1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Thirumanthiram

Discussion in 'Posts in Regional Languages' started by Littlerose, Aug 27, 2013.

  1. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்" பாடல் - 295

    நூல் போல நம் கண்ணில் உள்ளே ஒரு நரம்பு! இரு கண்விழி உள்ளே சேரும் ஆத்ம ஸ்தானம் வரை ஒரு மெல்லிய நூல் போன்ற நரம்பு உள்ளது.

    கண்மணியில் நின்று அதை பற்றி அது வழியாக உள் சென்று அதன் நுனி - அந்த நரம்பு முடியும் இடம் சென்று சேர வேண்டும்.
     
    1 person likes this.
  2. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "பற்றது பற்றிற் பரமனை பற்றுமிந் முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்" பாடல்- 298

    பற்ற வேண்டியது நம் உடலில் பற்றாமல் இருக்கும் கண்மணியை. அது பரமன் அருளைப் பெற்று தரும்.
     
  3. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "வீங்கிகுங் கமல மலர் மிசை மேலயன்
    ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே" பாடல்- 390


    "வீங்கிகுங் கமல மலர் - கண்கள் வீங்கித்தானே உள்ளது.

    தாமரை - இறைவனின் தாள் - திருவடி ஒளி கண்மணி உள்ளே மறைந்தது உள்ளதால் கண்ணை தாமரை என்றனர்.

    அது - இறைவன் - கண்மணி ஒளி.
     
  4. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்
    செறிகின்ற ஞானத்த்துச் செந்தாள் கொளுவிப்
    " பாடல் - 452

    மூலம் - கண்.
    அங்கி - நெருப்பு
    நீர் உள்ள கண்ணே தவத்தால் சிவந்து செந்தாள் ஆனது. அந்த செந்தாள் கொளுவி பிடித்து உள்ளது கண்மணியை.

    கண் கருவிழியுள் பிராண நீரில் சுழலும் மணியுள்ளே இருக்குது நெருப்பு.
     
  5. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கத்
    தன்நெறி சென்று சமாதியிலே நின்மின்
    நன்நெறி செல்வர்க்கு ஞானத்தி லேகலாம். பாடல் - 551


    தன்நெறி சென்று நன்நெறி நடப்பவர் பெறுவர் ஞானம்.

    அட்டாங்கம் - அட்டம் - எட்டு.
    அங்கம் - உடல்.

    உடலில் உள்ள எட்டு - கண்.

    கண் வழி தவம் செய்வாரே ஞானம் பெறுவார்.
     
  6. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்
    பிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை
    பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
    பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே"

    கண் மணி ஒளியில் தவம் செய்யும் போது மனம் அதில் அடங்கி விடும்.

    கண் மணி ஒளியில் நம் பிராணனில் லயித்திருப்போமானால் நமக்கு பிறப்பிறப் பில்லை.

    பிராணன் - கண் மணி ஒளியில் நம் உயிர் மடைமாறி ஆத்ம ஸ்தானத்தை அடைந்து அங்கே நாதம் கேட்க வைத்து உயிருடன் சேரவும் செய்வோம்.
     
  7. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு
    மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
    வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
    காலத்தை வெல்லுங் கருத்திது தானே" பாடல் - 583

    மூலத் துவாரத் - கண் மணி

    கண் மணி ஒளியில் உணர்விலேயே நிற்க வேண்டும்.

    மேலைத் துவாரத்தின் - ஆத்ம ஸ்தானத்திலிருந்து மேல் உச்சி வரை செல்லும் வழி ஆரம்பத்தில் மனத்தை வைத்திரு.

    வேல் போல் இரு கண் பார்வை ஒன்றாக்கி உள் ஆத்ம ஸ்தானத்தை நோக்க.

    இமைகள் திறந்து விழிகள் இரண்டும் உள் வெளியில் நிலைத்திருக்குமானால் கண் மணி ஒளி பெருகி உள் சென்று ஆத்ம ஸ்தானத்தை அடைந்து மேலேறி உச்சியை அடையும். அடைந்தவர் காலத்தை வெல்வார்.
     
  8. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Dear All,

    I hope i've given the very basis of thirumanthiram now... having a baby i really find hard to transliterate.. managing things are getting hard.... so, if u are really interested in knowing the rest important explanations also for a better living, please get the book contacting their official site "vallalyaar.com".

    Thanks and regards,

    S. Sriumadevi Srinivasan.
     
  9. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
    இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
    மடைவாயிற் கொக்குபோல் வந்திந் திருப்பார்க்
    குடையாமல் ஊழி இருக்கலு மாமே" பாடல் - 591


    கடைவாசல் - அது கண். அதை கட்டி என்றால் புறப்பார்வை இன்றி வெளியே பார்க்காமல் என்பதாகும்.


    காலை எழுப்பி - திருவடி ஒளியை எழுப்பி என்பதாகும்.


    இடைவாசல் நோக்கி - கண்மணி ஊசிமுனை துவாரத்தில் உள் போகையில் ஆத்மஸ்தானம் வரை உள்ள பகுதி இடைப்பட்ட பகுதி வழியாக உள் நோக்கி !



    இனிதுள் இருத்தி - இரு கண் உள் வழியாக ஒளியை பெருக்கி புகச் செய்து!


    மடைவாயிற் கொக்குபோல் வந்திந் திருப்பார்க் - மீனை எதிர்பார்த்திருக்கும் கொக்கு போல் நாம் ஆத்ம ஸ்தானத்தில் சூரிய சந்திர கலைகள் வந்து சேரும் வரை பொறுமை வேண்டும்.



    இருந்தால் முத்தீயும் ஒன்றாகி முக்தி கிடைக்கும். ஜீவன் முக்தராவர். கடம் உடையாமல் மண்நூழி காலமட்டும் வாழ்வார்.
     

Share This Page