1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குரு தரிசன அனுபவங்கள்

Discussion in 'Posts in Regional Languages' started by saidevo, Sep 13, 2012.

  1. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    வேத சப்த மஹிமை
    நடமாடும் தெய்வம் பரமாசார்யாளின் எளிமையான விளக்கம்
    [எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் இருந்து]

    த்தத்தில் காஞ்சி பரமாசார்யாள் ஒரு சமயம் இருந்தபோது நடந்த சம்பவம். பெரியவாள் தங்கியிருந்த இடத்தில் ஒரு வேதபாராயண கோஷ்டி வேதத்தில் ஒரு அனுவாகம் கூறிக்கொண்டிருந்தார்கள்.அந்த இடத்திற்கு ஒர் ச்ரத்தையில்லாத பிராம்மணன் வந்திருந்தான். அவனுக்கு வேதம் தெரியாது. ’என்னவோ அர்த்தமில்லாமல் முணமுணக்கிறதே இந்த கோஷ்டி. இதனால் உலகத்திற்கு என்ன ப்ரயோஜனம்? ஏழை எளியவர்களுக்கு ஏதாவது திட்டமிட்டு செலவழித்தாலும் புண்யமாவது கிடைக்குமே’ என்று கூறினானாம். இது எப்படியோ பெரியவாள் காதுகளையும் எட்டிவிட்டது.

    நமக்கும் பெரியவாளுக்கும் அதுதான் வித்யாசம். வால்மீகி மகரிஷி தனது ராமாயணத்தில் ராமரைப்பற்றிக் கூறும்போது, "நூறு குற்றங்கள் செய்தாலும் கொஞ்சம் கூட ஞாபகம் கொள்ள மாட்டார். ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்தாலும் அதைக்கொண்டே பூரண திருப்தி அடைந்து விடுவார்" என்று வர்ணித்திருப்பதை நடந்து காட்டியவர் நமது காஞ்சி பரமாச்சார்யாள்

    அன்று மாலை பூஜாகாலத்திற்குப் பிறகு பெரியவாள் அருள்வாக்கு கூற அமர்ந்தார். காலையில் கம்ப்ளெய்ன்ட் செய்த ஆசாமியும் அங்கு, மாலை, கூட்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார். அவனருகில் சென்று மடத்து சமையல்காரனைக் கூப்பிட்டார். ’இந்த ப்ராம்மணனுக்குப் பகல் சாப்பாடு நன்றாக இல்லையாம். ராத்திரி கொஞ்சம் ஸ்பெஷலாக கவனித்துக்கொள்" என்று கூறினார். அந்த சமையல்காரன் இந்த ப்ராம்மணனைப் பார்த்து முணமுணத்துக் கொண்டே போனான். இந்த பிராம்மணனுக்கு படுகோபம் வந்து விட்டது. "ஸ்வாமி! பார்த்தேளா! என்னமோ முணமுணத்துக் கொண்டே போகிறானே பார்த்தேளா?" என்றான் அந்த பிராம்மணன்.

    நம் நடமாடும் தெய்வம் புன்முறுவலுடன் கேட்கிறார். "அவன் என்ன முணமுணத்தான் என்று தெரியுமா?" என்று. "அது காதில் விழவில்லை. ஆனால் முணமுணத்ததுகாதில் நன்றாக விழுந்தது" என்றான் பிராம்மணன். "அவன் என்ன சொன்னான் என்று புரியாத முணமுணப்புக்கு, அது என்ன வார்த்தை, யாரைப்பற்றி என்று தெரியாமல் இருக்கும்போது, அந்த முணமுணப்பு சப்தம் உன்னிடம் ஒரு ரியாக்ஷன் ஏற்படுத்துமானால், வழிவழியாக பரம்பரையாக வந்த வேத முணமுணப்பு, அந்த அட்மாஸ்ஃபியரில் எத்தகய உயர்ந்த ரியாக்ஷன் ஏற்படுத்தும் என்பது உனக்குக் காலையில் ஞாபகமில்லை போலிருக்கு" என்று சொன்னார்.

