1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Theriyaathu

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, May 23, 2015.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female

    இது மொரார்ஜி தேசாய் சொன்ன கதை.

    ஒரு ஆசிரியர் பாடம் நடத்தி முடித்ததும் மாணவர்களுக்கு home வொர்க் கொடுத்தார்.மறு நாள் எல்லோரும் home work

    செய்து கொண்டு வந்தனர்.ஒரே ஒரு பையன் மட்டும் செய்து வரவில்லை.

    காரணம் கேட்டதற்கு " என்னாலே முடியலே.அதனாலேதான் செஞ்சுகிட்டு வரலே "என்றான் பையன்.வாத்யார் உடனே பையனைப் பார்த்து "போய் ஒரு பிரம்பைக் கொண்டு வா " என்றார்..பையன் பயந்துகொண் டே போய் பிரம்பை எடுத்து வந்தான்.

    ஆசிரியர் பிரம்பை வாங்கிப் பையனிடமே திருப்பிக் கொடுத்து விட்டு சொன்னார் "நான் எல்லா பையன்களுக்கும் சரியா கவனித்து சொல்லிக் கொடுத்திருக்கேன்.உன்னை மட்டும் கவனிக்காமல் விட்டிருக்கேன். தவறு என் மீது தான்.இந்த பிரம்பாலே என் கையில் இரண்டு அடி கொடு " என்றார்.பையன் தயங்கினான். ஆசிரியர் விடவில்லை. வற்புறுத்தி இரண்டு அடி வாங்கிக் கொண்டார். அன்று முதல் மாணவன் ஒழுங்காக home work செய்தான்.

    ஆசிரியர்கள் ஒவ்வொருவர் ஒரு விதம்.பொதுவா ஆசிரியர் கேள்வி கேட்பார். மாணவர் பதில் சொல்வார்கள்.கேள்விக்குத் தகுந்த பதிலாக இல்லாவிட்டால் செம அடி கிடைக்கும்.

    ஒரு ஆசிரியர் அனாவசியமாக மாணவர்களை அடிக்க விரும்புவதில்லை .பதிலுக்குத் தகுந்த கேள்வியாக மாற்றிவிடுவார்.

    அவருடைய வகுப்பில் ஒரு மாணவன் எந்த கேள்வி கேட்டாலும்'தெரியாது' என்றே பதில் சொல்வான்.

    ஒரு நாள் திடீரென்று inspector வந்து விட்டார். திரு திருவென்று முழித்த இந்த மாணவனை சுட்டிக் காட்டி அவனிடம் 'கேள்வி கேளுங்க' என்றார்.

    எதைக் கேட்டாலும் தெரியாது என்றுதான் சொல்லுவான்.


    ஆசிரியர் சாமர்த்தியமாக

    தெரியும்' என்பதற்கு எதிர்ப் பதம் 'என்ன என்று வினவவும் பையன் உடனே 'தெரியாது'என்றான் .'ஆல் ரைட் ' என்று சொன்ன இன்ஸ்பெக்டருக்கு எதோ சந்தேகம். 'அந்த பையனிடமே இன்னொரு கேள்வி கேளுங்க " என்றார்.

    இப்போது ஆசிரியருக்கு தர்ம சங்கடம்.இருந்தாலும் சமாளித்துக் கொண்டு'ஆந்தைக்குப் பகலில் கண் தெரியுமா" என்றார். மாணவன் உடனே " தெரியாது' என்று சொல்லவும் ஆசிரியர் பிழைத்தார்.

    இப்படிப்பட்ட சமயோசித புத்தி கொண்ட ஆசிரியரும் தேவை தான்.

    But there are instances during which the teachers were caught while saving their skin.
    In those good old days, some schools were open for 3 hours on Sundays. Normally the question that was asked by the inspector was about the shape of the earth.The teacher had 'snuff' habit.He used to bring snuff in a round box. As soon as the inspector asked the question the teacher would take out his snuff box on seeing which any student will say 'round".
    On one Sunday the teacher's wife found the box to be very dirty. She wanted to clean the box. She replaced the snuff in a flat dubba and kept it in her husband's shirt packet. On that fateful day inspector came and shot the question :what is the shape of the earth"The teacher confidently took out the snuff box.
    A brilliant student stood up and answered " it is flat on Sunday and round on all other days".

    Jayasala 42














    __._,_.___

    [HR][/HR]






    .


    [​IMG]
    [​IMG] __,_._,___
     
    sindmani and kaniths like this.

Share This Page