1. கூரையிலிருந்து வழிந்து கொண்டிருக்கும் மழைத்துளிகளை சேகரித்து தங்கமீன்கள் இரண்டு நீந்திக்கொண்டிருந்த கண்ணாடி தொட்டிக்குள் விட்டுக்கொண்டிருந்தாள் அச்சிறுமி. மழை நிற்கும் வரை இதைச்செய்தவள் மழை நின்றபின் கைகள் இரண்டையும் தேய்த்து கன்னத்தில் வைத்துக்கொண்டு கேட்டாள் "ஸ்ஸ்ஸ் ரொம்ப குளிருதில்ல?" வாலாட்டியபடி ஆமோதித்தன மீன்கள். 2. அப்பாவிடமும் அம்மாவிடமும் பள்ளியில் பெற்ற "வெரிகுட்"ஐ பலமுறை சொல்லி ஏதோவொன்று குறைந்தவளாய் தன் பொம்மைகளிடம் சொல்ல ஆரம்பித்தாள் அச்சிறுமி. தலையாட்டிக்கொண்டிருந்தன பொம்மைகள் அப்பாவாய்,அம்மாவாய். 3. மழையில் நனைந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள் அந்த சிறுவனும் அவனது நாயும். அப்பாவிடம் அடியும் அம்மாவிடம் திட்டும் வாங்கிக்கொண்டு தலைதுவட்டினான் சிறுவன் அம்மா கொடுத்த துவாலையால். "கவலப்படாத அப்பா உன்னை அடிக்க மாட்டார்" என்றான் தன் நாயிடம். உடம்பை சிலிர்த்துக்கொண்டு அவனையே பார்த்தது அச்சிறுநாய். 4.அப்பாவும் அம்மாவும் தராத அரவணைப்பை பொம்மைக்கு தந்தபடி உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை. கனவில் தோன்றிய கடவுள்கள் அச்சிறு குழந்தையின் அரவணைப்பை வரமாய் கேட்டனர். வரிசையில் நின்றிருந்த கடவுள்களுக்கு உறக்கப்புன்னகையை தந்துவிட்டு பொம்மையை இறுக்கி அணைத்துக்கொண்டதது. பொம்மையாதலின் வழிமுறைகள் அறியாமல் விழித்தபடிநின்றனர் கடவுள்கள்.
So cute kavithai along with cute baby picture. கன்னத்தில் வைத்துக்கொண்டு கேட்டாள் "ஸ்ஸ்ஸ் ரொம்ப குளிருதில்ல?" வாலாட்டியபடி ஆமோதித்தன மீன்கள்.... lovely lines
thayanbhaiyum, thanthaiyin aravanaippaiyum, thara marandhu, porolin pinne oodikkondu irukkum iyandhara ulagirkku sattaiyadiyaga amandhulladhu ungal kavidhai. anbhudan pad
Nila raseegan, Neengal nilavai mattu rasikkaamal adhai pidikka oodum kuzhlandaikalaium rasitha vidham .... migavum arumai. oru pinju nenjam yeppadi irukkumo appadiye neengal koori irupathu miga yedhartham. kankal panithathu... yenathu kuzhlandaikalai yenni... appadiye oodi sendru thazhulva manam thudikkarathu ... yenna seivathu ... maalai varai poruthiru yengirathu office.... oru kavaien thaakkam thaan adhan result. neenal nandragave yella mechanical ammavai yum thaakivittergal... adhukku oru .... claphatsoffBow yedho yenaal mudindhathu....
nila rasigan kuzandhai rasigan anadhu yeppodhu? anbana kuzandhaigalai appadiye kavidhai akki irukkirireergal. romba arumai. andal
Hello! Your குழந்தைக்கவிதைகள் were beautiful! What deep feelings they convey! We would love to see more such poetry. Love Malathi
Miga arumayana kavithai......kuzhanthaigalin manathai padam pidithu kaati irukireergal....vazhthukal....
Nila anaithu kavidhaigalam miga nanru. Kulaindai kavidhai, Kavidhaikku sondakari,naan petha magale and everything of yours - excellent kavidhai puthagam edhavadhu publish panni irukingala?
இதுவரை மூன்று புத்தகங்கள் வெளி வந்திருக்கிறது. 1.நிலாக்காலங்கள்(2001),2.மயிலிறகாய் ஒரு காதல்(2008),3.ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்(2008) முதல் புத்தகத்தை தவிர மற்ற இரண்டும் சென்னையில் உள்ள நியு புக்லேண்ட்ஸ் கடையில் கிடைக்கும்(தி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் இருக்கிறது) Thanks for the wishes