1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

soorai thengaai

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Apr 17, 2015.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female

    Breaking of coconut is comparable to annihilation of ahankara.


    மேலும் எந்த செயலைத் தொடங்கினாலும் கள பலி கொடுப்பது அந்த காலத்து வழக்கம்.நர பலி தருவது கூடாது. மனித உடலைப் போன்று இருக்கும் ஒன்றைத் தியாகம் செய்வது கடினம் இல்லை. தேங்காயின் புற மட்டை மனிதத் தோல்,நார்ப் பகுதி நரம்பு மண்டலம்,ஓடு எலும்பு மண்டலம், இளநீர் ரத்தம்,சாப்பிடப் படும் பகுதி- சதை.3 கண்கள், ஒரு குடுமி.மனித உடலை ஒத்து இருக்கும் தேங்காயை உடைத்து வழிபாட்டைத் தொடங்கினர்.

    தேங்காய் எனும் சொல் (தேகம் +காய் )என்பது மருவி வந்திருக்கலாம் என்று சொல்லப் படுகிறது.

    சூறைத் தேங்காய் குறித்து விநாயக புராணம் கூறும் தகவல்.

    காசியபர், அதிதியின் தவப் பயனால் விநாயகர் அவர்களுக்குப் புதல்வராகத் தோன்றினார்.பையனுக்கு 'மதோ ற்கடன் ' என்று செல்லப் பெயர் சூட்டினர்.

    காசி தேசத்து அரசன் தன புதல்வனின் திருமணத்தை நடத்தி தருமாறு கசியப முனிவரை வேண்டினான். அப்போது சாதுர்மாஸ் விரதம் என்பதால், காசியபர் தனக்குப் பதிலாக தன மகன் மதோற கடனை அனுப்பினார்.

    செல்லும்வழியில் நிறைய அரக்கர்களை அழித்த மதோற் கடன் காசி மன்னனின் அரண்மனை வாயிலை அடைந்தான்.அப்போது கூடன் என்ற அரக்கன் ஒரு பெரிய பாறையாக உருவெடுத்து அரண்மனை வாயிலை அடைத்துக் கொண்டான்.என்ன செய்வதென்று அறியாது திகைத்து நின்றபோது

    மதோற்கடன் மன்னனிடம் ஆயிரம் தேங்காய் கொணரும்படி வேண்டினான்.வீரர்களை நோக்கி ஒவ்வொரு காயாகப் பறையின் மேல் சிதறும்படி அடிக்கக் கூறினார்.


    தேங்காய்கள் அஸ்திரமாக உருமாறிப் பாறையைத் தாக்கின.வலி பொறுக்க இயலாமல் அசுரன் சுய உருவெ டுத்து பூமியில் விழவும், பூமி பிளந்து அசுரன் உடல் மறைந்தது.


    இதன் பிறகு தான் மதோற் கடன் எனும் விநாயகப் பெருமானின் திருமணத் தடையும் நீங்கி காசி தேசத்து தர்ம தத்தன் என்பவரது இரு மகள்களான சித்தி, புத்தி யை விவாஹம் செய்து கொண்டாராம்..

    விநாயகரை வேண்டிப் போடும் சூறைத் தேங்காய்கள் தடைகளை சிதறச் செய்து மறையச் செய்யும் .இந்த நம்பிக்கையில் சிதறு காய் போடும் வழக்கம் ஏற்பட்டதாம்.


    Jayasala 42









     
  2. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Dear Smt @jayasala42 ,

    Nice explanation for breaking Coconut and mythology behind the "Soorai Thengai".

    There is also one more explanation I studied some where. "Thengu" is also a name for coconut tree in classical Tamil.

    "Thengin Kai" changed as "Thengai" colloquially.

    மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
    கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்
    அடல்ஆனே றூரும் அடிக ளடிபரவி
    நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய். 2.47.6

    (Mylapore- Poompavai Thiru Pathigam by Gnana Sambadhar- Thevaram second Thirunurai 2.47.6)

    Enjoyed reading the write up on "Thengai".
     
    2 people like this.
  3. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Dear Suryakala,
    Thengu is the name in senthamizh for coconut.
    ஒரு விசித்திர விளக்கம் .

    திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்குத் தேங்காய்

    கொடுப்பது எதற்காக ?

    'தேங்குதல் ' என்றால் தங்கியிருத்தல் என்று பொருள்.

    'தேங்காய் ' என்றால் இவ்விடத்தில் தங்கி இராதே என்று பொருள் .

    திருமண வீட்டில் நம் கையில் தேங்காயைக் கொடுத்தால்

    'போய் வா' என்று கூறுவதாகப் பொருள்
    eppadi irukku intha vilakkam?
    Jayasala 42



     
    sindmani likes this.

Share This Page