1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Kasappaana Inippu

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Oct 22, 2014.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இரண்டு வருடம் முன்னால் நான் மங்கையர் மலரில் எழுதி வெளியான ' எனது நிஜ அனுபவம்".

    தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்னாள் நானும் என் தோழிகளும் என்ன பக்ஷணம் பண்ணுவது என்று யோசித்துக் கொண்டிருந்தோம்.
    என்னுடைய வீட்டில் ( தனி வீடு என்பதால்) எல்லோருக்கும் சேர்த்து பக்ஷணங்கள் செய்து செலவை விகிதாசாரப்படி பகிர்ந்து கொள்ள முடிவானது.கிட்டத்தட்ட 30 பேர் தங்களுடைய தேவைகளை list எழுதிக் கொடுத்து விட்டார்கள்.
    இனிப்பு வகைகள்:லட்டு,ஜாங்கிரி,மைசூர் பாக்,பாதுஷா .கோதுமை அல்வா ,மைதா கேக் ,பர்பி
    கார வகைகள்:மிக்ஸர் ,காரசேவு ,நாடா ,முள்ளு தேன்குழல்.
    அன்று இரவு எல்லா லிஸ்டையும் ஒன்றுபடுத்தி சமையல் கார அம்பி மாமாவிடம் கொடுத்து விட்டேன்.மாமா மளிகை சாமான் விவரம் எழுதி,மாவு தயாரிப்பதற்கான விவரங்களையும் சொல்லி விட்டார்.கூடம் நிறைய மளிகை சாமான்.முந்திரி, சர்க்கரை போன்றவற்றை எறும்பு வராமல் பாது காப்பதே பெரிய கவலையாகிவிட்டது.
    மறு நாள் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு, பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் கடலைப் பருப்பு, அரிசி முதலிய சாமான்களை எடுத்துக் கொண்டு ஆட்டோவில் மிஷினுக்குப் போனேன்.மாவை ஆட்டோவில் ஏற்றும்போது பிடி கழன்று மாவு முழுதும் தெருவில் கொட்டிவிட்டது.மறுபடி கடைக்குச் சென்று பருப்பு வாங்கி அரைக்க நேர்ந்தது.
    தீபாவளிக்கு 3 நாள் முன்பு அம்பி மாமா பெரிய காஸ் அடுப்பு, வாணலி,சீனிச் சட்டி,ஜல்லிக் கரண்டி சகிதம் 2 ஆட்களுடன் ஆஜர் ஆனார்.நான் 2 நாட்களுக்கு லீவு போட்டேன்.
    ஊற வைத்த கோதுமையை க்ரைண்டரில் போட்டதும் ஒரு ராக்ஷத அலறல் .. வேறு வழியின்றி மொட்டை மாடியில் 'தேமே ' என்று வருடக் கணக்கில் கிடந்த கல்லுரலையும் ,குழவியையும் எடுத்து வந்து ,15 வருஷப் புழுதியை நீக்கிச் சுத்தம் செய்வதற்குள் 'போதும்' போதும் என்றாகிவிட்டது.
    மாமா படு சுறுசுறுப்பு.இரண்டு நாட்களுக்குள் அத்தனை பக்ஷணங்களும் ரெடி .

    பரணில் என் பெண்ணின் கல்யானத்துக்கென வாங்கி வைத்திருந்த புது எவர்சில்வர் பாத்திரங்களைக் கீழே இறக்கி ,சுற்றிலும் எறும்பு பவுடர் கோலமிட்டு, பக்ஷணங்களை அடுக்கி வைத்தாயிற்று.. மாமா தனக்குரிய பணத்தை வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.

