1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

suvaraa? chiththiramaa?

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Apr 20, 2014.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    தம் நாட்டில் தலை சிறந்த ஓவியரைக் காண எண்ணினான் அரசன்.ஆரமபத் தேர்வுக்குப் பிறகு இறுதித் தேர்வுக்கு இரு ஓவியர்கள் வந்தனர்.
    அரண்மனையின் எதிரும் புதிருமான சுவர்களில் அவர்களை ஓவியம் தீட்டச் சொன்னான்.ஒருவர் வேலையை மற்றவர் பார்க்க இயலாதபடி திரையால் மூடினான்.சிறிது நாட்களுக்குப் பிறகு
    இருவரும் அரசனை வரவழைத்தனர்.இரு ஓவியங்களும் திரையால் மூடப்பட்டிரு ந்தன .
    ஒரு திரையை விலக்கியதும் அழகான ஓவியம் தெரிந்தது.எல்லோரும் பாராட்டினர்.
    பின் எதிரே உள்ள திரை விலக்கப்பட்டது
    அந்த சுவற்றில் ஓவியம் ஏதும் வரையப் படவில்லை.ஆனால் சுவர் மிகவும் பளபளப்பாக எதிரே உள்ள ஓவியத்தை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் மெருகூட்டப்பட்டிருந்தது.பிரதிபிம்பம் எதிரே உள்ள ஓவியத்தை விடத் துல்லியமாகத் தெரிந்தது.அந்தச் சுவற்றை அவ்வளவு அக்கறையுடன் மெருகேற்றியிருந்தார் ஓவியர்.
    அவருக்கே அரசனின் பரிசு கிடைத்தது.
    இறைவன் எப்போதும் இருக்கிறான்.நாம் நமது மனதில் கடவுளை உருவகப் படுத்திக் கொள்ளத் தேவையில்லை.நம் மனதிலுள்ள அழுக்குகளை நீக்கி நிர்மலமாக வைத்துக் கொண்டால் இறைவனின் திரு உருவம் அதில் பளிச்சென தெரியும்.


    Jayasala 42
     
    2 people like this.

Share This Page