1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அரீஸு ஆனி முளுங்கிட்டாங்...

Discussion in 'Posts in Regional Languages' started by manjukps, Dec 16, 2011.

  1. manjukps

    manjukps IL Hall of Fame

    Messages:
    1,738
    Likes Received:
    2,349
    Trophy Points:
    300
    Gender:
    Female
    [justify]

    அப்பொழுது நாங்கள் எங்கள் ஊரான திருநெல்வேலியில் இருந்தோம். என் மூன்று வயதில் என் தம்பி ஹரிக்கு ஒரு வயது. அநேகமாய் என் மூன்று வயதிலிருந்து ஐந்தாறு வயது வரையில் "அரீஸு ஆனி முளுங்கிட்டாங்..." என்று ஆரம்பித்து அந்த இரண்டு வரிக்கதையை ஒரு ஆயிரம் முறையாவது சலிக்காமல் சொல்லியிருப்பேன். அதுவும் அவ்வூருக்கே உரித்தான நெல்லைத் தமிழில், என் வயதுக்குறிய மழலையில். என் வீட்டிற்கு வருவோருக்கெல்லாம் என்னிடம் இந்த கதையைக் கேட்பது நல்ல பொழுதுபோக்கு. என் அம்மாவின் பாட்டியின் குடும்பம் பெரியது. அதனால் கல்யாணம், சீமந்தம் என்று ஏதாவது விசேஷங்கள் நடந்துகொண்டே இருக்கும். அப்பொழுதெல்லாம் என்னுடைய இக்கதை சொல்லும் படலம் கண்டிப்பாக இருக்கும். இன்னமும் அம்மா வீட்டுப் பெரியவர்கள், என் சித்தப்பா இதனை நினைவுகூறுவார்கள்.

    அக்கதை உங்களுக்காக இதோ...

    "அரீஸு ஆனி முளுங்கிட்டாங்..... ஆனி முளுங்கிட்டானா ....(உம்..*.) டாக்டர் வாளப்பளம் குடுக்க சொன்னாங்களா...(உம்..*) எங்கம்மா வாளப்பளம் குடுத்தாங்களா.....(உம்..*) ஆனி அந்தால வெளிய வந்திருச்சு."

    நடந்த கதை : எங்கள் வீட்டில் ஐயப்ப பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. ஒரு புதிய படத்தை மாட்டுவதற்காக சிறு ஆணியை எடுத்து என் சித்தப்பா அடிக்க அது அலங்காரத்திற்காக வைத்திருந்த படியின் பின்னால் விழுந்துவிட்டது. அது அவர் கண்ணில் படாததால் வேறு ஆணி அடித்து படத்தை மாட்டிவிட்டார். சிறிது நேரம் கழித்து அங்கே தவழ்ந்து வந்த தம்பியின் கண்ணில் பட, கண்ணிமைக்கும் நேரத்தில் அதை அவன் வாயில் போட்டு முழுங்கிவிட்டான். சித்தப்பா அவன் வாயில் விரலை விட்ட போது ஆணி தொண்டையில் இறங்கிவிட்டது. அலறியடித்து டாக்டரிடம் ஓட, எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் ஆணியின் தலைப் பாகம் அடியிலும், நுனி மேல் பார்த்தும் உணவுக்குழாயில் இறங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. ஆணி இப்போதைக்கு தலைகீழாக நகர்ந்து கொண்டிருப்பதால் எங்கும் குத்தாது. அதனால் இப்பொழுது ஒன்றும் செய்யவேண்டாம். இன்று இரவு அவனுக்கு வாழைப்பழங்கள் கொடுங்கள். காலையில் அவன் மலம் கழிக்கும்போது வெளியில் வருகிறதா பார்க்கலாம். இல்லாவிட்டால் காலை கூட்டிவாருங்கள், பின் முடிவெடுக்கலாம் என்று அனுப்பிவிட்டார். வீட்டில் வாழைப்பழங்கள் குவிந்தன. அம்மா அவனுக்கு மலைவாழைப்பழங்களை அவ்வப்பொழுது ஊட்டினார்கள். இரவெல்லாம் தூங்காமல் காலை அவன் மலம் கழிப்பதை பார்க்க சுற்றம் கூடியிருந்தது. அனைவரும் வேண்டாத தெய்வமில்லை. அப்பாடா இதோ மலம் கழித்துவிட்டான். ஒரு குச்சியால் கிளறிப்பார்த்தில் ஆணி வெளிப்பட்டு எல்லோர் வயிற்றிலும் பாலை வார்த்தது.