    சப்தத்திற்கு, வேத சப்தத்திற்கு உள்ள மதிப்பை, ஆசார்யாள் சொல்லுகிறமாதிரி யார் நமக்கு மனதில் பதியும்படி சொல்லமுடியப்போகிறது!

    அந்த ப்ராம்மணன் வேத அத்யயனகோஷ்டியை இகழ்ந்தற்கு ஆசார்யாள் அஸூயைப்படவில்லை. ஸ்ரீ மடத்தில் தனது சன்னிதானம் இருக்கும் இடத்தில், காலையில் காலை வைத்துவிட்ட அந்த ஒரு புண்ணியத்திற்காக (कृतेनैकेन तुष्यति) அவன் வேத கோஷ்டியை இகழ்ந்த பாபத்தை மறந்துவிட்டு, ஒரு சிறிதும் கோபமோ, வெறுப்போ கொள்ளாமல், அவனுக்கும், அவனை வ்யாஜமாக, லோகத்தினருக்கும் ஞானம் அனுக்ரஹம் பண்ணுவது இருக்கிறதே, அதுதான் "தெய்வீகம்" என்பதற்கு லக்ஷணம்.

    அந்த பரமாசார்யாளின் பாததூளி பாக்யம் எத்துணை உயர்ந்ததாக இருக்கும் என்று கூறவும் வேண்டுமோ?

    ஆங்கரை கல்யாணராம சாஸ்திரிகளின் ஸ்ரீமத் பாகவத காலக்ஷேபத்தின்போது
    கேட்டு குறித்துக்கொண்டது -- S.V.Ranganathan, 2-2-1133/5/7A New Nallakunta, Hyderabad 500044.

    *** *** ***
     
    6 people like this.
    Loading...

  2. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    ரா.கணபதியின் புத்தகங்கள் இப்போது வலைதளத்தில்:
    Untitled Page
     
  3. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    மஹா பெரியவாளை தரிசிக்க வந்த பில்லிசூனியப் பாட்டி

    பார்ப்பதற்கு ரொம்ப நல்ல பாட்டியாகத்தான் தென்பட்டாள். வெள்ளை வெளேரென்று புடவை. நெற்றி நிறைய திருநீறு. கழுத்து கொள்ளாமல் ருத்ராக்ஷம், ஸ்படிக மாலைகள். பெரியவாளை வெகு வினயமாகப் பணிந்து எழுந்தாள்.

    பெரியவாள் ஒரு தொண்டரிடம் சமையல் கட்டிலிருந்து நூறு எலுமிச்சம்பழம் கொண்டுவரச் சொன்னார்கள். ஒரு தட்டில் அவைகள் வந்தன.
    "அந்தப் பாட்டிகிட்ட குடு".

    பாட்டிக்குத் திகைப்பு. பிரசாதம் என்றால், ஓரிரு பழங்கள் போதுமே? நூறு எதற்கு? ’எனக்கு ஏன் இத்தனை பழங்கள்?’ என்கிறார் போல் பார்த்தாள் பாட்டி.

    "நீ நிறைய எலுமிச்சம்பழம் காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கு, துர்தேவதையை ஆவாஹனம் பண்ணி, பல பேர் வீட்டிலே வைத்து, அவர்கள் குடியைக் கெடுக்க வேண்டியிருக்கு. இந்தப் பழத்தை அள்ளிண்டு போ; உனக்கு ரொம்ப உபயோகமாக இருக்கும்", என்று பொரிந்து தள்ளினார் பெரியவா. அவளோ, தான் ஒரு பில்லி-சூனியக்காரி என்று பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது என்று திடுக்கிட்டுப் போனாள்.

    அழுதுகொண்டே நமஸ்காரம் செய்தாள்; மன்னிப்புக் கேட்டாள்.

