1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Sangeetha vimarisanam

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Dec 20, 2014.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சங்கீத விமரிசனங்கள் எல்லாம் இப்போது ஆங்கிலத்திலேயே படித்து, கேட்டுப் பழக்கம் ஆகிவிட்டது.நன்றாக தமிழ் தெரிந்தவர்கள் கூட 'What is that raga ?'என்று கேட்பதும் எதோ தமிழில் பேசுவது கௌரவத்துக்குக் குறைவு என்று நினைப் பதும் வேதனைக்குரிய விஷயம்.


    சில தமிழ் வார்த்தைகளுக்குப் பொருத்தமான சரியான ஆங்கிலப் பதங்கள் இல்லை என்பதே உண்மை.


    படிப்பவர்கள் புரிந்து கொள்ளும்படி ஆங்கிலத்தில் விமரிசனங்கள் அமைவதில்லை. There may be luxury of words and bombastic expressions.But it is not to the reader's familiarity.

    something – “Kutcheri Kalai Kattarathu” -'கச்சேரி களை கட்டியது' என்பதை ஆங்கிலத்தில் எப்படி சொல்வது?
    'Created a musical environment' may not be a correct substitute.கிட்டத்தட்ட அதன் அர்த்தம் தொ னிக்கும்படியான வார்த்தை கூட கிட்டவில்லை.


    'சுருதி சுத்தம் ' எனும் சொல் is loosely translated as “perfect pitch” or sometimes “pure pitch” and even “good pitch alignment.”
    ஆனால் கொஞ்சங்கூட ,இம்மியளவு கூட பிசகாத ,என்ற பொருளை இந்த ஆங்கில் வார்த்தைகள் தரவில்லை.


    இன்னொரு சொல் 'MDR பிடி ',மதுரை மணி பிடி 'என்பது.. The literal substitute is “MDR catch” which is obviously far off the mark. Even “MDR phrase” என்பது கூட பொருத்தமல்ல.பிடி எனும் சொல்,ஸ்வரம், பாவம் ,மற்ற பல திறமைகளையும் உள்ளடக்கிய சொல் .



    'அழுத்தம்' என்ற மற்றொரு சொல் நினைவுக்கு வருகிறது.வார்த்தைகளின் பரிசுத்த உச்சரிப்பு, அதன் உட்பொருள் வெளிப்படுத்துவதும் 'அழுத்தம் என்ற சொல்லில் அடங்கும.

    We could never use “pressure” or “compression” or even “emphasis” to signify the word. டி.கே பட்டம்மாள், டி .கே ஜெயராமன் போன்றோரின் சங்கீதத்தை விமரிசிக்க 'அழுத்தம் ' என்ற ஒரு சொல் போதுமே.

    அதே மாதிரி 'சாரீரம் ' என்ற சொல் தனித்துவம் வாய்ந்தது
    ஆங்கிலத்தில் ‘endowed voice ability’ என்று சொல்வது கொஞ்சம் கூட பொருந்தவில்லை.

    அதே மாதிரி 'பல் லவியைப் பற்றி எழுதும்போது 'எடுப்பு'என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் இருக்க இயலாது.

    Take ,Spot என்ற வார்த்தைகள் பல்லவியையே கேவலப் படுத்துவது போல் உள்ளன.அரை இடம்,முக்கால் எடுப்பு போன்ற சொற்களுக்கு சமமான ஆங்கில வார்த்தைகள் இல்லை.


    கால பிரமாணம் என்ற சொல்லுக்கு 'tempo ' என்ற சொல்லைப் பயன்படுத்துவதும் சரியாகப் படவில்லை.


    கல்பனா ஸ்வரம் பாடும்போது 'மனோதர்மம்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.இந்த சொல்லின் ஆழம்

    'imagination ','creativity ' என்ற சொற்களுக்குக் கண்டிப்பாக இல்லை.

    முக்கியமாக உள்ள மற்றொரு சொல் 'ராகம்'

    “Ragam” is either a ‘tune’ or a ‘melody’, both are not true equivalents. 'கல்யாணி tune ' என்று சொன்னால் அந்த ராகத்திலுள்ள சில ஸ்வர பிரயோகங்களையும், சில பாடல்களையும் குறிக்குமே தவிர முழு ராக விஸ்தீரணத்தைக் குறிக்காது.


    ஆலாபனை என்ற வார்த்தையின் முழுமை
    “Expansion” and “Elaboration” என்ற சொற் களில் அடங்காது.
    'சிட்ட ஸ்வரம், நிரவல், கமகம் , பிருகா என்ற சொற்களை அப்படியே ஆங்கிலத்தில் எழுதுகிறோம்.மேலை நாட்டு சங்கீதத்தில் இந்த விவரங்கள் இல்லாததால் ஆங்கிலத்தில் சொற்கள் இல்லாமல் இருக்கலாம்.


    பாணி,பாடாந்தரம் என்ற சொற்களும் இதில் அடங்கும்.

    இன்னும் என்ன? 'சங்கதி என்று அடிக்கடி உபயோகப் படுத்தும் சொல்லை ஆங்கில்த்தில் எப்படி சொல்லுவது?


    Is it news or phrase?

    'அசட்டு சங்கதி ' என்ற சொல் தங்களுக்குள் சொல்லும் அவச் சொல் ,இதனை'bad phrase 'என்றா சொல்ல முடியும்?


    பாடகர் உழைத்துப் பாடாவிட்டால், 'பஜனை'செய்தார் என்று சொல்வோம். Can it be termed as 'devotional music?.


    ''சௌக்யம்' என்ற சொல் எவ்வளவு பொருள் பொதிந்தது?இதை comfort ,convenience என்ற சாதாரண சொற்களால் வருணிப்பது எவ்வளவு அபத்தம்?

    'விளம்ப கால சங்கீதம்' cannot be equated to 'slow pace'


    'பேஷ்,சபாஷ் என்ற வார்த்தைகளின் பரிமாணத்தை 'very good 'என்ற சொல்லால் அடக்க முடியாது.

    'கணக்கு ஸ்வரம் ',கோர்வை , குறைப்பு என்ற சங்கீத சொற்களை 'mathematical notes ,sequence ,reduction என்ற சொற்களால் குறிப்பிடுவது சரியே அல்ல,



    A “rasika” is not a mere 'listener.' The special ability to understand, appreciate and applaud is not fully encompassed in such a word.



    We do use many English words and of course, adjectives and prepositions in order to qualify for publication in an English newspaper or magazine but they are poor substitutes for the Tamil original.

    Jayasala 42

     
    Loading...

Share This Page