1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்!

Discussion in 'Posts in Regional Languages' started by mkranjani, Jan 19, 2011.

  1. mkranjani

    mkranjani Senior IL'ite

    Messages:
    80
    Likes Received:
    15
    Trophy Points:
    23
    Gender:
    Female
    திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்!


    உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம். வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார்.
    பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார். அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார் நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

    அடியிற்கினியாளே அன்புடையாளே
    படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
    பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
    இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு


    என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

    இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!
     
    1 person likes this.
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Re: திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல&#30

    படிக்க மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. பாடல் அருமை. உங்கள் எழுத்து நடையும் எளிமையாகப் புரியும்படி இருந்தது
    ரஞ்சனி. நன்றி. -ஸ்ரீ
     
    Last edited: Jan 19, 2011
  3. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    Re: திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல&#30

    ithuvarai yarukum theriatha oru vishayathai soliviteerkal, nandri

    ungal yzhuthu nadai arumai ,
     
  4. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    Re: திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல&#30

    தெரிந்த நிகழ்வுகள் தான் என்றாலும், 4 வரி பாடல் பற்றிய தகவல் புதிது எனக்கு. உங்கள் எழுத்து மிக எளிதில் புரியும்படி இருந்தது...வாழ்த்துக்கள் ரஞ்சனி
     
  5. sublakshmi

    sublakshmi Bronze IL'ite

    Messages:
    185
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Re: திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல&#30

    Hi,

    Very interesting fact to know, this is the first time I am coming to know that he has written a four lines poem. We all talk abt thirukkural only. Thanks for sharing. It is nice to know that he expressed his sorrow and he too missed his wife. Many of us know instances abt vasuki.


    Have a nice day.
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல&#30

    அறியாத செய்தி.
    அழகுற அடிகளின் விளக்கத்தோடு.
    மிக்க நன்றி ரஞ்சனி.
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Re: திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல&#30

    வாழ்நாள் முழுவதும் வாசுகி அம்மையார் செய்தவற்றுக்கு நான்கு வரி பாடல் எழுதி திருவள்ளுவர் நன்றி சொல்லி விட்டார்.இந்த புதிய தகவல் சொன்ன உங்களுக்கு நன்றி ரஞ்சனி.
     
  8. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல&#30

    Ranjani,

    Thiruvalluvar, 4 vari paadal yezhudhinaara...enru ninaikkum podhu...avar thunaiviyaar Vasugiyai patri yezhudhiyadhai padithavudan..:bow:
    Ennathan ulagukku 2 varigal yezhudhinaalum, manaivikku 4 varigal ezhudhi..thunaiviyaar enrume special dhan enru niroobhithu vittar...illaiyaa..

    sriniketan
     
  9. mithy232

    mithy232 Silver IL'ite

    Messages:
    1,663
    Likes Received:
    48
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல&#30

    Ranjini,

    Idha share panadhuku thanks!

    Valluvar-Vasuki ku :bowdown
     
  10. Swethasri

    Swethasri Platinum IL'ite

    Messages:
    1,653
    Likes Received:
    1,567
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல&#30

    Ranjani,very nice to know this fact.Thanks a lot for sharing it.
     

Share This Page