    உனக்குத் தெரிந்த துர்தேவதை மந்திரங்களை, ஒரு பசு மாட்டின் காதில் சொல்லிவிட்டு, மறந்துவிடு. இனிமேல் பில்லி-சூன்யம் வேண்டாம். அதனால் வருகிற பணமும் வேண்டாம். பகவான் நாமா சொல்லீண்டிரு, போறும்."

    பின்னர் பாட்டிக்கு விபூதிப் பிரசாதம் மட்டும் கொடுத்தார்.

    *** *** ***
     
    5 people like this.
  4. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    காஞ்சி மஹா பெரியவாள்: பக்தர்களின் தரிசன அனுபவங்கள்
    கவிதை வடிவில்
    ரமணி


    01. ஹஸ்தாமலகம்: உள்ளங்கை நெல்லிக்கனி
    ரமணி 14/09/2012

    கல்யாண சுந்தரம் பெரியவாளின் ’முரட்டு’ பக்தர்களில் ஒருவர்.
    காசிக்குச் சென்று தந்தைக்கு ஷ்ராத்தம் செய்திட விழைந்தார்.
    காசியில் சங்கரமடம் கேள்விப் பட்டுப் பயணம் திட்டமிட்டார்.
    பெரியவாள் அனுக்ரஹத்துடன் காசிபோய்க் காரியங்கள் பண்ணினார் திருப்தியாக.

    ஒருநாள் காசி விஸ்வநாதர் அன்னபூரணி தரிசனம் செய்தார்.
    ஒருசின்ன சந்து வழியே மடம்நோக்கி நடந்து வந்தார்.
    கையிலொரு பெரிய பையில் சின்னதாக மஞ்சள் துணிப்பை.
    அதிலொரு நெகிழிப்* பையில்பணம் பயணச்சீட்டு பத்திரமாக.

    காம கோடீஸ்வரர் தரிசன மானபின் பிரகாரத்தில் அமர்ந்தார்.
    அடுத்தென்ன செய்யலாம் என்றெண்ணிப் பையைத் திறந்து பார்த்தார்.
    ’சர்வேஸ்வரா! மஹாப்ரபோ!’ -- வாய்விட்டு அலறினார் தேஹம் பதற.
    பெரிய பைக்குள் மஞ்சள் பையைக் காண வில்லை!

    உடலெல்லாம் நடுங்கிடக் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர்!
    இனியென்ன செய்வது? அடுத்த வேளை ஆஹாரம் எப்படி?
    வேறு சல்லிக் காசு கையில் இல்லாமல் தவித்தார்.
    கண்கள் இருட்டிக் கொண்டுவரத் தூணில் சாய்ந்தார் மனமுடைந்து.

    குடும்பத்தார் கோவிலுக்குள் இருந்ததால் நிலைமை தெரிய வில்லை.
    ’உன்னை நம்பி வந்ததற்கு என்னை நிர்க்கதியா விட்டுட்டியே!’
    பெரியவர் பகவானிடம் அரற்றுவதாக வழிச்சென்றோர் எண்ணிச் சென்றனர்.
    குடும்பத் தினரும் தவிக்க இரண்டு மணிநேரக் குழப்பம்.

    பெரியவாளின் அனுக்ரஹம் வேலை செய்ய ஆரம்பித்தது இப்போது.
    சத்தமே இல்லாமல் வந்து நின்றதொரு சைக்கிள் ரிக்*ஷா.
    லுங்கி அணிந்த வயதான பெரியவர் ஒருவர் இறங்கினார்.
    கையில் மஞ்சள் பையுடன் கல்யாண சுந்தரத்திடம் வந்தார்.

    ஏற்கனவே அறிமுக மானவர்போல் ஹிந்தியில் கேட்டார் உரிமையுடன்:
    "ஹே-மித்ர! துமாரா-ஹ இஸ்-தைலா? கஹீன்-இஸே சோட்-தியா ஹை-க்யா?"*
    மஞசள் பையைத் தந்துவிட்டுச் சொன்னார்: "சுரக்ஷித்-ரக்லோ ப்விஷ்ய-மேய்ன்!"
    வந்தவர் மாயமாய்க் கூட்டத்தில் கரைந்து சுவடின்றி மறைந்தார்!

