றி
    இருளொழித் தின்பம் ஈவோய் போற்றி
    அருள்பொழிந் தெம்மை ஆள்வாய் போற்றி
    தெருள்தரு அறிவின் திறனே போற்றி
    ஆறுதல் எமக்கிங் களிப்பாய் போற்றி
    சீறுதல் கொள்ளாத் திருவே போற்றி
     
    ஊக்கம தளிக்கும் உருவே போற்றி
    ஆக்கமும் ஈயும் அன்னாய் போற்றி
    இறைவி வலப்பால் இருப்பாய் போற்றி
    பொறையுடன் உயிரைப் புணர்ப்போய் போற்றி
    அன்பினைக் காட்டும் ஆயே போற்றி
    வன்பினை என்றும் வழங்காய் போற்றி
    பனிமதி உடன் வருவாய் போற்றி
    கனியிலும் இனிய கமலை போற்றி
    நிமலனை என்றும் நீங்காய் போற்றி
    கமலம் துதித்த கன்னி போற்றி
    குற்றம் ஓராக் குன்றே போற்றி
    செற்றம் கொள்ளாச் சிறப்போய் போற்றி
     
    அன்னை யென்ன அணைப்போய் போற்றி
    தன்னிகர்த் தாளைத் தருவோய் போற்றி
    மாயனாம் மலர்க்கு மணமே போற்றி
    நேயமுற்றவனை நீங்காய் போற்றி
    இறைவியாய் எங்கணும் இருப்போய் போற்றி
    மறைமொழி வழங்கும் மாண்பே போற்றி
    மாலினைக் கதியாய் மதித்தோய் போற்றி
    சீலஞ் செறிந்த சீதா போற்றி
    அன்பருக் கருள்புரி அருட்கடல் போற்றி
    இன்பம் அருளும் எந்தாய் போற்றி
    அச்சுதன் காதல் ஆர்வோய் போற்றி
    எச்சுவை தனையும் ஈவோய் போற்றி
     
  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    திருமகள் அர்ச்சனை - 2

    பூதலத் தன்று போந்தாய் போற்றி
    தீதெலாம் தீர்க்கும் திருவே போற்றி
    இலங்கை யிற்சிறை இருந்தோய் போற்றி
    நிலங்கொள் நீர்மை நிறைவே போற்றி
    திரிசடை நட்பைத் தேர்ந்தோய் போற்றி
    பரிவுடையவர்பால் பரிவினாய் போற்றி
    குரங்கினைக் கண்டு குளிர்ந்தோய் போற்றி
    வரங்கள் அவர்க்கு வழங்கினை போற்றி
    அரக்கியர்க் கபயம் அளித்தோய் போற்றி
    இரக்கமாய் ஒன்றிற் கிருப்பிடம் போற்றி
    இராவணற் கிதமே இசைத்தோய் போற்றி
    இராமரக் குரிய இன்பே போற்றி
     
    கணவனை அடைந்து களித்தோய் போற்றி
    குணநிதி யாகக் குலவினாய் போற்றி
    அரசியாய் அயோத்திக் கானாய் போற்றி
    ம்ரசொலி அந்நகர் முதல்வி போற்றி
    உருக்கு மணியாய் உதித்தோய் போற்றி
    செருக்கொழித் தொளிரும் செய்யாய் போற்றி
    சிசுபா லன்தனைச் செற்றோய் போற்றி
    பசுநிரை மேய்ப்போன் பாரியே போற்றி
    பத்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
    எத்திக் குந்துதி எந்தாய் போற்றி
    மாலின் சினத்தை மறைப்போய் போற்றி
    மேலருள் புரிய விளம்புவோய் போற்றி
     
    மாதவ னோடு வாழ்வாய் போற்றி
    ஆதவன் ஒளிபோன் றமைந்தாய் போற்றி
    சேதனர் பொருட்டுச் சேர்வாய் போற்றி
    பாதகம் தீர்க்கப் பகர்வோய் போற்றி
    நாதனுக் கருஞ்சொல் நவில்வோய் போற்றி
    ஏதயில் பொன் னென இலங்குவோய் போற்றி
    தக்கென ஓதும் தாயே போற்றி
    மக்களின் இன்னலை மாய்ப்போய் போற்றி
    பக்கலின் இருக்கும் பணி மொழி போற்றி
    துக்கம் ஒழியச் சொல்வோய் போற்றி
    அஞ்சலென் றருளும் அன்பே போற்றி
    தஞ்சமென் றவரைச் சார்வோய் போற்றி
     
