1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சான்றாகும் அது !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, May 19, 2015.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மழை விட்ட பிறகும் சிதறும் தூறல் போல நீ
    போன பிறகும் காதில் ரீங்கரிக்கும் உன் பேச்சு !
    நிழல் விழுந்து கிடக்கும் மரத்தினடியில்
    ஆன வரைக்கும் பேசித்தீர்த்தப் பின்னெழும் பெருமூச்சு !

    குழந்தைகள் எப்போதோ விட்டுச் சென்ற பிறகும்
    ஆடிக் கொண்டிருக்கும் அந்த ஊஞ்சல் போல் நீ
    எழுந்து சென்ற பிறகும் என் மனதில்
    ஓடிக் கொண்டிருக்கும் உன் கொஞ்சல் !

    கால்தடம் பலவும் கூடிக் கலையுமிடத்தில்,
    கடவுள் போல் என்னை உன் வசமிழுத்து
    மேலெழும் அலைகள் போல் ஆர்ப்பரித்து அடங்கும்
    கடற்கரை மணலெங்கும் நீ கொட்டிச் சென்ற அன்பு !

    சுதாரித்திருக்கலாம், சற்றே தணிவாய்ப் பேசியிருக்கலாம் ,
    விசாரணைக் கைதியாய் என்னை நீ கேள்விகள் கேட்ட போது,
    நிதானித்திருக்கலாம் , என் நெஞ்சை மெதுவாகத் திறந்திருக்கலாம் !
    அசாதாரண மௌனத்தைப் பரிசாய்த் தந்து சென்றது உன் கோபம் !

    கனத்திருக்கும் என் இதயம் வலித்தழும் ஓசை உன்
    இருசெவிகளில் விழாமலில்லை, எனக்குத் தெரியும் !
    மனத்திருக்கும் அன்பைப் பூட்டி நீ வைத்தாலும் என்
    வருகைக்குக் காத்திருப்பாய் என்பதும் புரியும் !

    விளையாட்டுச் சண்டையல்ல , சற்று பெரிதுதான் என்றாலும்,
    நன்றி கூறுகிறேன் நான் இந்தத் தருணத்திற்கு - ஏனெனில்
    களைப்பூட்டிக் கண்களில் நீர் பெருக்கும் இவ்வூடல் தான்
    சான்றாகும் நாம் கொண்ட இந்தக் காதலுக்கு !


    Regards,

    Pavithra
     
    6 people like this.
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Very nice one @PavithraS.
    Very realistic too.
    [Updated later]

    மிகவும் கொஞ்சும் உன்னால் தான்
    மிகவும் கோபிக்கவும் முடிகிறது.
    மிக அதிகம் பேசும் நானும் தான்
    மௌனம் காத்திட நேரிடுகிறது.

    நீ சொன்ன சொற்கள் எல்லாமே
    என்னுள்ளே கல்வெட்டாகிறது.
    உன் அன்புத் தொடல்கள் ஒவ்வொன்றும்
    எனை என்றும் உயிர்த்திடச் செய்கிறது.

    உன் கோபம் தரும் அச்சிறுபிரிவு
    எனை மேலும் உன்பால் ஈர்க்கிறது.
    என் விழி நீர் பெருகி நீளரவு
    என நெடுகிலும் ஓடிக் கிடக்கிறது.

    உன் கோபம் தீர்ந்தே நீ வருவாய்
    தாயைப் பிரிந்திடும் சிறு கன்றாக.
    உனை நன்றாய் வரவேற்கும் விதமாய்
    அணைத்திடுவேன் நானும் நன்றாக.
     
    4 people like this.
  3. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Ada ada!! :thumbsup
     
    1 person likes this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thank you , Rgs !!

    Nice one you too !! Oodalukkup pinnaaa koodalgal thaan kaadhalin valimaikku vilakkamaagum, allava?

    Regards,

    Pavithra
     
    2 people like this.
  5. Love84

    Love84 Bronze IL'ite

    Messages:
    139
    Likes Received:
    32
    Trophy Points:
    48
    Gender:
    Female

    Evalavu nanraga irukinrathu padipatharku. Besh Besh ... mademydaysmiley
     
    1 person likes this.
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thank you ! @kaniths , @Love84 :thankyou2:

    Regards,

    Pavithra
     
  7. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
    :wow[​IMG]
     
    1 person likes this.
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஊடல் வந்தால் தான் தேடல் அதிகமாகும் .நன்று நன்று கவிதை நன்று

    கடல் அன்னையே உனக்கு பொறுமை அதிகம் .இப்படி எத்தனை ஜோடிகள் பார்த்திருப்பாய்
     
    1 person likes this.
  9. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female

    Thank you, periamma !

    Kadal annai mattumalla, angu sundal virpavargalukkum niraiya kaadhala(i)rgalaith theriyum !!!


    Regards,

    Pavithra
     
    3 people like this.
  10. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    netru pasalai, indru oodal, pin koodal migavum nandru Pavithra.

    We are having a feast reading yours as well as the reply poems by @rgsrinivasan too.

    Thank you for a wonderful poem
     
    2 people like this.

Share This Page