1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Subbudu was a horror

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Nov 27, 2014.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    The Great critic Subbudu
    --------------------------------------
    The thin unassuming music critic Subbudu lived the life of a political journalist surviving death threats,physical assaults,and law suits,tempting bribes. Reason: He made sure that his words were remembered and not the artists;
    No musician of his time escaped without being scorched by him. Here are a few examples of his arrows that emanated from his acid pen:

    Remarks are actually Subbudu's-taken from a book musical critic subbudu.
    Posted here for wider readership.
    1சாத்தூர் சுப்ரமண்யம்:
    " நீ இரங்கா எனில் புகலேது ?உருக்கமான பாபநாச சிவனின் கீர்த்தனை.
    " மரத்தின் மேல் ஏறியவனை" நீ இரங்காவிடில் காலை ஒடித்து விடுவேன்"என்று அதட்டுவதுபோல்
    இருந்தது.
    2 .செம்மங்குடி -1980
    அவசர நிலைமை கூட முடிவுக்கு வந்து விட்டது. செம்மங்குடியின் கச்சேரிக்கு முடிவே இல்லை.
    3. A . R ரஹ்மான் :
    He drowns the lyrics with gadgets.
    4. சின்ன மௌலானா :
    கீர்த்தனை பாடமே போதவில்லை.
    5 . சுதா ராணி ரகுபதி :
    நிகழ்ச்சி நிரல் நேராக இல்லை.திருக்குறள்,தேவாரம்,போன்ற அயிட்டங்களைச் சேர்த்துக் கச்சேரியை
    சோபை இழக்கச் செய்து விட்டார்.
    6 .M . D . ராமநாதன் :
    M .D . R . நாளுக்கு நாள் பெரிய சங்கீத பிரச்னை ஆகி வருகிறார்.அதல பாதாளத்தில் ஆதார சுருதி .தாள வாத்யம் கூட தத்தின் கின தோம் போட வேண்டும் .ஒரே இழுவையான
    கால பிரமாணம்.
    7 .சீர்காழி 'சரசாங்கி பாடுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை.கீழே சங்கராபரணம், மேலே மாயா மாளவ
    கௌள.ஒவ்வொரு பிரயோகத்திலும் முக்கால் ஸ்தாயி எடுத்துக் கொண்டால் தான் சரசாங்கி வெளி வரும்.இல்லாவிடில் அது ராங்கி பண்ணிக் கொண்டு ரசவாங்கி ஆகி விடும்.
    8 .மாலி :
    பதற்றமோ அவசரமோ இல்லாமல் காம்போதியை தந்தச் சிலை மாதிரி செதுக்கிக் கொண்டு வந்தார்.திடீரென்று 'நாகரீகக் கோமாளி ஆகி விட்டார்.காம்போதியா காவடிச் சிந்தா என்ற ஐயம் வந்துவிட்டது. மாலி வேலியைத் தாண்டலாமா?
    9 M .S .
    M . S . அகாடெமியில் பாடினார் என்பதைவிட நிர்வகித்தார் என்று சொல்ல வேண்டும்.
    10 .மணி கிருஷ்ணஸ்வாமி :
    அகாடெமியில் எடுத்த எடுப்பிலேயே
    இரண்டாவது பாட்டாகத் திருப்புகழ் பாடுவார்களா? இதற்கு ஸ்வர பிரஸ்தாரம் வேறு.பக்தியும் போய்,பந்தாவும் போய் முக்தியும் அமையவில்லை.
    11 .திருவள்ளூர் சுப்பிரமணியம் :
    இரண்டே தந்திகளில் கழைக் கூத்தாடுகிறார்.மந்தர ஸ்தாயியின் கம்பீரம் அவருக்குப் புரியவில்லை .ஒரு வேளைஅவருக்குக் கொடுக்கும் பணம் இரண்டு தந்திகளுக்கு மட்டுமோ ?MLV
    செலவைப் பார்க்காமல் நாலு தந்திகளுக்கும் மொத்த ரேட் பேசி விடலாம்.
    12 சோமு :
    ஆலாபனையில் ஆர்ப்பாட்டம்.ஸ்வர பிரச்தாரங்களில் தெளிவின்மை.ஒரு ஸ்தாயியில் இருக்கும்போதே தறுதலைப் பிள்ளையைப் போல் வேறு ஸ்தாயிக்கு ஓடி விடுகிறார்.அம்பலம் ஏறி எல்லோரையும் அல்லல் பட வைக்கிறார்.
    13 .ரங்காச்சாரி;
    எட்டாத சங்கதிகளை விடேன் தொடேன் என்று துரத்திப் பிடிக்க, அமிர்த வர்ஷிணி ஆலங்கட்டி மழை ஆகி விட்டது.
    14 பால முரளி :
    பிலஹிரியில் என்னென்னவோ அவியல் செய்து ரசிகர்களை வேதனைக்கு உள்ளாக்கி விட்டார்.

    நல்ல வேளை . இப்போதுள்ள பாடகர்கள் தப்பித்து விட்டார்கள். இவ்வளவு விமரிசனம் செய்த பிறகும் சுப்புடு சொன்னது " என்னுடைய எழுத்தில் காரம் இருந்தாலும் குரோதம் இருக்காது
    '.Last days of Subbudu were marked by seclusion from the art circle.He was totally ignored by many vidwans.
    It was a moving scene when President Abdul Kalam brought a beautiful rose from the Mughal garden and placed it on his favourite writer's body as desired by Subbudu himself.

    Nobody could forget the prominent board placed in front of the academy with the words" Artists, be aware. Subbudu is in the town."
    A cartoon poster depicting the artist as ghatam and Subbudu as the ghatam player still remains fresh.

    Jayasala 42
     
    1 person likes this.
    Loading...

Share This Page