1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உப்பு........ப்பூ ........!!!!!!!!!!!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 8, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நாய் விற்ற காசு குரைக்குமா?
    உப்பு விற்ற காசு உவர்க்குமா?

    உப்பளத்து பாத்திகள் நடுவில் உழன்று
    பாளமாய் வெடித்த பாதங்களுடன்
    சின்னக்கண்ணு , செல்லத் தாயி!
    செல்லரித்துப் போன வாழ்க்கை.
    எஞ்சி இருக்கின்ற ஒரு சொட்டு
    விழி நீரும்
    கதை சொல்லும்
    உப்பு அரிக்கும் என்று.

    உப்பு சத்யாகிரகத்திற்கு
    தேசப் பிதாவிடம்
    தாது கொடுத்த பூமி இன்று
    காவு கொடுக்கப் பட்டு
    கந்தகமாய் தகிக்கிறது.
    பணம் காய்ச்சி பட்ட மரங்களாய் இன்று
    பொட்டல் வெளியில்
    புழுங்கிச் சாகிறது
    பணம் ஈட்டும் முதலாளி கைங்கரியத்திலே
    ப்பூ என்று ஊதித்தள்ளும் தைரியத்திலே ........

    உப்பு விளையும் பூமியிலே நன்றி இல்லை.
    உப்பிட்டவரை உலையிலே வை.

    உப்பில்லா பண்டம் குப்பையிலே
    நன்றி பண்பில்லா பிண்டம்????

    மறுமுறை.....
    உப்பை சுவைக்கும் முன்
    நினைவில் வையுங்கள்
    உங்கள் நாவின் அடியில்
    சுவை மொட்டுகளாய்
    நசுக்கப்பட்ட ஏழ்மை நரம்புகள்
    மண்டிக்கிடக்கிறது என்று .

    விடியல் இல்லாமல்
    வெளிச்சத்தை நோக்கி
    நாலாந்திரப்பட்ட
    மெலிந்த மனித நேயம்.........
     
    Last edited: Jun 8, 2010
  2. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Saroj.......very thought provoking kavithai dear !!
     
  3. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    :wowYash...........
    Wonderful and touching line.:bowdown
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    "உப்பு விளையும் பூமியிலே நன்றி இல்லை.
    உப்பிட்டவரை உலையிலே வை."

    உண்மை தான் சரோஜ்!
    அன்று உப்பிட்டவரை உள்ளளவும் நினைத்தார்கள் இன்றோ நீங்கள் சொன்ன கதை தான்!
    நாவில் ருசி கூட்டும் உப்பின் பின்னால் ஏழ்மை வியர்வை துளிகளும் கண்ணீர் துளிகளும் கண்ட என் அருமை தோழி உன் மனதை என்னவென்று பாடுவது??
    அருமையான கவிதை!:thumbsup
     
  5. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear saro

    thoothukudi pogumpathayil paarthirukkiren. veyyilil varanda uppalangalil velai cheiyum pala manithargalaiyum. avargalin avalangalai kaatti ithanai
    arputhamaana kavithai, kachithamaaga uppitta pandam pola rusikkirathu. irunthaalum padikkumbothu varum kanneeril uppin chuvai kooduthalaagave therigirathu.

    beautiful poem dear.


    ganges
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ரோஜா,

    உப்பலங்களிலே அப்பளமாய் நொறுங்கிப் போன மனித இதயங்களின் வலியை கண் முன்னே நிறுத்தின உனது வரிகள்.... என்று தீரும் இந்த சமுதாய அவலங்கள்... கண் மூடினாலும் தீராத அதர்மங்கள் .... ஏழைகள் பரம ஏழைகளாக, பணக்கார்கள், பெரும் பணக்காரர்கள் ஆகிக் கொண்டே இருக்கின்றனர். ஒருவர், இருவர் மாறுவதில் எந்தப் பயனும் இல்லை, இது மொத்தமாய் ஒரு சமுதாயமாய் மாற வேண்டும். அப்போதுதான் இந்த நிலை மாறும்...

    அதுவரை, அவர்கள் கண்ணீரால் மேலும் உப்பான உப்பின் சுவை நம் நாவிலும், நெஞ்சிலும் மீதம் இருக்கும்....
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அன்று - உப்பிட்டவனை உள்ளளவும் நினை,
    இன்று - உப்பிட்டவனை உலையில் வைத்தாயிற்று என்கிறீர்கள்....
    உலையில் வைக்க வேறு ஒன்றும் இல்ல தாயீ என அவன் புலம்புவது தானே கேட்கிறது...

    நீங்கள் ஏன் கம்யூனிசத் தத்துவங்களுக்கு பிரச்சார பீரங்கியாகக் கூடாது?
    அவர்களின் நிலைமை இன்று உப்பைத் தின்னவன் தன்னியக் குடிப்பான்ற நிலமையில் இருக்கு...
     
    Last edited: Jun 8, 2010
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    romba aluththama pathiya vachurukeenga ka unga karuthai........:thumbsup
     
  9. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Saroj,

    ப்பூ nu oothi thalla mudiyaadha padi uppu patri athanai azhuthamaana karuthu...

    இனி சொல்ல மாட்டார்கள் யாரும் "இது உப்பு பெறாத விஷயம் என்று" for small (foolish)things....

    Nice kavithai pa...
     
  10. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Dear Saroj
    அப்படியே நம் சரோஜினி நாய்டுக்கு ஒரு ஜெ போடுவோம்
    kantha
     

Share This Page