    நெகிழிப் பையில் எல்லாம் வைத்தது வைத்தபடி இருந்தது.
    வெகுநேரம் கழித்து வந்தவர் உடனே மறைந்தது எப்படி?
    கண்ணீர் பெருகிடக் காஞ்சித் திசைநோக்கி நமஸ்காரம் செய்தனர்.
    அழுவது தவிர அப்போதைக்கு அவர்களால் வேறேதும் முடியவில்லை!

    பெரியவாள் ஆத்மஸ்வரூபன். எங்கோ இருப்பதாக எண்ணுவோர்க்கு அவர்நிலவு.
    எங்கும் இருப்பதாக எண்ணுவோர்க்கு ஹஸ்தாமலகம்: உள்ளங்கை நெல்லிக்கனி.

    குறிப்பு:
    நெகிழி = ப்ளாஸ்டிக்
    பெரியவர் ஹிந்தியில் சொன்னதின் தமிழாக்கம்:
    "நண்வனே! உன்னுடையதா இந்தப் பை? எங்கேயோ விட்டுவிட்டாயா?
    ...இனிமேலாவது பத்திரமாக வைத்துக்கொள்."

    [Courtesy: Religious | Take off with Natarajan
    ’மஹாபெரியவா அருள்’]

    *** *** ***
     
    5 people like this.
  5. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    01. பாலாபிஷேகம் என்பது தவறு!

    சந்தனாபிஷேகம் என்பது போலப் பாலாபிஷேகம் என்பர் பலபேர்.
    பால்*எனும் சொல்லுடன் அபிஷேகம் சேரப் பாலபிஷேகம் என்றேயாகும்.
    சந்தன க்ஷீர அகரத்தில் முடிவதால் சந்தியில் ஆகாரமாகும்.
    பால்,தேன் சொற்கள் ஒற்றில் முடிவதால் சந்தியில் அகரமேயாகி,
    பாலபிஷேகம் தேனபிஷேகம் என்றே கூட்டு வார்த்தைகள் உண்டாகும்.
    இதுபோல் ஷடாக்ஷரம் என்பது தவறு, ஷடக்ஷரம் என்பதேசரி.
    பஞ்சாக்ஷரம் அஷ்டாக்ஷரம் என்பன சரியே, குறில்களின் சந்தியில்.

    Courtesy: http://bakthicafe.blogspot.in/2012/04/blog-post_14.html

    *** *** ***
     
    1 person likes this.
  6. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    02. சங்கரரை நேரில்கண்ட ஸ்தபதி
    கணபதி ஸ்தபதியின் தரிசன அனுபவம்

    காஞ்சிப் பெரியவரை 19 63-இல் முதன்முதலில் தரிசித்தேன்.
    என்வாழ்வின் வழிகாட்டி உலகம் அறிந்த இரண்டு மகரிஷிகள்.
    ஒருவர் காஞ்சி மஹரிஷி, மற்றவர் ரமண மஹரிஷி.

    என்தந்தை 19 57-முதல்* சிற்பக் கல்லூரி முதல்வர்.
    19 60-இல் அவருக்கு திடீரென வாதநோய் கண்டது.
    உடல்செயல் இழந்துவாய் பேசமுடியாமல் ஆங்கில மருத்துவத்தில் குணமில்லை.
    என்னை வளர்த்ததிரு கம்பனடிப்பொடி கணேசன்சொன்ன ஆயுர்வேதமும் பயன்தரவில்லை.
    இப்படியொரு சமயத்தில் காஞ்சிப் பெரியவரைப் பார்க்கச் சென்றேன்.

