1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இன்றைய இளைஞர்களின் சுதந்திர தினம்

Discussion in 'Posts in Regional Languages' started by tnkesaven, Aug 20, 2011.

  1. tnkesaven

    tnkesaven Gold IL'ite

    Messages:
    544
    Likes Received:
    160
    Trophy Points:
    108
    Gender:
    Male
    this is as a result of independence day contest;ask questions on indian freedom conducted by indus ladies' forum during august2011contest இன்றைய இளைஞர்களின் சுதந்திர தினம் குறித்த கருத்துகளைப் பதிவு செய்து ஒளிபரப்பியது ஒரு தொலைக்காட்சி. அதைப் பார்த்த அனைவரும், வெட்கித் தலைகுனியும் வகையில் இளைஞர்களின் பதில்கள் அமைந்திருந்தன.
    இக் காட்சிகள் இன்றைய இளைஞர்களின் எதிர்காலப் பாதை எதை நோக்கிச் செல்கிறதோ என்ற அச்சத்தையும் பார்த்தவர்களின் மனதில் ஏற்படுத்தியுள்ளது.
    ஆக.15 சுதந்திர தினம். சுதந்திர தினத்தை (விடுமுறையை) எவ்விதம் மக்களுக்குப் பயனுள்ளதாகக் கொண்டாடுவது என்று ஒவ்வொரு தொலைக்காட்சி சேனல்களும் மூளையைக் கசக்கிப் பிழிந்து விதவிதமான நிகழ்ச்சிகளைத் தங்களின் நேயர்களுக்காக வழங்கின.
    சில சேனல்கள் திரைப்படப் பிரபலங்களிடம் மக்களுக்கான ஆலோனைகளை வரிவரியாகக் கேட்டு ஒளிபரப்பின.
    சில சேனல்கள், பட்டிமன்றங்களில் சுதந்திரம் குறித்து உரைவீச்சை ஒளிபரப்பின. இந்தச் சேனல்களின் சுதந்திர கொண்டாட்டத்திற்கிடையே, பொதிகை தொலைக்காட்சியில் வெளியான ஒரு நிகழ்ச்சி, இன்றைய இளைய தலைமுறையின் உண்மையான முகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியது.
    அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஒருவர், மாணவர், இளைஞர், வேலைதேடுவோர் என பலரிடமும், மைக்கைக் கொடுத்து கேள்வி எழுப்ப, அவர்கள் ஏதோ விருப்பப் பாடல் கேட்கிறார் என எண்ணிக்கொண்டு, பேச்சுக் கொடுக்க அதன்பின்தான் புரிகிறது. அது விருப்பப் பாடலுக்கான நிகழ்ச்சியல்ல.
    சுதந்திர தினம் குறித்த கருத்துகளைப் பதிவு செய்யும் நிகழ்ச்சி என்பது. இக்கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் பலரும் மெதுவாக நகர, சிலர் வேறு வழியின்றி தவறாகவே பதில் சொல்ல, நிகழ்ச்சியைப் பார்த்த அனைவருமே நிச்சயம் வருத்தப்பட்டிருப்பார்கள்.
    கேள்விகள் ஒவ்வொன்றும், குரூப்-1 தேர்வில் கேட்கப்படக்கூடிய கேள்விகள் அல்ல. காந்தியின் முழுப்பெயர் என்ன? சுதந்திரம் என்று கிடைத்தது? சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், வாஞ்சிநாதன், பாரதியார் இவர்கள் யார்?
    பாரதியாரின் பாடல் வரிகள் சிலவற்றை கூறுக, தேசிய கீதத்தை எழுதியவர் யார்? தேசிய கீதத்தின் இரண்டு வரிகளைச் சொல்லுங்கள் என அந்தத் தொகுப்பாளர் எழுப்பிய கேள்விகளுக்குச் சரியான விடையை சிலர்தான் கூறினர்.
    பெரும்பாலான பொறியியல் மாணவர்கள் இதற்கான பதிலைக் கூறவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.
    முடிவாகப் பேசிய நிகழ்ச்சி தொகுப்பாளர், கேள்விகள் குறித்துச் சரியான பதில் சொல்பவர்களுக்கு காந்தி எழுதிய சத்திய சோதனையைப் பரிசாகக் கொடுக்க வாங்கி வைத்திருந்தோம். அதில் பெருமளவு புத்தகங்கள் எங்களிடமே மிச்சம் உள்ளன என வேதனை தெரிவித்தார்.
    உண்மையில், இது இன்றைய இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள சத்திய சோதனைதான்.
    இன்று நாம் நிம்மதியாக உலா வருகிறோம். உரிமையுடன் பேசுகிறோம். எழுதுகிறோம் என்றால் அதற்கு வித்திட்டவர்கள் அன்றைய சுதந்திரப் போராட்டத் தியாகிகள்தான் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
    வரலாறு என்பது தேர்வுகூடத்தில் மதிப்பெண் பெறுவதற்காக படித்த நிகழ்வு என்பதை மாற்றி, அந்த வரலாற்றின் உணர்வையும், உண்மையான வலியையும் ஒவ்வோர் இளைஞனும் உணர்ந்தால்தான், எதிர்கால இந்தியா வளமான இந்தியாவாகத் தொடரும்.
    இந்த உணர்வை ஊட்ட வேண்டிய கடமை பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்தான் பெருமளவு உள்ளது. இதைக் கடமையாகச் செய்யாமல், கவனமாகக் கையாண்டால், சுதந்திரம் பெறுவதற்காக வலியை அனுபவித்த தியாகிகள் இன்று நிச்சயம் மகிழ்ச்சியடைவார்கள்.
    இதையும் தாண்டி ஊடக பலம் ஊடுருவியுள்ள இன்றைய யுகத்தில் ஊடகங்களும் தங்கள் பங்குக்கு சில மணி நேரமாவது, தொடர்புடைய நிகழ்ச்சிகளை (அதாவது சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாள்களில் அது தொடர்பான நிகழ்ச்சிகள்) ஒளிபரப்பினால் இளம் தலைமுறையினர் புதிய தகவல்களை அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
    இன்னும் சொல்லப்போனால் இதுபோன்ற கேள்விகளை அனைத்துத் தேர்வுகளிலும் இடம்பெறச் செய்தால் அன்றைய வரலாறு இன்றும் நீடித்திருக்கும்.
     
    2 people like this.
    Loading...

  2. manjukps

    manjukps IL Hall of Fame

    Messages:
    1,738
    Likes Received:
    2,349
    Trophy Points:
    300
    Gender:
    Female
    Well said. 100% I agree with you. We each one have part in this. These TV channels should have little more irresponsibility as today's youngsters are glued to it on holidays.

    I appreciate IL' s Independence day contest. While trying to answer I browsed the net to know more new informations.

    Regards
    Manjukps
     

Share This Page