1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Madras Nalla Madras

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Aug 27, 2014.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பெரிய கூடம்,முற்றம்,திண்ணை,தாழ்வாரம் என்று கிராமத்தில் பழகிய எனக்கு மதராஸ் ஒரு புதிய உலகம்.130 ரூபாயில் குடும்பம் நடத்த வேண்டிய கட்டாயம்.25 ரூபாய்க்கு மேல் வாடகை தர முடியாது
    மரினா,ரிப்பன் கட்டிடம்,கலங்கரை விளக்கம் ,செத்த காலேஜ் ,உயிர் காலேஜ் ,சினிமா என்று சுற்றினாலும் ஒரு இடத்தில் தஞ்சம் அடைய வேண்டுமே.

    கை கொடுத்தது திருவல்லிக்கேணியில் ஒண்டுக் குடித்தனம்.எட்டு குடும்பங்கள் உள்ள ஒரு வீடு.ஒரே அறை.சின்ன சமையல் ரூம்.பொதுவான இரண்டு குளியலறை கழிப்பிடங்கள்.இரண்டு பேர் சர்க்கார் உத்யோகம்.இருவர் சமையல்காரர்கள்.ஒருவர் சாஸ்திரிகள்.மூன்று பேர் கம்பெனி வேலை.ஏறத் தாழ 40 பேர்.
    கச கச சத்தம்,குழநதைகளின் கூப்பாடு,சல்லாபங்கள் ,சண்டைகள்,சமரசங்கள் எல்லாமே அம்பலத்துக்கு வரும் நிதர்சனங்கள் ,போட்டி,பொறாமை எல்லாமே சேர்ந்த ஒண்டுக் குடித்தன அனுபவம். நல்லது,பொல்லாதது எல்லாவற்றுக்கும் எல்லோரும் கூடி விடுவார்கள் .
    அன்பு,பண்பு ,sharing ,பொறுமை யாவற்றையும் கற்றுக் கொடுத்தது இந்த மெட்ராஸ் பட்டினம் தான்.சரிவர தாழ்ப்பாள் போட முடியாத கழிவறையிலும் ,குளியலறையிலும் பட்ட டென்ஷன்.
    'Engaged என்று தெரிவதற்காக வெளியில் வைக்கப்பட்டுள்ள பக்கெட்டை எடுத்துக் கொண்டு போய் விடும் சிறு பையன்களின் கொட்டம்
    கணவனுக்குத் தெரியாமல் கைக் குழந்தையைப் பக்கத்து வீட்டில் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு மாட்னி ஷோ சினிமா பார்க்கும் பெண்கள்
    ,இரண்டு ரூபாய் பொருளை
    இருபது ரூபாய் சொல்லும் அடாவடி வியாபாரிகள்,
    மூன்று ரூபாய் சாமானை இரண்டு அணாவுக்குப் பேரம் பேசும் மாமிகள்
    எல்லாம் மதராசில் தினம் கண்ட காட்சிகள்.
    வாடகை ----Rs 30
    மளிகை ----Rs 30
    [SIZE=+0]பால் -----Rs 15 [/SIZE]
    [SIZE=+0]காய் ------Rs 15 [/SIZE]
    [SIZE=+0]பஸ் சார்ஜ்+[/SIZE]
    [SIZE=+0]Entertainment ---Rs 20 [/SIZE]
    [SIZE=+0]R .D -------------Rs 10 [/SIZE]
    [SIZE=+0]Emergency Rs 10 [/SIZE]
    [SIZE=+0]என்று திட்டமிட சொல்லிக் கொடுத்தது மதராச பட்டினம்.[/SIZE]
    [SIZE=+0]இருபது வருடமாகப் பெற்றோரிடமிருந்து கற்றுக் கொள்ள முடியாத பல விஷயங்களை மூன்றே ஆண்டுகளில் மனதில் ஆழமாகப் பதிய வைத்தது மதராச பட்டினம்.[/SIZE]
    [SIZE=+0]ஒண்டுக் குடித்தனத்தில் இல்லாத விஷயங்கள் டிவி,கம்ப்யூட்டர் ,குளிர் சாதனப் பெட்டி,போன் மட்டுமல்ல,privacy யும் secrecy யும் தான்.இந்தப் புறாக் கூண்டில் உதித்த நன்மணிகள் பல நல்லாசிரியர்களாய்,பொறியியல் வல்லுனர்களாய்,அனைத்துத் துறைகளும் பிரகாசிப்பது உள்ளங்கை நெல்லிக்கனி.[/SIZE]
    [SIZE=+0]இப்போது ஒண்டுக் குடித்தனம் இல்லை.அதன் மறு பெயர் அடுக்ககம். இதில் privacy உண்டு.secrecy உண்டு .எல்லா வசதிகளும் பூரணம்.பக்கத்து வீட்டில் இருப்பவர் யாரென்றே தெரியாத வாழ்க்கை.[/SIZE]
    [SIZE=+0]இரண்டையும் பார்த்து ரசித்து,'change is the only unchangeable thing in the world'என்ற பேருண்மையை நமக்குப் புரிய வைத்த மதராசப் பட்டினத்துக்குக் கோடி வணக்கங்கள் .[/SIZE]


    மதராசை 'பட்டினம்'என்று சொல்வதுதான் எங்கள் ஊர் வழக்கம்.