    அப்போது சுவாமிகள் இளையாற்றங் குடியில் முகாமிட் டிருந்தார்.
    அந்தக் குக்கிராம் நான்சென்ற போது இரவுமணி ஒன்பதுக்குமேல்.
    ஸ்தபதி உடல்நலிவு கேட்டு சுவாமிகள் உடனே வெளிவந்தார்,
    தன்னைச் சூழ்ந்திருந்த செட்டிநாடு பக்தர் புரவலர்களிடம் இருந்து.
    சிற்பக்கலை சொல்லிக் கொடுத்துக் கோவில்பல கட்டினார் தந்தை,
    ஏனிந்த நிலைசுவாமி அவருக்கு என்றெல்லாம் அவரிடம் கேட்டேன்.

    சுவாமிகளோ பதிலேதும் கூறாமல் என்னைப் பற்றி என்கல்வி
    வேலை பற்றியே விசாரித்தது எனக்குக் கவலை யளித்தது.
    தந்தைக்கு என்னாகுமோ உயிர்பிழைக்க மாட்டாரோ என்று அஞ்சினேன்.
    திடீரென்று ’வா,என்னுடன்’ என்று சுவாமிகள் எழுந்து நடந்தார்.

    வெகுதூரம் நடந்தவர் மூத்த சுவாமிகள் அதிஷ்டானம் வந்துநின்றார்.
    ’இங்கேயே இரு’வென்று கூறிவிட்டு உள்ளே சென்று மறைந்தார்.
    இரவுமணி நடுநிசியைத் தாண்டிவிட வெகுநேரம் காத்திருந்தபின் வந்தார்.
    ’எங்கே அந்தப் பையன்?’ என்று கேட்டபடி வெளிவந்தார்.

    தண்டத்துடன் மட்டுமே சென்றவர் கையிலிரு தேங்காய் மூடிகள்.
    வியப்புடன் நான்பார்க்கப் பிரகாரத்தின் மூலைசென்று தண்டத்துடன் நின்றார்.
    தந்தை நிலைபற்றி விசாரித்துநான் சொன்னதெல்லாம் கவனமாகக் கேட்டார்.
    ’தந்தைக்கு வந்திருப்பது ப்ராரப்த கர்மாவால். நீஅமோக மாயிருப்பாய்’
    என்றுகூறித் தேங்காய்கள் தந்து, மேலாளரைப் பார்த்துச்செல் என்றார்.

    தந்தைபற்றி ஒன்றும் சொல்லாமால் என்னைமட்டும் திரும்பத் திரும்ப
    ’நீஅமோக மாயிருப்பாய்’ என்று சொன்னது எனக்குப் புரிந்தது.
    தந்தைசில மாதங்கள் கழிந்த பின்னர் இறைவனடி சேர்ந்தார்.

    நான்மட்டும் தனியாக இருளில் திரும்ப, வழிதெரியாமல் திகைத்தேன்.
    திடீரென்று குடுமிவைத்த எட்டுவயதுச் சிறுவன் ஒருவன் தோன்றினான்.
    ’ஸ்தபதி என்பின்னே வாரும்’ என்றுசொல்லிக் கூட்டிச் சென்றான்.
    ’யாரிவன், பேய்பிசாசோ, அருகில் மயானம்’--பயந்தபடி பின்தொடர்ந்தேன்.

    கோபுலுவின் ஆதிசங்கரர் ஓவியம்போல இருந்தது அவனுருவம்.
    ஓவியப் பையனே நேரில் வந்தது போலிருக்க வியந்தேன்.
    மேலாளர் அறையருகில் விட்டுவிட்டு ஏதோசொல்லி இருளில் மறைந்தான்.
    வந்து வழிகாட்டிச் சென்றது சங்கரர்தான் என்றது உள்ளுணர்வு.

    adisankara1.jpg

    மேலாளர் தந்த பணத்தை வாங்கமனம் ஒப்பவில்லை எனக்கு.
    ’சுவாமிகள் உத்தரவு’ என்று சொல்ல வாங்கிக் கொண்டேன்.
    பசியெடுக்க அங்கேயே இரவு ஒருமணிக்கு சுடச்சுட உணவிட்டனர்.