    நான் இயல்பாகவே கணக்கெழுதும் பழக்கம் உள்ளவளாததால் ,ஒன்று விடாமல் எல்லா செலவையும்
    ( இரண்டாம் முறை பருப்பு வாங்கினது தவிர )எழுதி 30 பிரதிகள் எடுத்து வைத்தேன்.அது தவிர ஒவ்வொருவரும் தர வேண்டிய தொகைக்கும் தனி பட்டியல் தயாரித்தேன்.இரும்புச் சட்டியில் மீதமிருந்த சுட்ட எண்ணைக்கான ( சுமார் 2 கிலோ இருக்கும்) விலையையும் , மீதி இருந்த ஒன்றிரண்டு மளிகை சாமானுக்கான விலையையும் விகிதாசாரப் படி அவரவர் தொகையிலிருந்து கழித்துவிட்டேன்.
    நிகர லாபம் 20 %.
    'அப்பாடா ' என்ற நிம்மதியுடன் சமையல் அறையை நோக்கினால் எல்லா இடத்திலும் மாவு, எண்ணைப் பிசுக்கு. உயர்ந்த ரக washing powder கொண்டு சமையல் அறையை நேராக்க இரண்டு மணி நேரம் பிடித்தது.என்னுடைய போராட்டத்தைப் பார்த்துவிட்டு ஹோடலிலிருந்து டிபன் வரவழைத்து விட்டார் என் கணவர்.

    மறுநாள் என் சினேகிதிகள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர்.சில பேர் டப்பா எடுத்து வந்தனர், சிலர் அதையும் இரவல் வாங்கும் நோக்கத்தில் வந்தனர்.

    எல்லோருக்கும் காபி கொடுத்து விட்டு லிஸ்டையும் பக்ஷனத்தையும் கொடுத்தேன்.விலையைப் பார்த்துவிட்டு ஒவ்வொருவர் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே.
    " 50% லாபம் வரும் என்று எண்ணினேன். அப்படி ஒன்றும் மலிவு இல்லை.என் வீட்டிலேயே நானே செய்திருப்பேன்"

    " தலையைக் கொடுத்தாகி விட்டது. பணம் கொடுத்துத் தானே ஆகணும்?"
    " பாத்திர வாடகை, ஆட்டோ சார்ஜ் எல்லாம் வேஸ்ட் .கையில் தூக்குப் பாத்திரத்துடன் மிஷினுக்கு ஒரு பொடி நடை போட்டால் ஆயிற்று."
    இந்த மாதிரி பல விமரிசனங்கள்.
    என் தோழிகள் இருவரின் கணவர்கள் ஆடிடர்கள் .அவர்கள் "எந்த அடிப்படையில் நீங்கள் ஒவ்வொரு ஸ்வீட்டின் விலையை நிர்ணயம் செய்தீர்கள்?
    காஸ் உபயோகத்தின் விகிதாசாரம் எந்த முறையில் கணக்கிடப்பட்டது?
    ஒவ்வொரு பக்ஷண த்துக்கும் தனித்தனியே மளிகை சாமான் விலை, செய்கூலி, காஸ் விலை என்று பாகுபடுத்திக் கொடுத்தால் தான் நாங்கள் ஒப்புக் கொள்வோம் .இல்லாவிட்டால் எங்களது ஆர்டரை ரத்து செய்கிறோம்" என்று சொல்லிவிட்டுக் காரைக் கிளப்பிக் கொண்டு போய்விட்டார்கள்.அதைத் தொடர்ந்து வேறு இரண்டு தோழிகளும் சென்று விட்டனர்.
    மற்றவர் அனைவரும் அரைகுறை மனதுடன் பணத்தைக் கொடுத்து பக்ஷணத்தை எடுத்துச் சென்றனர்..
    பக்ஷணங்கள் எல்லாமே மிக நன்றாகவே இருந்தன.
    பெரிய அளவில் வேலை செய்யும்போது இப்படிக் கணக்கிடுவது சாத்தியமில்லை என்று இந்த மாமேதைகளுக்குத் தெரியாதா?இல்லை, நடிக்கிறார்களா?
    இத்தனை வேலை நடக்கும்போது ஒரு சுண்டு விரலைக் கூட அசைக்காத பெண்கள் ,Grand ஸ்வீட் கடையில் எவ்வளவு விலை சொன்னாலும் வாயே திறக்காமல் வாங்கிச் செல்லும் பெண்கள் ,இவ்வளவு கணக்கையும் ஒப்படைத்த பிறகும் எப்படிஎல்லாம் விவாதம் செய்கிறாகள் ?
    என் மாமியார் ,பாவம்,இவ்வளவு கலாட்டாவையும் பார்த்துக் கொண்டிருந்தவர் , என் மேல் பரிதாபப் பட்டு சமையல் வேலையைக் கவனிக்கச் சென்றவர் , சின்ன எண்ணை பிசுக்கில் வழுக்கி விழுந்து மறு நாளே இடுப்பில் அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டது.
    நான்கு தோழிகளின் பக்ஷண த்தைக் குழந்தைகள் காப்பகத்தில் கொடுத்து விட்டோம்.தீபாவளிக்கென்று ஊரிலிருந்து வந்த என் பிள்ளை நொந்து போய் " உனக்கு
    ஏன் அம்மா இந்த வேண்டாத வேலை என்று கடிந்து கொண்டான்.மாமியாருக்கு உடல் நலம் தேற ஒரு மாதம் பிடித்தது.
    எவ்வளவு உழைப்பு?எவ்வளவு மன உளைச்சல்?எல்லோருடைய ஏச்சுப் பேச்சுக்கும் கேள்விக் கணைகளுக்கும் ஆளானதுதான் மிச்சம்.
    காரியத்தையெல்லாம் செய்து கழுநீர்ப் பானையில் கைவிட்ட கதை ஆகிவிட்டது.
    ஒரு சின்ன விஷயம்-தீபாவளி பக்ஷண த்துக்கே இவ்வளவு ஆர்ப் பாட்டம் என்றால்,ஆட்சி பீடத்தில் உள்ளவர்களுக்கு எவ்வளவு நிர்பந்தங்கள், சிக்கல்கள் இருக்கும்?கூட்டணி தர்மம் பற்றி நம் முன்னாள் பிரதமர் கூறுவதன் பொருளை நான் உணர்ந்து கொண்டேன்.

