1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

aal paathi, aadai paathi

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Mar 30, 2015.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,357
    Likes Received:
    10,549
    Trophy Points:
    438
    Gender:
    Female
    'ஆள் பாதி, ஆடை பாதி ' தான்.

    உலகம் உடையின் உயர்வைக் கண்டு மதிக்கிறது.உள்ளத்தின் உயர்வை உன்னுவதில்லை .

    சிவ பெருமான் தோலாடை உடுப்பவர்.

    திருமால் பட்டாடை உடுப்பவர்.

    பாற்கடல் என்ன செய்தது.?அது கூட ஆடம்பரத்தை விரும்பியது .தோலாடை உடுக்கும் சிவனாருக்கு ஆலால விடத்தை அளித்தது.பட்டாடை உடுக்கும் பரந்தாமனுக்கு தன மகள் இலக்குமி தேவியை ஈந்தது.இந்த கருத்தை விளக்கும் -பாடல்:

    "மேலாடை இன்றிச் சபை புகுந்தால் இந்த மேதினியோர்

    நூலாயிரம் படித்தாலும் எண்ணார் ;நுவல் பாற்கடலோ

    மாலா னவரணி பொன்னாடைகண்டு மகளைத் தந்தே

    ஆலாலம் ஈந்தது தோலாடை சுற்றும் அரன் தனக்கே."

    ஒரு சமயம் அவ்வையார் மதுரையில் பாண்டிய மன்ன னுடைய திருமணத்துக்குச் சென்றார்.எளிமையான உடை உடுத்தியிருந்த ஔவையாரை அரண்மனைக் காவலர்கள் தள்ளி விட்டார்கள்.

    பாவம், மதுரையை விட்டே புறப்பட்டு விட்டார்.எதிரே சிலர் " தமிழ்த் தாயே,பாண்டிய வேந்தனின் திருமணம் சிறப்பாக நடக்கிறதாமே.தாங்கள் நல்ல விருந்துண்டு மகிழ்ந்தீர்களா?" என வினவினர்.

    அப்போது ஔவை "உண்டேன் உண்டேன் உண்டேன் 'என்று நீளமாகக் கூறினார்.

    " என்ன, விருந்து மிக பலமோ?" என்றனர்.

    உடனே ஒளவை "தெளிந்த வல்ல பாண்டியனின் மகத்தான திருமணத்திலே நான் உண்ட உயர்வை உரைக்க வேண்டுமா?" என்று ஒரு அருமையான பாடலைக் கூறினார்.

    "வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்

    துண்ட பெருக்கம் உரைக்கக் கேள் -அண்டி
    நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள் பசியினாலே

    சுருக்குண்டேன் சோறு ண்டிலேன்"

    உண்டிலாத சுவையே இவ்வாறெனில்,வயிறு நிறைய

    உண்டிருந்தால் கவிச் சுவை எப்படி இருக்கும்?

    Jayasala 42
     
    5 people like this.
    Loading...

  2. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Dear Smt @jayasala42 ,

    இளமையில் நான் படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

    ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ஒரு வங்காள சமுதாய சீர்திருத்தவாதி, அறிஞர், எளூத்தாளார். ஓரு முறை எளீய இந்திய உடையில் நண்பரான ஒரு பெரும் தனவந்தரின் இல்லத்திருமணாத்திற்குச் சென்றார். வாயில் காப்போர் அவரை அனுமதிக்கவில்லை.

    வீட்டிற்கு திரூம்பினார். ஐரோப்பிய உடை அணிந்தார். வாயில் காப்போர் சிறப்பாக வறவேற்று, விருந்து மண்டபம் அழைத்து சென்றனர். ஈஸ்வர சந்திர வத்யா சாகர் ,சட்டை, கோட், பேண்ட் பாக்கெட்டுகளில் உணவை நிறைப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர் கூடியிருந்தவர்கள்.

    நண்பர் வந்து விவரம் கேட்டார். ஈஸ்வர சந்திரர், இந்த விருந்து எனக்காக அல்ல, என் உடைக்காக என்றூ கூறவும், நண்பர் மிகவும் வருந்தி வெட்கப்பட்டார். மன்னிப்புக் கேட்டார்.

    But having said that, Dress conveys a lot. There cannot be any second opinion that one should dress according to the occasion. It can make or break one's career.
     
  3. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,357
    Likes Received:
    10,549
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thank you Suryakala,
    Thank you for reminding me of Eswar Chandra Vidya sagar.
    Yes, dress code is absolutely essential not only to display the riches but as a matter of discipline.In Western countries there is dress ethics for weddings as well as funerals.

    Jayasala 42
     
    1 person likes this.
  4. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    what great lines that conveys the message - thanks for sharing J42
     

Share This Page