1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நான் பெத்த மகளே!!

Discussion in 'Regional Poetry' started by Nilaraseegan, Jun 7, 2010.

  1. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    நீ பொறந்தநாலு மாசத்துல
    காது குத்த போகையில
    கண்ணு கலங்கி கோயில்
    தூணுக்கு பின்னாலகாணாம
    போனவுக....

    சிலேட்டு குச்சிதிங்குற
    வயசுல வேகாதவெயிலுல
    அஞ்சுமையிலு அலைஞ்சி
    அய்யனாரு கடையில
    நோட்டுப் புத்தகம்
    வாங்கியார போனவுக...

    அம்மன் கோவில் திருவிழாவுல
    பலூனுவாங்க போன புள்ள
    அரைமணி கழிச்சுவந்த நாளுல
    என்னாச்சோ ஏதாச்சோன்னு
    சிங்கத்துக்கு பயப்படாத
    எம் மகராசா சின்னபுள்ள
    உனக்காக பயந்து போனவுக....

    ரெட்ட ஜடை போடுறவயசுல
    பொட்ட புள்ள உனக்குபட்டுத்
    தாவணிவாங்கியார நடந்தே
    பட்டணம்போனவுக...

    வாசல்ல கோலம் போடபோன
    புள்ளமனசுல கோலம்போட்டு
    போனானே ஒரு வெளங்காத பய..

    சடங்கான சேதிய ஆத்தாக்கிட்ட
    சொல்லாம அப்பங்கிட்ட
    சொன்ன பாசங்கெட்ட புள்ள,
    காதலிச்ச கருமத்த யாருகிட்டயும்
    சொல்லாம போனியே!

    வேற சாதி பையனா இருந்தாலும்
    பெத்தபுள்ள உம்பட்டு
    மனசுபட்டுருக்கூடாதுன்னு
    எம் மகராசா சம்மதிச்சிருப்பாகளே….
    அவசரப்பட்டு போயிட்டியே..
    உன்னப் பார்க்கஅவசரப்பட்டு
    எட்டரை மாசத்துல
    நா பெத்தமரிக்கொழுந்தே!

    ஊரெல்லாம் ஒண்ணுக்கூடிசிரிக்க,
    ஓடிப்போன உன்னால உத்திரத்துல
    தொங்கி எம்பொட்டு அழிச்சிபோனவுக...

    நாப்பது வருசம் நாயா
    அலைஞ்சு எறும்பா சேர்த்துவச்ச
    நாப்பது காணிநிலத்த சாகப்போற
    நேரத்துல பொறக்க போற உம்புள்ளைக்கு
    எழுதிவைச்சுபுட்டு போனவுக...

    அப்பஞ் சாவுக்கு வராத
    வெக்கம் கெட்டபுள்ள..
    ஆத்தா நா நிம்மதியா பாடையில
    போக...
    பத்திரம் தொலையும்முன்னே
    பத்திரமா வந்திடடி…
    -நிலாரசிகன்.
     
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நிலாரசிகன் உங்கள் கவிதை அருமை.பாசத்தின் விலை என்ன என்பதை உங்கள் கவிதை புரிய வைத்துள்ளது.
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    அன்னை தந்தை பாசம், அதை அவங்க காட்டும் இடங்கள்.... இதை உணராத இந்த வயசு பசங்க.... ஆழ்கான வரிகள் கொண்டு.... கிராமத்து பாஷையில், மனத்தில் நிர்க்கும் உங்கள் வரிகள் எப்பொழுதும்.... மிக அழகான ஒரு தாயின் புலம்பல்... தன் கணவனின் சாவினை சொல்லும் இடத்தினிலும் அந்த பெண் தன் மகளை வந்து பத்திரத்தை வாங்கும்படி சொல்லும் இடம் தாய் பாசம்.....

    அழகான கவிதை.....
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    azhagana kavithai ....magalin kal manathai eduthusonna kavithai....
     
  5. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    anbu nilaraseegan

    bharathi rajavin nalla oru grameena thamizh padam paartha thripthi ungal paadalil. enna oru yaathaartham. paaraatta vaarthaigal illai. niraya ezhuthungal nilaraseegan.

    ungal peyar polave ungal ezhuthum rasikkumbadi irukkirathu eppothum.


    ganges
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்புள்ள நிலா ரசிகரே!
    என்ன சொல்ல வார்த்தைகள் அற்று போனேன் நின் கவி அழகில்!
    தங்கள் கவி மீதான என் காதலை அதை இந்த மாத சிறந்த படைப்புகளில் நாமினேட் செய்து காட்டியுள்ளேன்!
    தங்கள் கவி வெற்றி பெற என் வாழ்த்துகள் அய்யா!:thumbsup
     
  7. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

    யாமினி,

    பரிந்துரைக்கு நன்றி. என்னை நிலாவென்றே அழைக்கலாம். "அய்யா" ஆகும் அளவிற்கு இன்னும் வளரவில்லை :)
     
  8. kayal89

    kayal89 Senior IL'ite

    Messages:
    116
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Female
    அன்புள்ள நிலா அண்ணா ......
    பாசத்தை விளக்கும் மிக அர்த்தமுள்ள கவிதை :cheers!! இந்த கால சமுதாயம் தாய் தந்தை பாசமற்று ,செய்யும் தவறை அழகான நடையில் சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள்..:thumbsupவாழ்த்து சொல்ல வார்த்தைகள் கிட்டவில்லை எனக்கு!!!!!!:bowdown:bowdown நன்றி !!!!!! :hatsoff
     
  9. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Nilarasigan,

    ஒரு அம்மாவின் பொருமல்களின் ஊடே, ஒரு பெண்ணின் வளர்ப்பில் அவள் தந்தையின் பங்களிப்பை, கஷ்டங்களை மற்றும் பிள்ளை மணம் பித்து என்பதையும் மண் மணம் மணக்க அழுத்தமாய் பதிவுசெய்து இருக்கிறீர்கள்....

    வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கும் விதம் அருமை.. பாராட்டுக்கள் என ஒரு வார்த்தையில் சொல்ல மனமில்லை...
     
  10. Kamla

    Kamla IL Hall of Fame

    Messages:
    8,454
    Likes Received:
    5,103
    Trophy Points:
    440
    Gender:
    Female
    Dear Nilaraseegan,

    I have heard from many members that you write excellently. As my Tamil is rusty and I am slow at reading it, I have not read your works and I know I am the loser for it.

    Your "Naan Peththa Magale" was nominated for FP by Yams and I have included it in the index list. We normally accept only English contributions for the nomination. But being in the index will give this poem more exposure and more Tamil reading members will be aware of it.

    The poem was beautiful with a very obvious 'man-vasanai' absorbing the reader. I do wish that the young girl in love had more love in her heart for her parents too. Wonder why she had to block them off from her life just because she found love of her own choice. Well, life is at times strange.

    L, Kamla
     

Share This Page