  7. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    திருமகள் அர்ச்சனை - 3

    பங்கயத் துறையும் பாவாய் போற்றி
    செங்கண்ணன் மார்பில் திகழ்வோய் போற்றி
    தன்ணருள் கொண்டுயிர் காப்போய் போற்றி
    எண்ணறு் நலந்தரும் எம்மன்னை போற்றி
    நான்கிரு நாமம் நயந்தோய் போற்றி
    வான்மிகு பெருமை வாய்ந்தோய் போற்றி
    வெற்றியைத் தருமோர் விமலை போற்றி
    அர்றவ அடையும் அரும்பொருள் போற்றி
    வரமளித் தூக்கும் வாழ்வே போற்றி
    உரமதை ஊட்டும் உறவே போற்றி
    செல்வமிக் காக்கும் தேவி போற்றி
    அல்லலை ஒழிக்கும் அருளே போற்றி
     
    வீரம் விளைக்கும் வித்தே போற்றி
    காரன பூதன் கருத்தே போற்றி
    பண்பினை வளர்க்கும் பயனே போற்றி
    நண்பாய் அறிஞர்பால் நன்ணுவோய் போற்றி
    எண்ணினுள் என்ணே இசையே போற்றி
    கண்ணினுள் மணியே கருத்தே போற்றி
    அறிவினுள் அறிவாம் அன்னே போற்றி
    நெறியினுள் நெறியாம் நிலையே போற்றி
    உணர்வினுள் உணர்வாம் உருவே போற்றி
    குணத்தினுள் குணமாம் குன்றே போற்றி
    கருத்தினுள் கருத்தாய்க் கலந்தோய் போற்றி
    அருத்தியை ஆக்கும் அறிவே போற்றி
     
    தமிழினிக் கினிமை தருவோய் போற்றி
    அமிழ்தினும் இனிய ஆயே போற்றி
    பதின்மர் பாடலில் புதிவோய் போற்றி
    துதியாய் நூலினுள் துதைந்தோய் போற்றி
    தொண்டரின் தொண்டுளம் சேர்ப்போய் போற்றி
    அண்டர் போற்றும் அமலை போற்றி
    நாரணர்க் கினிய நல்லோய் போற்றி
    மாரனைப் பெர்ற மாதே போற்றி
    உலகிடைப் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
    நலமெலாம் உயிர்க்கு நல்குக போற்றி
    எங்களுக் கின்னருள் ஈந்தருள் போற்றி
    மங்கலத் திருநின் மலரடி போற்றி
     
     
     
     
     
     
     

     
     
     
     
     
     
     
     
     
     
     
  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சரஸ்வதி அர்ச்சனை:-1

    ஓம் அறிவுருவே போற்றி
    ஓம் அறியாமை அழிப்பவளே போற்றி
    ஓம் அண்டினோர்க்கு எளியவளே போற்றி
    ஓம் அநுபூதி அருள்பவளே போற்றி
    ஓம் அறிவுக்கடலே போற்றி
    ஓம் அளத்தற்கரியவளே போற்றி
    ஓம் அன்ன வாஹினியே போற்றி
    ஓம் அகிலலோக குருவே போற்றி
    ஓம் அருள்பவளே போற்றி
    ஓம் ஆசானாய் அருகில் இருப்பவளே போற்றி
    ஓம் ஆனந்த ரூபியே போற்றி
    ஓம் ஆதார சக்தியே போற்றி
     
    ஓம் இறைவியே போற்றி
    ஓம் இகபர சுகமளிப்பவளே போற்றி
    ஓம் ஈறிலாளே போற்றி
    ஓம் ஈடேற்றுபவளே போற்றி
    ஓம் உண்மைப் பொருளே போற்றி
    ஓம் உவமிக்க வொண்ணாளே போற்றி
    ஓம் உய்யவழியே போற்றி
    ஓம் உய்விப்பவளே போற்றி
    ஓம் ஏடேந்தியவளே போற்றி
    ஓம் ஓங்கார வடிவே போற்றி
    ஓம் கலைக் களஞ்சியமே போற்றி
    ஓம் கற்போர் தலைவியே போற்றி
     
    ஓம் கல்விப் பொருளே போற்றி
    ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
    ஓம் கலைவாணியே போற்றி
    ஓம் கலையரசியே போற்றி
    ஓம் காட்சிக்கினியவளே போற்றி
    ஓம் காயத்ரியானவளே போற்றி
    ஓம் குருவே போற்றி
    ஓம் குறை பொறுப்பவளே போற்றி
    ஓம் குணவதியே போற்றி
    ஓம் குணங்கடந்தவளே போற்றி
    ஓம் சந்தேகம் தீர்ப்பவளே போற்றி
    ஓம் சச்சிதானந்தமே போற்றி
     
