1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Arukam Grass

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Aug 29, 2014.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அருகம் புல் -ரு or று -எனக்கு பெரிய சந்தேஹம். தமிழ் அறிஞர்கள் ஐயம் தெளிவுறச் செய்யவும்.


    அறுகு ஓரிடத்தில் முளைத்து ,கொடி போல் நீண்டு ஆறு இடங்களில் வேரூன்றிக் கிளைக்கும் தன்மையதால் அறுகம் புல் என்று பெயர் வந்ததாகத் தெரிகிறது.


    இந்த அறுகை அர்ச்சித்தால் மூலாதாரத்தில் விளங்கும் விநாயகர் ஆறு ஆதாரங்களிலும் நம்மைப் பொருந்தச் செய்து அருள் புரிவார் என யோக நூல்கள் அறிவிக்கின்றன.


    யோகிகள் கடும் யோகப் பயிற்சியால் விளையும் சூடு தணிய அறுகுக் கஷாயம் அருந்துவர்.

    யமன் மகனாகிய அனலாசுரன் இந்திராதி தேவர்களை விழுங்க் முயற்சித்தபோது விநாயகர் அனலாசுரனை விழுங்கவே அவர் திரு மேனியில் கடும் வெப்பம் எழுந்தது.


    அந்த வெப்பம் தணிய சந்திரன் குளிரமுதம் ஊட்டினான்.
    சித்தி புத்திகள் தமது குளிர்ந்த உடலால் ஒற்றினார்கள்.

    திருமால் தாமரைப் பூவால் தடவினார்.

    வருணன் குளிர்ந்த நீரால் திருமஞ்சனம் செய்வித்தான்.

    சிவா பெருமான் ஆதிசேஷனைக் கொண்டு ஒற்றச் செய்தார்.


    ஆனால் வெப்பம் தணிந்தபாடில்லை.

    எண்ணாயிரம் முனிவர்கள் ஒவ்வொருவரும் 21 அறுகை இட்ட நீரைத் தனித்தனியே சொரிந்தனர். வெப்பம் தணிந்தது.அதனால் அறுகு விநாயகருக்கு விருப்பமானது.


    பணம் செலவழித்து மலர் வாங்க இயலாதவர்கள் தரையில் கேட்பாரற்றுக் கிடக்கும் அறுகம் புல்லைப் போட்டாலும் விநாயகர் அருளுவார்.

    Jayasala 42
     
    2 people like this.
    Loading...

  2. Laxmi

    Laxmi Administrator Staff Member Platinum IL'ite

    Messages:
    4,242
    Likes Received:
    372
    Trophy Points:
    200
    Gender:
    Female
    yes I think it is the first "RU" that you have written. May be some one could clarify if they think it is other wise.

    Also thanks for sharing info about the wonder medicinal grass - arukam grass
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஜெயசாலா அருகம் புல் என்பதுவே சரி என்று நினைக்கிறேன்.பகிர்ந்தமைக்கு நன்றி .
     
  4. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அன்புள்ள பெரியம்மா , லக்ஷ்மி


    நாம் அடிக்கடி 'அருகம்புல் ' என்றே படித்து வந்துள்ளோம்.எனவே அதுவே சரியெனப் படுகிறது.நானும் 1980 வரை அப்படித்தான் நினைத்தேன்.

    திரு வாரியார் சுவாமிகளின் உரையைக் கேட்டதும் என் கருத்தை மாற்றிக் கொள்ள நேர்ந்தது.

    அறுகம்புல் என்பது காரணப் பெயர். ஆறு இடங்களில் பெயர்ந்து ஊன்றி வளருவதாலும்,ஆறு யோக நிலைகளையும் தன வயப் படுத்து பெருமை படைத்ததாலும் 'அறுகம்புல் ' என்று எழுதுவதுதான் சரி என்று கூறினார்.

    அதன் பின் தமிழ் அகராதியைப் பார்த்தபோது,'அருகு' எனும் சொல் 'near 'அல்லது அரு'அருகாமையை மட்டுமே குறிப்பது என்றும், அறுகம்புல் என்ற வார்த்தை வல்லின 'று ' வுடன் சேர்ந்த லிஸ்டில் தான் காணப் படுகிறது என்றும் தெரிந்துகொண்டேன்.

    பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி அல்லவா?

    ஜெயசாலா 42
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பெரியவர்கள் சொன்ன பின் சிறியவர்களிடம் கேட்கிறீர்களே.என்ன இது மதுரைக்கு வந்த சோதனை .ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி என்று ஒரு பழமொழியும் சொல்வார்கள் .
     
    1 person likes this.
  6. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    interesting to read.
     
  7. kalpavriksham

    kalpavriksham Gold IL'ite

    Messages:
    884
    Likes Received:
    473
    Trophy Points:
    138
    Gender:
    Female
    AAHA,

    enna arumai, enna arumai,
    ungal iruvarin thamizh nadai!

    "madhuraikku vandha sadhani,
    perimma, VEGU ARUMAI"

    varthaigal illai,
    pagirndhukolla en ennangalai

    thamizhae oru thani suvai,
    kanben adhil innimai,

    ungalruvarukkum enna oru pulamai
    ARUMAI, ARUMAI, ARUMAI!

    VANAKKAM!
     

Share This Page