    19 65-இல் நடந்த வேதாகம சில்பவித்வத் சபாவில்
    புகழ்பெற்ற அனுபவமிக்க ஸ்தபதிகள் பலபேர் இருந்த அவையில்
    இளைஞனான என்னைப் பேசச் சொல்லி இளம்சிற்பக் கலஞர்களை
    வளர்த்துவிட்ட காஞ்சிமஹா பெரியவருக்கு கோடிகோடி வணக்கங்கள்.

    குறிப்பு:
    19 57 என்பதை ’பத்தொன்பது ஐம்பத்தேழுஎன்று படிக்க, சீர்கள் சரிவரும்.
    Courtesy: Revival of vastu vignanam : Experiences with His Holiness Sri Chandrasekharendra Saraswathi MahaSwamiji : kamakoti.org

    *** *** ***
     
    2 people like this.
  7. sam9san

    sam9san Gold IL'ite

    Messages:
    1,088
    Likes Received:
    79
    Trophy Points:
    103
    Gender:
    Male
    அந்த பரமாசார்யாளின் பாததூளி பாக்யம் எத்துணை உயர்ந்ததாக இருக்கும் என்று கூறவும் வேண்டுமோ?
    :bonk:bonk:drowning:rant:hiya:hiya:notthatway:
     
  8. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    03. மஹா பெரியவாளின் ஹாஸ்யம்
    ரமணி 16/10/2012

    எப்போதும் பூஜா உபன்யாசம் கடும்விரதம்
    என்றில்லை துறவிக்கு.
    ஹாஸ்ய உணர்வும் அவர்களுக்கு உண்டு.
    ஹாஸ்யம் அடிக்கடி தலைதூக்கும் காஞ்சி முனிவர் பேச்சில்.

    மஹாராஷ்ட்ர மாநிலம் சிற்றூர் ஒன்றில்
    ஒருமுறை சாலையோரம் பெரியவர் முகாம்.
    நான்குபேர் யானைமீது அமர்ந்து சாலைவழிப்
    போவதைப் பார்த்தார் பெரியவர்.
    அவர்களை உடனே ஆளனுப்பிக் கூப்பிட்டு
    விசாரித்தார்: யானைமேல் ஏறி எங்குப் போகிறீர்கள்?

    "ஸ்வாமீ! நாங்கள் ஒருகாலத்தில் செல்வந்தர்கள்.
    எங்கள் தகப்பனார் கடைசிக் காலத்தில்
    தன்பொருள் அனைத்தையும் தானம் செய்துவிட்டு
    எஞ்சிய இந்த யானை மட்டும்
    எங்களுக்குத் தந்து இதன்மூலம் பிழைத்துக்கொள் என்றார்.

    அதன்படி நாங்களும் ஊர்*ஊராகச் சென்று
    புராணக் கதைகள் சொல்கிறோம்;
    பக்திப் பாடல்கள் பாடுகிறோம்;
    ஏதோ கொஞ்சம்
    பொருள் எங்களுக்கும் யானைக்குத் தீனியும் கிடைக்கிறது."

    "ஹாஹா!" என்று சிரித்தார் பெரியவர்.
    "இங்கேயும் இதுதான் நடைமுறை.
    இவர்கள் என்னை யானைபோல்
    ஊர்*ஊராக அழைத்துப்போகும் இடங்களில்
    நானும் உபன்யாசம், பூஜைகள் செய்கிறேன்.

    "இவர்களுக்கும் சாப்பாடு பணம்
    எனக்கும் பக்தர்கள் கிடைக்கிறது.
    நம்ம ரெண்டு பேர்க்கும் ஒரேதொழில்!"

    கூடியிருந்த பக்தர்கள்
    பெரியவரின் சிரிப்பில்
    ஹாஸ்ய உணர்வும்
    சமபாவ உள்ளமும்
    கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

    *** *** ***
     
    2 people like this.
  9. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    02. எச்சில் தோஶம்
    (கலிவிருத்தம்)

    காளஹஸ்திக் கொருமுறை காஞ்சிமஹான் சென்றபோதவர்
    காலடி பட்டுக் குலம்தழைக்கத் தம்மில்லம்
    தினமும் வேண்டிநின்ற திடபக்தர் இல்லத்தில்
    அனுக்கிரகம் செய்யவெண்ணி அகமுவந்தார் காஞ்சிமஹான்.