    Last edited: Oct 3, 2010
  9. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சரஸ்வதி அர்ச்சனை:-2

    ஓம் சாந்த ரூபியே போற்றி
    ஓம் சான்றோன் ஆக்குபவளே போற்றி
    ஓம் சித்தர் குருவே போற்றி
    ஓம் சித்தியளிப்பவளே போற்றி
    ஓம் சுருதிவடிவே போற்றி
    ஓம் சுத்த சிவ ஞானியே போற்றி
    ஓம் ஞான விஞ்ஞான உருவே போற்றி
    ஓம் ஞானப் பிழம்பே போற்றி
    ஓம் ஞானேஸ்வரியே போற்றி
    ஓம் ஞாலக் காவலே போற்றி
    ஓம் ஞான சக்தியே போற்றி
    ஓம் ஞானாசிரியையே போற்றி
     
     
    ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி
    ஓம் தகைமை அளிப்பவளே போற்றி
    ஓம் தஞ்சமே போற்றி
    ஓம் தயாபரியே போற்றி
    ஓம் தாயே போற்றி
    ஓம் துதிக்கப் படுபவளே போற்றி
    ஓம் நவமித தேவதையே போற்றி
    ஓம் நவராத்ரி நாயகியே போற்றி
    ஓம் நன்னெறிக் காவலே போற்றி
    ஓம் நலமளிப்பவளே போற்றி
    ஓம் நாவுக்கரசியே போற்றி
    ஓம் நாடப் படுபவளே போற்றி
     
     
    ஓம் நாட்டமளித்தருள்பவளே போற்றி
    ஓம் நான்மறை நாயகியே போற்றி
    ஓம் நாத விந்துவே போற்றி
    ஓம் நாத்வெள்ளமே போற்றி
    ஓம் நித்தியமே போற்றி
    ஓம் நிமலையே போற்றி
    ஓம் நித்தம் நினைக்கப் படுபவளே போற்றி
    ஓம் நிறைவளிப்பவளே போற்றி
    ஓம் நுண்ணியவளே போற்றி
    ஓம் நோக்கற்கரியவளே போற்றி
    ஓம் பாட்டுவிப்பவளே போற்றி
    ஓம் பாடற்பொருளே போற்றி
     
  10. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சரஸ்வதி அர்ச்சனை:-3

    ஓம் பிரணவப் பொருளே போற்றி
    ஓம் பிரம்ம ஞானியே போற்றி
    ஓம் புலவியே போற்றி
    ஓம் பூரணியே போற்றி
    ஓம் புவன நாயகியே போற்றி
    ஓம் பிறப்பழிய அருள்பவளே போற்றி
    ஓம் மனவாக்கு கடந்தவளே போற்றி
    ஓம் மஹேஸ்வரியே போற்றி
    ஓம் மங்கல வடிவே போற்றி
    ஓம் மலநாசினியே போற்றி
    ஓம் மந்திரப் பொருளே போற்றி
    ஓம் மந்திர உபதேசியே போற்றி
     
    ஓம் மாமுனியே போற்றி
    ஓம் மாயை அழிப்பவளே போற்றி
    ஓம் முற்றறிவே போற்றி
    ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி
    ஓம் மூலமந்திரமே போற்றி
    ஓம் முக்தியளிப்பவளே போற்றி
    ஓம் மேதையாக்குபவளே போற்றி
    ஓம் மேன்மையளிப்பவளே போற்றி
    ஓம் யக்ஞேஸ்வரியே போற்றி
    ஓம் யோகீஸ்வரியே போற்றி
    ஓம் வழித் துணையே போற்றி
    ஓம் வரமளிப்பவளே போற்றி
     
     
    ஓம் வாணியே போற்றி
    ஓம் வாகீஸ்வரியே போற்றி
    ஓம் வித்தகியே போற்றி
    ஓம் வித்தகனாக்குபவளே போற்றி
    ஓம் வெண்மைப் பிரியையே போற்றி
    ஓம் வெண்டாமரை வாஶியே போற்றி
    ஓம் வீ டளிப்பவளே போற்றி
    ஓம் வீ ணை ஏந்தியவளே போற்றி
    ஓம் வேதவல்லியே போற்றி
    ஓம் வேற்றுமை அழிப்பவளே போற்றி
    ஓம் சரஸ்வதியே போற்றி
    ஓம் சர்வேஸ்வரியே போற்றி
     
    1 person likes this.
Thread Status:
Not open for further replies.

Share This Page