1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Thirumanthiram

Discussion in 'Posts in Regional Languages' started by Littlerose, Aug 27, 2013.

  1. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
    துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம்
    உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்
    கிறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே" பாடல் - 801


    இடக்கை - இடது கண். வலக்கை - வலது கண். இவ்விரண்டு கண்களாலும் உணர்வோடு ஒளியோடு உள் செல்ல இரண்டும் சேர்ந்து ஒன்றாகி ஆத்ம ஸ்தானத்தில் ஒளி பெருகும். உணர்வு உண்டாகும்.


    யானையின் துதிக்கை போன்று உள்ளிருந்து நீண்டு வெளியே வந்து அனுபவங் கொள்ளும். இதுவே துதிக்கையால் உண்பதாகும்.


    துதிக்கை உருவாக வேண்டும். வளர வேண்டும். பின்னரே துதிக்கையால் உண்பது!


    கண்மணி ஒளியிலே நிற்க நிற்க முதலில் சோர்வு வரும். தூக்கம் வரும். சோர்ந்து போகாமல் தூங்காமல் ஆத்ம ஸ்தானத்தை பற்றி துதிக்கை வளர்ந்து விட்டால் சோர்வு இல்லை. தூக்கம் இல்லை. உணர்வோடு இருந்து தூங்காமல் தூங்கி சும்மா இருப்பதுவே தவம். அங்ஙனம் இருந்தால் இறப்பு இல்லை.
     
  2. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "சூக்கும மான வழியிடைக் காணலாம்
    சூக்கும மான வினையினைக் கெடுக்கலாம்" பாடல் - 909

    நம் உள் தலை நடுவில் இருக்கும் இறைவனை அடைய வழி கண்மணி ஊசிமுனை துவாரத்தின் உள்ளே மயிர்பாலமாகும்! அது இரு கண்மணி உள் ஆரம்பித்து ஆத்ம ஸ்தானம் வரையுள்ள சூக்குமமான வழி! பெரும் ரகசியம் இது. தவம் செய்வோரே காண்பர். உணர்வர்.


    நமது கண்மணி ஊசிமுனை துவாரத்தை மெல்லிய வட்ட ஜவ்வு மூடிக் கொண்டிருக்கிறது. இதுவே நம் மும்மலத் திரை. வெகு சூக்குமமாக உள்ளது. ஊனக் கண்களால் காண இயலாது. தவம் செய்யும் போது காணலாம். திரை மறைப்பை உணரலாம்!
     
  3. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
    துதியது செய்து சுழியுற நோக்கில்
    விதியது தன்னையும் வென்றிட லாகும்
    மதிமல ராள்சொன்ன மண்டல மூன்றே" பாடல் - 1186


    உலகத்தவர் கதை கதையை விதம் விதமாய் என்னவெல்லாமோ கூறுவார்!? இவை அனைத்தையும் தூரத் தள்ளி விடுங்கள்!


    இறைவனை துதி செய்யுங்கள். குருவை நாடி இறைவன் நம் உடலில் கண்ணில் மணியில் ஒளியாக இருக்கிறன் என்பதை ஓர்ந்து தெளிந்து தவம் செய்யுங்கள்.


    அப்போது கண்மணி சுழற்சி கூடும். இதுவே தவப்பயன்.


    நோக்கு, பார், உணர்! அங்கேயே நில். ஒளி பெருகி முச்சுடரும் ஒன்றாகி விதியை வென்றிடலாம். முக்கர்மங்களையும் (பிராரத்துவம், சஞ்சிதம், ஆகாமியம்) மும்மலங்களையும் இல்லாமல் ஆக்கி இன்புறலாம்.


    சந்திரனில் இருக்கும் தாய் சொன்ன மூன்று ஜோதிகளையும் அடைவதே பெரும் பேறாகும்.


    மண்டலம் மூன்று என்றது மூன்று ஜோதியே! சூர்யா மண்டலம் - வலது கண். சந்திர மண்டலம் - இடது கண். அக்னி மண்டலம் - உள் ஆத்ம ஸ்தானம்.


    மதிமலராள் - மதி என்றால் சந்திரன். மலராள் - கண் மலரில் உள்ளவள்.