    பட்டணம் தான் போகலாமடி,பொம்பளே,பணம் காசு சேக்கலாமடி
    என்ற பாட்டு தான் முதலில் நினைவுக்கு வருகிறது.எல்லா மாநிலங்களிலிருந்தும் பிழைப்புத தேடி
    வந்தவர்கள் பலர்.
    மெட்ராஸ் என்றாலே எக்மோர் ஸ்டேஷன் ,அதன் வாசலில் நின்று கொண்டிருந்த கை ரிக்ஷாக்கள் ,அவர்களது தனி பாஷை தான் மனதில் நிற்கும்.
    முதல் இரண்டு வருடங்கள் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.நாளாக ஆக,how people adapt themselves to environments,just for survival என்று நன்றாக புரிந்தது. அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு மகத்தானது.மெட்ராஸ் பாஷை என்று புதிய dialect ஐ உருவாக்கிய பெருமை அம்மக்களையே சாரும்.
    சில உதாரணங்கள் :
    இச்சூலு ----------------------------ஸ்கூல்
    (whenever the word starts with s they will add i in the beginning.On the first day of joining the bank we were sent to Zonal training centre. The faculty member was talking something about Madras.He narrated a small incident.

    some one among the public asked him' ismailkaan counter enge irukku?"
    The instructor asked him again and again,The same reply came from the man.

    The faculty member said'to my knowledge there is no Ismail Khan in this bank'managing a counter.


    Another man from the public gave a clue that the man wanted to get coins. Putting two and two, the instructor was able to make out that the man was referring to 'small coin counter'as 'ismailkhan counter'


    There was a roar of laughter in the class.


    When we observe closely we find that many of the words have been adapted from different languages spoken by people around them with some modified pronunciation.
    1.அசால்டா to take something easy taken from'Aasaan' Hindi


    2.அலேக்கா smoothly From'Azhagaaga'in Tamil


    3 .எகுரு run fast,scold,jump Taken from Telugu


    4. பேமானி who has no ethics or integrity Taken fronm Hindi(be+Emaani)


    5.கேடி criminal police abbreviation for 'Known Delinquent'


    6.கஸ்மாலம் idiot
    sanskrit word-black hair or dirt


    7,கேனயன் fool malayalam word Kenai for mad



    8 .மசமசா normally fat persons being lazy English --'full of mass'


    9.டக்கரு super nice taken from Telugu


    10.மஜா fun Taken from Urdu 'Mazaa'


    11.வலி pull Vali is actually a chaste tamil word,though normally we use' izhu


    12.ஓபி அடிக்கறது To waste time Taken from 'off-Beat'a military term for'off duty'


    13.நாஷ்டா Tiffin or snacks Urdu word


    14. கொல்டி A word denoting Telugu people Just a reversal of letters te-lu-gu(gu-lu-te)


    15.கெலிச்சான் He won Telugu wordGelupu meaning victory


    16.ஜகா வாங்கறது to escape from the scene Taken from'jagah'-Hindi word meaning'space.



    The list is endless. Shri Cho has used many of these words in his dramas.
    தங்களை வாழ வைத்த மதராச பட்டினத்துக்கு மக்கள் அளித்த மா பெரும் பரிசு தன்னிகரில்லாத மதராஸ் பாஷை .என்ன முன்னேற்றம் வந்தாலும் ,நாகரிகம் வளர்ந்தாலும் மதராச பட்டினத்தைத் தனிமைப் படுத்திக் காட்டுவது
    இந்த பாஷை ஒன்றே.வளர்க இம்மொழி.

    Jayasala 42
     
    2 people like this.
    Loading...

  2. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    very nicely written.....
     
  3. NellaiMurugan

    NellaiMurugan Silver IL'ite

    Messages:
    151
    Likes Received:
    67
    Trophy Points:
    68
    Gender:
    Male
    'அச்சால்டா' என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது என்று பல முறை நான் குழம்பியது உண்டு.

    'assault' என்றால் 'தாக்குதல் என்று பொருள். பல முறை 'assault' க்கும் , தமிழின் 'அச்சால்ட்' கும் என்ன தொடர்பு என்று வியந்தது உண்டு.

    உங்கள் விளக்கம் பயனுள்ளதாய் இருந்தது.

    நன்றி !
     

Share This Page