    பொறுமையின் சிகரமான என் கணவர் அமைதியான உறுதியான குரலில் " நீ உலகத்தைப் புரிந்து கொள்ள இது ஒரு தருணம் " என்றார்.நூற்றுக்கு நூறு உண்மை.
    இதுதான் இனிப்பு உணர்த்திய கசப்புப் பாடம்.

    Jayasala 42
     
    1 person likes this.
  2. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    Your experience gives a practical demo of the hardships and the results for it.

    People have become cost conscious and not quality conscious. It won't be surprising if the Chinese come out with mass production of Indian sweets and we would buy cheap and pay a heavy price later.

    Forget the cost - people don't even appreciate the sincere efforts. Hard to digest, similar to digest the off the shelf sweets...
     
  3. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thank you GG,
    A good idea. You can invite some of your genuine friends to open'South Indian Sweet Stall'
    Our 'Grand Sweets ' will no more be grand and may vanish soon. Who knows, perhaps many of their branches recently opened are owned by the Chinese, either owned by Goodwill or by franchise.

    Jayasala 42
     
  4. sindmani

    sindmani Platinum IL'ite

    Messages:
    1,560
    Likes Received:
    1,697
    Trophy Points:
    285
    Gender:
    Female
    My god . HOW CAN PEOPLE BE SO UN _ UNDERSTANDING sometimes.
     
  5. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Idu dhaan ulagam mami.

    Nanri kettavargal.

    To be so calculative and to insult others, I find no words to express my feelings. I hope your MIL is fine and you are recovered. Never in life we end learning about others and be alarmed about their behaviour. Life long process of understanding others psychology and mean behaviour.

    thanks for sharing. Ellam poorva jenma kadanai theerukirathu thaan. That is how we have to satisfy ourselves.
     
  6. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thank you Sindmani.
    Jayasala 42
     
  7. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Dear vaidehi,
    That is life.Throughout our life time we will be learners for ever under some aspect.If we come out successful in an enterprise we will be caught unawares somewhere else.
    Even in our day to day life we may have an estimate of expenses, but we may not be not be able to know exactly what the exact cost of sambar prepared today is.
    Being brought up in a big family I have got a fair idea to give grocery list for conducting a decent marriage for two and a half days and know about many exigencies.
    When we have to meet all the expenses we can go a little bit this way or that way.We have to be extremely careful when we take responsibility for a collective venture.'Oor koodi ther izhukkum kathai thaan'.
    This also is a lesson in life.

    Jayasala 42
     
    1 person likes this.
  8. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    meegavum sari.

    Kazhatathile thaan nanbargal mattrum uravugal ethu endru theriyum.

    Vazhikaiye paalikoodam adhil naam anaivarum manarvagal.

    Katrathu kai alavu, kalaathu ulagalavu.

    Sorry I find typing in tamil like you did very difficult, so tying in tanglish.
     

Share This Page