    சந்திரனில் உள்ள சக்தி தாய்! இதையே அவ்வையாரும் "மூன்று மண்டலத்தில் முட்டிய தூணை ..." என விநாயகர் அகவலில் பாடியுள்ளார். உணர்க!
     
  4. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "தொடர்ந்தெழு ஜோதி துளை வழி ஏறி" பாடல் - 1192


    நமது கண்மணியில் ஊசிமுனையளவு துவாரம் - ஓட்டை - தமர் உள்ளதல்லவா? அதுவே துளை!


    கண்மணி மத்தியில் உள்ள துளை வழியாக தொடர்ந்து தவம் செய்ய செய்ய ஜோதி பெரிதாகி உள் போகும். துளை வழி ஜோதியுடன் உட் சென்றால் காணலாம் பரமனை!


    நம் மனையில் உள்ள பரத்தை!!
     
  5. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "சூடிடும் அங்குச பாசத் துளைவழி" பாடல் - 1207


    அம்பாள் கையில் அங்குசம் பாசம் அது ஆயுதம். புறத்தே பக்தியில். ஞானத்தில்?


    துளை உள்ள அங்குசம் பாசம் இரு கண்மணிகளேயாகும்! பரிபாஷை. பகுத்து அறி! துலங்கும் ஞானம்.
     
  6. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "வழியிரண்டுக்கு மோர் வித்ததுவான" பாடல் - 1541


    வழியிரண்டு - விழியிரண்டே நாம் நம் ஆத்ம ஜோதியை அடைய உட்புகும் வழியாகும்!

    இந்த வழியாகிய விழி இரண்டும் உள்ளே அக்னி நிலையான ஆத்ம ஜோதியிலிருந்து வரும் இரு நாடிகளே!



    விழியாக வழி இருந்தும் உள்ளே பொய் சேரும் இடம் ஒன்றே! அதுவே நம் பிறவிக்கு வித்து! உயிர்! பிராணன்! ஆன்மா!
     
  7. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "தவம் வேண்டா மச்சக சன்மார்க்கத்தோர்க்கு" பாடல் - 1632


    வேறு எந்த சாதனையும் வேண்டாம் சன்மார்க்கத்தவர்க்கு என திருமூலர் கூறுகிறார். ஏன்?


    தவத்தில் சிறந்தது ஞான தவம் திருவடி ஞானம். அதைத்தானே சன்மார்க்க நெறி நிற்போர் செய்கின்றனர்.


    "மச்சக சன்மார்க்கத்தோர்" மச்சம் என்றால் மீன். மீன் போன்றது நமது கண். மீன் கண்களால் பார்த்து தான் குஞ்சு பொரிக்கும். நமது கண்மணி ஒளியால் பார்த்து தான் உள்ளொளி பெருக்கணும். ஞானம் பிறக்கும். மச்சத்தை அகத்தே பார்ப்பதே தவமாகும்.


    அதுவே மச்சக சன்மார்க்கத்தவர் என்பது. உலகில் மிக மிக உயர்ந்த இந்த மச்சக தவம் செய்வோர் வேறு எதுவும் செய்ய வேண்டியது இல்லை. சும்மா இருந்தால் போதும். "சும்மா இரு"!
     
  8. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "நோற்றுத் தவம் செய்யார் நூலறியாதவர்
    சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே" பாடல் - 1642


    சன்மார்க்கி நன்னெறி கடைப்பிடித்து கண்ணொளி பெருக்கி கடவுளை காண்பவன்.

    தவம் செய்யாதவர் பக்தி இல்லாதவர், நோன்பில்லாதவர், ஞான நூல் கற்காதவர், படித்த முட்டாள்.



    இங்கே திருமூலர் இரகசியத்தையும் கூறுகிறார். நமது கண்மணி சுழல்கின்றதல்லவா?


    நம் உடலில் உயிர் இருப்பதின் அடையாளம் சக்தி இருப்பதின் அடையாளமே மணியின் சுழலும் தன்மை.


    நாம் உண்ணும் ஆகாரம் சக்தியை பெருக்கி சக்தியை ஊட்டி கண்மணி சுழற்சி இயல்பாக நடக்கிறது.