    விசாரிக்க வந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கெல்லாம், பெரியவர்களால் இந்நிகழ்ச்சி விவரிக்கப்பட, கேட்டுக்கொண்டிருந்த நான், என்னாலான கைங்கரியமாய் "அரீஸு ஆனி முளுங்கிட்டாங்..." என்று அடுத்த மூன்று நான்கு வருடங்களுக்கு தொடர்ந்துகொண்டிருந்தேன். அந்த நெல்லைத் தமிழ் தாக்கம் எங்கள் வீட்டில் பல வருடங்களாய் வேலைசெய்துகொண்டிருந்த சுடலையம்மாவிடமிருந்து வந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். சென்ற வருடம் அவர்கள் வீட்டிற்குச் சென்றபோது, கண்களில் நீர்த்துளிகளோடு, மனதில் பழைய நினைவுகளோடு அணைத்துக்கொண்டோம்.

    பி.கு. : உம்..* - கேட்பவர்கள் சொல்லவேண்டிய 'உம்..' சொல்லாவிட்டால் கதை தொடராது.




    [/justify]
     
    11 people like this.
    Loading...

  2. lovelyme

    lovelyme Silver IL'ite

    Messages:
    388
    Likes Received:
    245
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Nice snippet.. I love the way you wrote and your language style is very good... Love it
     
  3. lgirish

    lgirish Platinum IL'ite

    Messages:
    1,408
    Likes Received:
    715
    Trophy Points:
    208
    Gender:
    Female
    I remember a funny incident that happened in my neighbourhood. MY neighbour Achu was about 8 months old swallowed the tip of a ball point pen refil. He was also given the same treatment by his paati. Everyone waited for a `safe delivery`. The next day when he passed stools his mom heaved a sigh of relief to see the metal object in it. Now he is 13 years old and we still make fun of him remembering this incident. Good post manju
     
  4. manjukps

    manjukps IL Hall of Fame

    Messages:
    1,738
    Likes Received:
    2,349
    Trophy Points:
    300
    Gender:
    Female
    Thank you lovelyme for your first feedback.
     
  5. manjukps

    manjukps IL Hall of Fame

    Messages:
    1,738
    Likes Received:
    2,349
    Trophy Points:
    300
    Gender:
    Female
    Thank you lgirish for compliments

    Apart from this episode, my uncle's daughter swallowed a pin, got stuck in her throat and was removed with tiny forceps.

    My son (2 yrs) when we were in US put the sticker on the Apple in his nose. As it was going in while he was breathing, I didn't have time to call up husband. So I took the risk of holding him tight and took out the sticker with eyebrow tweezers I had. I prayed all Gods while doing this as it is too risky if I poke his nose inside.

    Regards
    Manjukps
     
  6. ravs

    ravs Senior IL'ite

    Messages:
    66
    Likes Received:
    22
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Hi Manju

    Nice one, i had the same experience with my son when he was 2 years he swallowed a penny. when i read this, it reminded me that.

    thanks
    ravs
     
  7. manjukps

    manjukps IL Hall of Fame

    Messages:
    1,738
    Likes Received:
    2,349
    Trophy Points:
    300
    Gender:
    Female
    Thanks ravs,

    take care of your health.

    When I was young the seriousness of the situation was never known to me. I felt appreciated when people enjoyed my story telling.

    Even my daughter once swallowed a flat 50p sized watch battery, when she was 6 yrs old. She didn't tell that to my husband, but was crying as I had gone out (just for few minutes). By God's Grace my father had called to talk to her as usually he does, then he found after pacifying her. Then my hubby called me and I rushed back he took her in the car. Then we took her to endoscopy specialty hospital. She was given local anesthesia. The battery was taken out from her throat. I was horrified, my hubby got heavy dose from me.

    Still I feel guilty about this incident, so I have avoided mentioning about this. Here I am mentioning in a public forum is because to caution all parents of small kids. We won't what the kids are upto.

    Regards
    Manjukps
     
    1 person likes this.
  8. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    நல்ல ஒரு Anubhavam.
    ஒரு முறை என் பெரிய சகோதரி இப்படி தான் ஊசி முழுங்கிய உடன் எங்க அப்பா சமயோசிதமாக செயல் பட்டதினால் உயிரை காப்பாத்த முடிஞ்சது. இல்லையினா அவ்வளவு தான். என்ன ஆயிருக்கும்னு யோசிச்சு பாருங்க. நன்றி. Thanks for sharing. Nice snippet
     
  9. manjukps

    manjukps IL Hall of Fame

    Messages:
    1,738
    Likes Received:
    2,349
    Trophy Points:
    300
    Gender:
    Female
    Thank you malaswamy for the feedback.

    Thank you meerapavya for liking the post

    Regards
    Manjukps
     
  10. Priesh

    Priesh Platinum IL'ite

    Messages:
    2,066
    Likes Received:
    633
    Trophy Points:
    208
    Gender:
    Female
    hum nice snippet manju.
     

Share This Page