1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க

Discussion in 'Posts in Regional Languages' started by veni_mohan75, Oct 8, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க

    பொதுவா இப்படி யாரும் வாழ்த்தும் போது ஒடனே ரொம்ப புத்திசாலித்தனமா கவர்ன்மென்ட் ரெண்டுக்கு மேல கூடாதுன்னு சொல்லிர்க்கே அப்புறம் பதினாறு எதுக்கு அப்டீன்னு என்னவோ கவர்ன்மென்ட் சொல்லறதை அட்சரம் பிசகாம செய்யற மாதிரி பீலா விடற நெறைய பேரை நாம பாத்திருக்கோம்.... இன்னும் சிலர் அதோட அர்த்தமே தெரியாம "நன்றி" அப்டீன்னு சொல்றதை பார்த்திருக்கோம். நான் இப்படித்தான் இருந்தேன் ரொம்ப நாளா....

    அப்படி என்னதான் இருக்கு இந்த பதினாருல-ன்னு ரொம்ப நாளா எனக்கு தெரியலை. அப்புறம் ஒரு சுபயோக சுபதினத்தில இந்த வார்த்தைகள் எனக்கே வாழ்த்தா வர, வாழ்தினவரையே கேட்டுட்டேன்...

    அதுக்கு அந்த பெரியவர் ஒரு செய்யுளாவே சொன்னார் அதை.

    கலையாத கல்வியும் குறையாத வயதும்
    ஓர் கபடு வராத நட்பும்,
    கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
    கழுபிணியிலாத உடலும்,
    சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
    தவறாத சந்தானமும்,
    தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
    தடைகள் வராத கொடையும்,
    தொலையாத நிதியமும் கோணாத கோலும்
    ஒரு துன்பமில்லாத வாழ்வும்,
    துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
    தொண்டரோடு கூட்டுக் கண்டாய்
    அலையழி அறிதுயிலும் மாயனது தங்கையே
    அதிக்கடவூரின் வாழ்வே
    அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
    அருள்வாய் நீ அபிராமி...

    ரொம்ப அழகா பாடிட்டு அவரே அதுக்கு பொருளும் சொன்னாரு. கேட்டு தெரிஞ்சதுக்கு அப்புறம் மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்தது...

    1. கலையாத கல்வி
    2. குறையாத வயது
    3. கபடில்லா நட்பு
    4. கன்றாத வளமை
    5. குன்றாத இளமை
    6. பிணியில்லா உடல்
    7. சலிப்பில்லா மனம்
    8. அன்பான வாழ்க்கை துணை
    9. தவறாத மக்கட்பேறு
    10. குறையாத புகழ்
    11. வார்த்தை தவறாத நேர்மை
    12. தடையில்லாது தொடரும் கொடை
    13. தொலையாத செல்வம்
    14. பராபட்சம் இல்லாத அரசு
    15. துன்பம் இல்லாத வாழ்க்கை
    16. இறைவனின் அருள்

    இந்தப் பதினாறும் எனை விட்டு விலகாம இருக்கணும்-ன்னு அபிராமி பட்டர் அவரோட பாட்ல சொல்லி இருக்கார்.

    இதை தான் நம்ம பெரியவங்களும் பிறரை வாழ்த்தும் போது சொல்றாங்க. இத்தனை நல்ல விஷயங்கள் நம்மோட இருக்கணும்-ன்னு இனி யாரும் வாழ்த்தும் போது நாம அதோட பொருள் உணர்ந்து சந்தோசப் படுவோம். நாமளும் இப்படி வாழ்த்துவோம் மத்தவங்களை....

    இதோ நான் துவங்கிட்டேன்... "அனைவரும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க"
     
    1 person likes this.
    Loading...

  2. Spiderman1

    Spiderman1 Gold IL'ite

    Messages:
    4,555
    Likes Received:
    102
    Trophy Points:
    130
    Gender:
    Male
    It took a Scotland Yard detective to explain this so beautifully to us.
    Thank you Veni. Very well written.

    Padhinaaru kooda padhinezhu onnu bonus-a enjoy pannunga! :)
     
    Last edited: Oct 8, 2010
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    வேணி நீவிர்

    பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என வாழ்த்தும் அம்மா.
    அத்துடன் ஆய கலை அறுபத்து நான்கும் கற்று வாழ்க

    நான் எழுதியது சரிதானா வேணி
     
    Last edited: Oct 9, 2010
    1 person likes this.
  4. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Wow...idhula ippadi oru meaning iruka? enaku ivlo naal theriyadhu... Good to know. Whatever elders have said, there is a meaning which we never understand and so fail to follow it...Thanks for sharing :)
     
  5. monifa13

    monifa13 Bronze IL'ite

    Messages:
    403
    Likes Received:
    35
    Trophy Points:
    48
    Gender:
    Female
    சரியான இடத்தில சரியான விஷயத்தை சொன்னீர்கள் வேணி மோகன். இவை எல்லோருக்கும், எந்த நேரத்திற்கும் பொருந்தும் பொதுவான சொற்கள். பாரபட்சம் இல்லாத அரசை எப்படி உருவாக்குவோமோ தெரியவில்லை. மற்றவை எல்லாமே நம் கையிலும் ஆண்டவன் தீர்ப்பிலும் உள்ளன. நல்லதையே நினைப்போம், செய்வோம். இங்கு நமது il குடும்பம் 'பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ' எல்லாம் வல்ல இறைவனை என்றென்றும் வேண்டுகிறேன்'.
     
    1 person likes this.
  6. mithy232

    mithy232 Silver IL'ite

    Messages:
    1,663
    Likes Received:
    48
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Idhala ivalo matter iruku nu enaku ipa than theriyum

    Thanks for posting Veni :)
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேணி உங்களை ஸ்நிபட்ஸ் பகுதியில் பார்த்ததே மிக்க மகிழ்ச்சி.
    பதினாறு செல்வங்களையும் அழகாக விளக்கியது அதனினும் மகிழ்ச்சி.
    நிறைய எழுதுங்கள் இதுபோல் மனதிற்கு நிறைவாய் நிறைய எழுதுங்கள்.
    தாங்கள் அறிந்ததை நாங்கள் அறிய எங்களுடன் அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்.
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    வலையை விட்டு வெளியே எங்கள் பக்கங்களுக்கும் வந்தமைக்கு நன்றி ஸ்பைடர் மேன்

    எதிர்பாராத வருகை, மிக்க மகிழ்ச்சி.

    பதினேழாவது சந்தேகம் இல்லாம அதிர்ச்சிதான். :)
     
    Last edited: Oct 9, 2010
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அம்மா,

    உங்கள் அன்போடு கூடிய இந்த வாழ்த்து எனக்கு மிகவும் நிறைவு தந்தது அம்மா. நீங்க சொன்னா தப்பா இருக்குமா என்ன ??!!

    ஆய கலைகள் அறுபத்தி நான்கு.... அடுத்து நான் எழுத வேண்டியது எதைப் பத்தி-ன்னு நீங்க சொல்லிடீங்க மா.:idea எழுதிடறேன் :)
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஐஷு,

    உண்மைதான் நீங்க சொல்றது. பெரியவங்க நம்ம நல்லதுக்கு சொன்ன சில விஷயங்களை நமக்கு தெரியாத காரணத்தாலே அதை சில நேரங்கள்ல புறக்கனிக்கறோம். அதுல இதுவும் ஒன்னு.

    உங்களுக்கு என் பதிவு பிடிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோசம். நன்றி
     

Share This Page