    பக்தர் ஒருநாள் பூசையை முடித்து
    பக்தியுடன் நைவேத்தியக் கற்கண்டை வாய்நிறைக்க
    வெளியினில் யாரோவர வந்து பார்த்தால்
    விளித்தபடி காஞ்சிமஹான் வீட்டின்முன் நிற்கிறார்!

    கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை
    மெய்சிலிர்க்கும் பக்தர்க்கு வாய்நிறையக் கற்கண்டு!
    வந்தேன் நானிங்கு அனுதினம்நீ அழைத்ததால்
    வந்தவனை வாவென்று வரவேற்க மாட்டாயோ?

    வழியேதும் தெரியாமல் உமிழ்ந்துவிட்டுக் கற்கண்டை
    விழிநீர் வரபக்தர் ’அபசாரம், அபசாரம்!
    அபசாரம் பண்ணிவிட்டேன்’ என்றுரைத்துப் பதறினார்
    உபசரித்த கரங்களால் உதவாத வாய்புதைத்து.

    மஹான்தம் விழிகளில் மிகுந்த கருணையுடன்
    தகாதது எதுவும்நீ செய்யவில்லை பக்த!
    வாயில் புலால்வைத்தும் வாய்ஜலம் கொண்டும்
    நாயனார் கண்ணப்பன் நாயகனை வழிபட்டான்!

    தவறென்று நமக்கது தோன்றினும் தகவென்று
    உவந்தான் அன்றோ உமைபாகன் இத்தலத்தில்!
    சிவானந்த லஹரியில் ஆச்சார் யாளுமே
    சிலாகித்துச் சொல்கிறாரே இத்தகு பக்தியை!*

    கண்ணப்பன் வாழ்ந்த காளஹஸ்தித் திருத்தலத்தில்
    எண்ணமே பெரிது எச்சில் தோஷமில்லை
    என்று காஞ்சிமஹான் உரைத்த பின்னரே
    நன்றென பக்தர் ஆறுதல் அடைந்தார்.

    --ரமணி, 15/01/2013

    Source:
    Moments and Memories:

    குறிப்பு:
    *காஞ்சி மஹான் குறிப்பிட்ட சிவானந்த லஹரிச் செய்யுள்:

    मार्गावर्तितपादुका पशुपतेरङ्गस्य कूर्चायते
    गण्डूषांबुनिषेचनं पुररिपोर्दिव्याभिषेकायते ।
    किंचिद्भक्षितमांसशेषकबलं नव्योपहारायते
    भक्तिः किं न करोत्यहो वनचरो भक्तावतंसायते ॥ ६३ ॥

    mArgA-vartita-pAdukA pashupater-a~ggasya kUrchAyate
    gaNDUShAMbu-niShechanaM pura-ripor-divyA-bhiShekAyate |
    kiMchid-bhak****a-mAMsa-sheSha-kabalaM nav-yopahArAyate
    bhaktiH kiM na karotyaho vanacharo bhaktAvat-aMsAyate || 63 ||

    The way faring sandals become the kusa crown of Pashupathi,
    The gargled mouthful of water become the holy water of bath ,
    To him who destroyed the three cities,
    The just tasted pieces of the remaining meat ,
    Become the holy offering to the Lord,
    And wonder of wonders, the hunter who lives in the forest
    Becomes the king of devotees.
    What is there in this world that devotion to the Lord cannot do?

    *****
     
    2 people like this.
  10. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    03. காஞ்சி முனிவரும் பூக்காரியும்
    (குறள் வெண்செந்துறை)

    காஞ்சிமடம் அருனிகிலோர் பூக்காரி. காமாட்சி என்பதவள் பெயராகும்.
    காஞ்சிமகா பெரியவரை வணங்கிடுவாள் வாஞ்சையுடன் அப்பாவென் றேவிளித்து.

