1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Ellum enneyum

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Apr 21, 2015.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,571
    Trophy Points:
    438
    Gender:
    Female








    எள் +நெய் தான் எண்ணெய் ஆயிற்று. எண்ணெய் என்ற சொல் நல்லெண்ணெயை மட்டுமே குறிக்கும்.தூய தமிழில் தேங்காய் நெய், கடலை நெய் என்று எழுதுவதே சரி என்று தமிழ்ப் பேராசிரியர்கள் கருதுகிறார்கள்.

    சமீபத்தில் கடவுளரும் நல்லெண்ணெயும் என்ற தொகுப்பினைப் படிக்க நேர்ந்தது.கிட்டத்தட்ட 150 கோவில்களை ஆராய்ந்து அவற்றில் வருடத்துக்கு எவ்வளவு நல்லெண்ணெய் அபிஷேகத்துக்கும், விளக்கெரிக்கவும் செலவாகிறது என்று குறிப்பு எழுதப்பட்டது.ஒரு நாளுக்கு 3 லிட்டர் முதல் 6 லிட்டர் வரை எண்ணெய் செலவாகிறதாம். திருவரங்கம் போன்ற பெரிய கோவில்களிலும், தஞ்சாவூர் போன்ற பெரிய விக்ரகங்கள் உள்ள கோவில்களிலும் அபிஷேகத்துக்கு 15 லிட்டரும் ,ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தைலக் காப்புக்கு சுமார் 100 லிட்டர் எண்ணெய் தேவையாம்.

    அப்படி என்ன நல்லெண்ணெய் உசத்தி?எள்ளுக்கு அப்படி என்ன மஹத்துவம்?

    முதிர்ச்சி அடைந்ததும் தானாகவே வெடித்துச் சிதறுவது எள் .அனைத்து எண்ணெய் வித்துக்களையும் விட அதிக அளவில் நெய் வழங்குவது எள் தான்.

    எள் காச்யப முனிவரின் உடலிலிருந்து தோன்றினதாக ஒரு வரலாறு.

    விஷ்ணுவின் வியர்வையிலிருந்து எள் தோன்றினதால் ஒவ்வொரு எள்ளிலும் லக்ஷ்மி வாசம் செய்வதாக ஐதீகம்.

    கச்யபரும் சநீச்வர் பகவானும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர் ஆதலின்,எள் சனிக்கு உகந்த தாகக் கருதப் படுகிறது.

    எள்ளின் மற்றொரு முக்ய அம்சம் ,அது சாத்வீக குணத்தை உறிஞ்சி ,ரஜஸ்,தமஸ் போன்ற எதிர்மறை சக்திகளை அழிக்கும் .

    தர்ப்பண த்தின்போது உபயோகிக்கும் எள்ளின் துகள்கள் வீடு முழுதும் positive energy யை ஸ்தாபித்து, முன்னோர்களை நற்கதி அடையச் செய்யவும்,குடும்ப நலன்களை அதிகரிப்பதாகவும் கூறுகின்றனர்.இதே காரணத்தை முன்னிட்டு ஏழரை சனி, அஷ்டம சனி தசை காலங்களில் எள் சாதம் விநியோகிக்கப் படுகிறது.



    எள்ளின் எல்லா சிறப்பும் sesame oil எனப்படும் நல்லெண்ணெய் க்கும் உண்டு.

    ஆரோக்யக் கண்ணோட்டத்திலும் முதல் மார்க் நல்லெண்ணெய்க்குத்தான் .

    முன் காலத்தில் வீரத்துக்கு முதலிடம் தரும் காலம். கட்டிளம் காளைகளைப பந்தியில் அமர்த்திப் பழைய சோறும், ஒரு பிடி எள்ளும் கல த்தில் வைப்பார்கள். யார் தன கைபலம் கொண்டு எள்ளைப் பிழிந்து அதிக பக்ஷ எண்ணெய் எடுக்கிறானோ, அவனுக்குத் தான் பெண்ணைக் கொடுப்பார்கள்.

    விளக்கேற்றறு வதன் நோக்கமே vibration உண்டு பண்ணுவதுதான்.

    The very purpose will be defeated if any other cheap oil is used.


    இவ்வளவு சின்ன எள்ளுக்கு எத்தனை சிறப்பு!














    Jayasala 42
     
    1 person likes this.
    Loading...

  2. joylokhi

    joylokhi Platinum IL'ite

    Messages:
    1,729
    Likes Received:
    2,527
    Trophy Points:
    285
    Gender:
    Female
    Dear Jayasala ma'am,
    Nice reading about 'ellum-yennaiyum'. Although we know the basics, you bring out interesting detailed information in your posts. Have started looking forward to your posts in the 'recent posts' column of late:) Although i'm a tamilian, having been in cities other than south in childhood and not studied tamil as a subject in school, i feel i have missed out on a lot of tamil literature /classics. In fact i started learning to read tamil after i passed out of college in calcutta, just to read tamil magazines which are a wealth of information of day to day religious / cultural activities. Now, i can read tamil but have not learnt to write.
     
  3. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,571
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thank you Joylokhi for your response.

    Jayasala 42
     

Share This Page