    சோற்றுக்கு நின்று - நாம் உண்ணும் ஆகாரத்தால் நின்று கண்மணி சுழல்கின்றது என்கிறார் திருமூலர்.



    கண்மணி உள் அக்கினி கலை வரை இருகண் உள்ளேயும் நூல் போல் மெல்லிய நாடி உள்ளது.


    தவம் செய்து நோன்பிருப்பவர் அறிவர்.


    குரு அருளினால் வைராக்கியத்துடன் கண்மணி ஒளியை பெருக்கி உள் நூல் போன்ற - மயிர்பாலம் வழி ஒளி பெருகி ஓடும் நெருப்பாறு பாயும்!


    அக்னி கலையை ஆத்ம ஸ்தானத்தை அடையும்.


    இடைப்பட்ட நூல் போன்ற நாடியையே நோன்பு செய்யாதவர் அறிய மாட்டார்கள் என்று கூறுகிறார் திருமூலர்.


    எவ்வளவு பெரிய ஞான ரகசியம் இது தெரியுமா?
     
  9. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "கொயில்கொண் டன்றேகுடி கொண்ட ஐவரும்
    வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர்
    தாயில்கொண் டாற்போல் தலைவனென் னுட்புக
    வாயில்கொண் டீசனு மாளவந் தானே" பாடல் - 1728


    நம் உடலில் பரம்பொருள் உயிராக கோயில் கொண்ட அப்போதே பஞ்ச பூதங்களும் குடி கொண்டது!


    அந்த பஞ்ச பூதங்களும் ஒருமித்து இருக்கும் கோவில் வாசலில் நிற்பர்.


    இறைவன் கோவில் கொண்ட நம் உடலின் உட்புகு வாசல், இறைவன் சிரனடுவுள் கோவில் கொள்ள, அதை அடைய வாசலான நம் கண்களில் பஞ்ச பூதமும் ஒன்றாகி நிற்கின்றது!


    ஐம்பூதமும் அருள இயங்க தவம் செய்து தான் நாம் கோவிலுள் சென்று கோமானை காண வேண்டும் .


    தாய் ஆன "வாலை" ஜீவஸ்தானத்தில் இருக்க, ஈசன் - சிவம் - ஒளி உள்ளிருந்தாலும், சிவசக்தியாக உள்ளே இருந்தாலும் , வாயிலான - நம் கண்களிலும் நின்று நம்மை ஆண்டருளுகிறார்.


    கண்ணில் மணியில் ஒளியாகி வாயிற்காப்போனும் ஆகி - துவார பாலகராகி நமக்கு அருளுகிறார் ஆண்டவன். நம் கடத்துள் நின்ற ஒளி கடவுள்.
     
  10. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "முகமத்தோ தோத்து நின்றூழி தோறூழி
    அகமத்தராகி நின்றாய்த் தொழிந்தாரே" பாடல் - 1865


    நமது முகமதில் இரு கண்களாகி நின்று ஒளிரும் இறைவன் "முகமது" வாக திகழ்கிறான்!


    முகத்துக்கு முகம் அது - அது தான் கண்கள்!


    தலைக்குத் தலையாயது - தலைக்குத் தலை இருகண்!


    "பரப்பிலே விள்ளாதே தலை இரண்டாகும்" - அகத்தியர் பரிபாஷை.


    வெளியே சொல்லாதே. னக்கு தலை இரண்டாகும். நம் தலைக்குத் தலையாய கண் இரண்டு என்பதே பரிபாஷை விளக்கம்!


    முகமது - கண்கள்.


    கண் ஒளியே நம் உடலுள் துலங்கும் ஆத்ம ஒளியின் ஒரு கூறுதான்.

    முகம் அதுவாக துலங்கும் ஒளியே நம் அகத்திலேயும் ஒளிர்கிறது.

    அகமும் அதுவே! அகமது!



    அகமதுவாய் திகழும் ஒளியே முகம் அதுவாகவும் திகழ்கிறது.


    அகமதுவே முகமது.

    மதங் கடந்த ஞானம். இதுவே சன்மார்க்கம்!
     

Share This Page