1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

boomiyin Aayul

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Nov 24, 2014.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,571
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இதைப் பற்றி ஒரு கதை உண்டு.

    ப்ரும்ம தேவன் தாவரம், புழு, பூச்சி, ,பறவை, விலங்குகள் ,மனிதர்கள் என பல ஜீவ ராசிகளையும் படைத்து அவை தத்தம் செயல் பாடுகளுக்கேற்ப ஜனனம், மரணம் என்ற சக்கரச் சுழலில் இருக்கும் நிலையை உண்டாக்கினார்.

    இவற்றுக்கெல்லாம் இறுதி காலம் பற்றி சிந்தித்த பிரும்மா அதற்கும் வழி கண்டாராம். அந்த கதை சுவாரசியமானது.

    ஜீவன்களை உண்டாக்கிய ப்ரும்மா ,ஜீவன்களின் மூலாதாரமான சிவனுக்கு காசியில் சூக்ஷ்ம ரூபமாக ஒரு கோவில் உருவாக்கினாராம்.


    கோவிலில் ப்ரம்மா மூன்று தடித்த குச்சிகளை நட்டார்.முதல் குச்சியில் 64 வளையங்களை மாட்டினார்.அவை ஒன்றைவிட அடுத்தது பெரியது, அதைவிட அதற்கு அடுத்தது பெரிது..மிகப் பெரிய வளையம் குச்சியின் அடியில் இருக்கும்.மிகச் சிறிய வளையம் மேல் பகுதியில் இருக்கும், ஒரு பம்பரம் போல.

    இப்படி வளையங்களை அமைத்தபின் பூசாரிகளை அழைத்தார்.

    " இப்போது நீங்கள் நீங்கள் செய்ய வேண்டியது, முதல் குச்சியில் உள்ள வளையங்களை அப்படியே 3வது குச்சிக்கு மாற்ற வேண்டும்.

    சில நிபந்தனைகள்:-

    1.வளையங்களை மொத்தமாக மாற்றக் கூடாது.ஒவ்வொன்றாகத்தான் மாற்ற வேண்டும்

    2.எந்த காரணத்தை கொண்டும் சிறிய வளையத்தின் மீது பெரிய வளையம், தற்காலிகமாகக் கூட வைக்கக் கூடாது.

    3.இரண்டாவது குச்சியை இடைத்தட்டாக வைத்துக் கொள்ளலாம்.ஆனால் அதிலும் 2வது நிபந்தனை பின்பற்றப் பட வேண்டும்.

    4. கடைசியாக மூன்றாவது குச்சியில் மிகப் பெரிய வளையம் அடியிலும், மிகச் சிறிய வளையம் மேலேயும் இருக்க வேண்டும்.


    எல்லா வளையங்களும் மூன்றாவது குச்சிக்கு மாற்றப் பட்டதும் உலகம் அழிந்து விடும் என்றாராம்.


    அதன்படியே சூக்ஷ்ம ரூபமாக இன்றும் பூசாரிகள் வளையங்களை மாற்றிக் கொண்டு தான் இருக்கிறார்களாம்.

    சாதாரணமாக இதைப் படிப்பவர்களுக்கு " இதென்ன பிதற்றல்?ஒரு குச்சியில் உள்ள வளையங்களை ஒவ்வொன்றாக இன்னொரு குச்சிக்கு மாற்ற எத்தனை நேரம் பிடிக்கும்?இதற்கு சில மணி நேரம் போதாதா?மிஞ்சி மிஞ்சிப் போனால் சில நாள் தேவைப் படும்.இந்த கதையின் படிப் பார்த்தால் உலகம் எப்போதோ அழிந்து போயிருக்குமே : என்று தோன்றும்.

    ஆனால் உண்மை அதுவல்ல.அத்தனை வளயங்களையும் இவ்வாறு மாற்ற, ஒன்றல்ல, இரண்டல்ல, 50,000 கோடி வருஷங்கள் பிடிக்குமாம்.

    கணித சமன்பாடுகள் மூலம் ( balancing maths equations)

    இதைக் கணக்கிட்ட பல விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்களாம்.

    64 வளையங்களையும் 3வது குச்சியில் கொண்டு சேர்க்கத் தேவைப்படும் நகர்வுகள் ( moves ) என்ன தெரியுமா?

    184,467,440,7370,95,51,615 !-
    just 20 digits தான்.

    நகர்வுகளை எப்படி வருடங்களாக மாற்றினார்கள் ? சராசரி நேரமா? என்பது எனக்குப் புரியவில்ல

    வளையத்தின் விட்டம் பற்றி ஒன்றும் குறிப்பிடப் படவில்லை. அதுவும் மிகப் பெரியதாகத் தான் இருக்கும்.சில புத்தகங்களில் 4096 வளையம் என்று கொடுக்கப் பட்டுள்ளது.வரும் விடையைக் கற்பனை பண்ணவே தலை சுற்றுகிறது.


    பெரிய கணித மேதைகளும் குழம்பி விடுவார்களாம்.

    இந்த கணிதத்தின் நோக்கம் சும்மா வளையங்களை மாற்றுவது இல்லை.

    ' பரமாத்மாவுடன் ஐக்யமாதல் ' என்ற நம்முடைய உண்மை இலக்கை எட்ட பல பிறவிகள், பல ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகலாம்.அதற்கான இடைவிடாத முயற்சியே பிறவியின் நோக்கம்.

    Jayasala 42
     
    Loading...

    Similar Threads
    1. Rrg
      Replies:
      27
      Views:
      3,237

Share This Page