    அனுதினமும் பெரியவரை அர்ச்சிப்பாள் விநயமுடன் ஒருகூடைப் பூக்கொணர்ந்து.
    வினவுவார் பெரியவர் அவளிடம்: வீணாக்கு கிறாயம்மா பூவினை!

    வீணாகும் பூவிற்றுன் பிழைப்பினைப் பேணுதல் வேண்டாமா என்பாரவர்.
    காசென்ன பெரியது சாமீயுன் ஆசிதான் வேண்டும் என்பாளவள்.

    மடத்திலோர் நியதியுண்டு: இரவினில் மாமுனிவர் துயில்கொள்ளச் சென்றபின்
    இடமில்லை அவரை எழுப்புதற்கு. இதற்கோர் விதிவிலக்கு காமாட்சி.

    பெரியவர் கட்டளை அவளுக்கு: பூவிற்றல் முடிந்தபின் தரிசனம்.
    கருணையுளம் ஒப்புமோ அவள்கொண்ட கனிபக்தி பிழைப்பினைக் கெடுக்கவே?

    ஓரிரவு நாகராஜனைப் பணித்தார் ஒன்பதுமணி செய்திகேட்டுச் சொல்ல.
    பாரினில் நடப்பது குறித்துப் பரிவுடன் கேட்டார் பெரியவர்.

    இகமறுத்த ஜகத்குரு என்றாலும் இன்னல்கள் தீர்க்க உலகியலும்
    உகந்தவர் கேட்டு அலசி உன்னதத் தீர்வுகள் சொல்வார்.

    பெரியவர் கால்களில் வெல்வெட்டுப் பாதுகை. புதுக்கோட்டை ஜானாவெனும்
    பெண்மணியின் அன்புக் காணிக்கை. பாதுகை வேண்டினார் நாகராஜன்.

    பெரியவர் அன்று முழுவதும் பாதுகையைக் கழற்றாமல் அணிந்திருந்தார்.
    பரிவுடன் அளித்தார் பாதுகையைப் பூக்காரி தரிசனம் செய்தபோது.

    ’இந்தாஇது உனக்குத்தான், எடுத்துக்கோ!’ விந்தையில் உறைந்த காமாட்சி
    வந்தனையுடன் பெற்றுக் கொண்டாள் அந்தமில் கருணைப் பரிசினை!

    எத்தனைபேர் பாதுகை விழைந்தனர் அவளிடம்! ’வட்சரூபாய் தருகிறோம்
    அத்தனையும் உனக்கே’ என்றபோதும் அசையவில்லை அவளது அசலபக்தி.

    பெரியவர் அவள்தேவை அத்தனையும் பரிவுடன் நிறைவேறச் செய்தார்
    திருமணம் அவள்வீட்டில் நிகழ்ந்த தருணம் பொருளுதவி பலசெய்தார்.

    பெரியவர் சித்தியான பின்னரும் பூக்காரியின் அர்ச்சனையவர் சமாதிக்கு.
    ஒரேஒரு வித்தியாசம் பெரியவர் இருந்தபோது வெறுமனே அனுப்பமாட்டார்.

    அப்பா நீயிருந்தால் எனக்குத் தப்பாமல் பிரசாதம் அளிப்பாயே
    இப்போதுநான் வெறுங்கூடை யுடனே! என்றவள் உட்கார்ந்து புலம்பினாள்.

    புலம்பியவள் கூடையில் அதிட்டானம் உள்ளிருந்து யாரோ எறிந்ததுபோல்
    மலரொன்று விழுந்தது செம்பருத்திப் பூவின் பிரசாதம் என்றே!

    பெரியவர் மறைந்ததுநம் விழிகளில் இருந்தே. இதுபோன்ற நிகழ்வுகளால்
    பிரத்தியட்ச மாகநின்று அவரென்றும் அருள்பாலித்தல் பலரது அனுபவம்.

    *****
     
    3 people like this.

Share This Page