1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சிட்டுக்குருவி

Discussion in 'Posts in Regional Languages' started by jskls, Mar 31, 2015.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அது ஒரு இனிமையான பரபரப்பான காலை பொழுது. அலுவலகம் செல்லும் வழியில் தரையின் மீதிருந்த வெள்ளை பனிக்கட்டிகளை பார்த்து கொண்டிருந்த பொழுது, ஒரு முள் புதரின் மீது சிறிய சிட்டுக்குருவி ஒன்று அலகில் குச்சிகளை சேர்த்து கூடு கட்ட இடம் தேடி கொண்டிருந்தது. அது இறக்கைகளை படபடத்து அங்கும் இங்கும் அந்த புதரை சுற்றி பறந்தபடி இருக்க அருகில் இன்னொரு சிட்டுக் குருவியும் அதற்க்கு உதவவுவது போல் குச்சிகளை அலகில் எடுத்து கொண்டிருந்தது. ஒரு குருவி மெதுவாக பனியின் மேல் அதன் சின்னன்சிறு மெல்லிய பாதங்களை பதிக்க, நமக்கே இந்த பனியில் கால் வைக்க முடியாத பொழுது அது எவ்வாறு பனியில் கால் வைக்கிறதென்று ஆச்சரியமாக இருந்தது.

    மனது மெல்ல கடந்த காலத்திற்க்கு சென்றது. சிறு வயதில் வெயில் காலங்களில் வீடு
    முற்றத்தில் விளக்கின் மேல் குருவிகள் கூடு கட்ட ஆரம்பிக்கும். சிறு நாட்கள் கழித்து மெல்ல கூட்டினுள் எட்டி பார்ப்போம். உள்ளே சிறு முட்டைகள் தெரிந்தால் அதனை எண்ணுவதற்க்குள் பாட்டியின் சத்தம் கேட்கும். குருவி கூட்டை கலைக்காதிருங்கள். முட்டையை தட்டிவிடாதீர்கள். (மஹாபாபா) என்று அவர் அலறுவதற்க்குள் ஓட்டம் பிடிப்போம். சிறிது நாட்கள் கழித்து மீண்டும் குருவிகள் கூட்டிர்குள் பறப்பதும், உள்ளே கீரிச் கீரிச் என்று சத்தம் எழுவதும் மீண்டும் அவை வெளியே பறப்பதும்'ஆக இருக்க, பாட்டிக்கு தெரியாமல், மெதுவாக ஏறி பார்த்தால் 3 அல்லது 4 குஞ்சுகள் கண்களை இருக்க மூடி, வாயை மட்டும் திறப்பதுமாக இருக்கும். மீண்டும் சிறிது நாட்க்களில் கூடு காலியாகிவிடும். கூடு காலியாகிவிட்டதென்று முடிவாக தெரிந்து கொண்டபின், ஆளை வைத்து பாட்டி கூட்டை அப்புறப்படுத்துவர். அந்த கூட்டை மெதுவாக ஆராய்ந்து பார்த்ததுண்டு. உள்ளே மெத்து மேத்தென்று இருக்க, அந்த குஞ்சுகள் இருந்த போதிருந்த மெல்லிய வாடை நாசிகளை வந்தடையும்.

    இக்காலத்திருக்கு மனம் திரும்ப இயற்கையில் வாழும் இந்த சின்னன்சிறு சிட்டுக்குருவிக்கு குடும்ப அமைப்பை யார் சொல்லி குடுத்தது? இரு குருவிகளும் சேர்ந்தே கூடு கட்டுகிறது. சேர்ந்தே இறை தேடி உணவளிக்கிறது. இறக்கை முளைத்ததும் பறந்து சென்று விடுகிறது. நான் உன்னை எவ்வாறு கஷ்டப்பட்டு வளர்த்தேன் என்று குஞ்சிடம் கூறுமா? தாய்/தந்தை குருவிக்கு வயதான காலத்தில் யார் இறை தேடி தருவது? எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எப்படி இருக்கிறது?
    ஏன் மனிதனால் இயற்கையிடம் இருந்து எதையும் கற்று கொள்ள முடிவதில்லை? சிட்டுக்குருவி இனத்தை அழிக்க மட்டுமே முடிந்தது
     
    4 people like this.
    Loading...

  2. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,571
    Trophy Points:
    438
    Gender:
    Female
    They live by instincts, man lives by intellect.( reasoning)That makes all the difference.
    Jayasala 42
     
    1 person likes this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    இயற்கையை அழிக்கும் மனிதனால் எப்படி இயற்கையாக வாழ முடியும்.நேசிக்க தெரிந்தவனே ஆக்க நினைப்பவன் .ஒரு சிட்டுகுருவி சொல்லும் பாடம் மிக உயர்ந்தது
     
    1 person likes this.
  4. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    a meaningful lesson for a life with out a meaning - nice one LS

    last week witnessed a few chittu kuruvis taking a shower in a small stream - just one after the other, waiting for the turn - a disciplined act it was - amazing it was
     
    1 person likes this.
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    yes, with the given intellect it would be nice if human race could make a difference for good
     
  6. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Yes, Periamma valuable lessons to be learnt from nature
     
  7. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Wonder if humans learnt some discipline too.... our traffic/commute system would say it all
     
    1 person likes this.

Share This Page