1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Strange Legend

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, May 2, 2014.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,572
    Trophy Points:
    438
    Gender:
    Female
    தென்திருப்பேரை என்பது சைவமும் வைணவமும் மலர்ந்த திருத்தலம் .

    இங்குள்ள வைணவத் தலத்தைப் பற்றி ஒரு கதை சொல்லப் பட்டு வருகிறது.

    வழக்கமாக கிராமங்களில் ஒரு வீட்டில் யாராவது இறந்து போனால் அவருடைய உடலை எடுக்கும் வரை கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.

    தென்திருப்பேரையில் ,இரவில் கோவில் சாத்தப்பட்டிருந்தால் கூட உடனே நடை திறக்கப் படுமாம்.

    காரணம், இந்த கிராமம் உருவாகும்போது ஏற்பட்ட நிகழ்ச்சி.


    ஒரு பாண்டிய மன்னனுக்கு உடல் நலம் பாதிக்கப் பட்டுப் படுக்கையில் கிடந்தான்.எந்த வைத்தியமும் குணப் படுத்த இயலவில்லை.

    ஒரு நாள் கடவுள் கனவில் வந்து,காவிரிக் கரையில் வாழும் 108 வைணவக் குடும்பங்களை தாமிரபரணி நதிக்கரையில் குடியமர்த்தி அன்ன தானம் செய்து அவர்களை வாழ வைத்தால் நோய் குணமாகும் என்றாராம்.
    உ தவி செய்ய அந்த ஊரில் மக்களே இல்லையா?குறிப்பாகக் காவிரிக் கரையிலுள்ள மக்களை ஏன் வரவழைக்க வேண்டும்? என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை

    மன்னனும் அப்படியே செய்தானாம்.கால் நடையாக அவர்களைக் கொண்டு வரும்போது ஒரு குடும்பத்தினர் இறந்து விட்டனராம்.கடவுளின் எண்ணத்தை நிறைவேற்ற இயலவில்லையே என்று மன்னன் வருந்தியபோது, பெருமாளே இன்னொரு குடும்பமாக வந்து பிரார்த்தனையை நிறைவேற்றி வைத்தாராம்.

    அந்த கிராமத்தை வந்தடைந்த வைணவக் குடும்பங்கள்

    " நூற்றி எண்மர் ' என்று வழங்கப் படுகின்றனர்.



    பெருமாளையும் தாயாதியாகக் கருதுகிறார்கள்.குழந்தை பிறந்து அரைஞாண் கொடி செய்தால் இரண்டாகச் செய்வார்கள்- குழந்தைக்கு ஒன்று, பெருமாளுக்கு ஒன்று.

    தாலிக் கொடியும் மணப் பெண்ணுக்கு ஒன்று, தாயாருக்கு ஒன்று .


    இறந்த உடலுக்கு வைக்கப் படும் நெருப்பு கோவில் மட பள்ளியிளிருந்துதான் வருமாம்.

    பெருமாள் தாயாதிக் காரர் ஆனதால் கோவிலும் திறந்து தான் இருக்கும் . ஒரு வேளை வழிபாடு நடக்காது போலும்.


    ( இந்த விவரம் நிமிர வைக்கும் நெல்லை' எனும் புத்தகத்தில் உள்ளது.).வைணவர்களுக்கும் ,இந்த ஊரைச்

    சேர்ந்தவர்களுக்கும் இப்போது நடைமுறையிலுள்ள வழக்கம் தெரிய வாய்ப்புண்டு.
    Jayasala42
     
    Loading...

  2. venlax

    venlax Silver IL'ite

    Messages:
    221
    Likes Received:
    172
    Trophy Points:
    93
    Gender:
    Female
    The woods are dark & Deep but i have miles to go & Promises to Keep before I sleep.[
    Dear Jayasala42,
    Read ur article today only .quite a strange & touching information. I will collect the information reg current formalities & let u know.
    With Prayers & Blessings,
    venlax
     

Share This Page