1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஏழ்மை

Discussion in 'Regional Poetry' started by indhusri, Oct 30, 2008.

  1. indhusri

    indhusri Bronze IL'ite

    Messages:
    646
    Likes Received:
    9
    Trophy Points:
    38
    Gender:
    Female
    ஏழ்மை

    "ஆலயம் தொழுவது சாலவும் நன்று "
    அவ்வையின் வாக்கு நினைவுக்கு வர
    அன்னை மீனாக்ஷியைக் காணச் சென்றேன்.

    காலணியைக் கழற்றி வைக்கையில்
    கையை யாரோ பற்றத் திரும்பினேன்.
    ஏழ்மையைப் பறைசாற்றும் உருவம்
    ஏழுவயதிருக்கும் ஒரு சிறுவன்
    " தர்மம் சாமி... பசிக்குது.... " .

    ஒரு கணம் இரங்கினாலும் மறுகணம்
    உள்மனம் கூடாதென்று உரைக்க
    உதறித் தள்ளினேன் அவன் கரத்தை.

    பக்தியுடன் ப்ராகாரத்தை நான் சுற்ற
    பக்கத்தில் ஒரு குரல் "ஐயா..."-அவனே..
    எரிச்சல் மிக எட்டிப்போட்டேன் நடையை.
    "தரித்திரம் விடமாட்டேன் என்கிறது... "

    சிறுவனின் தொந்தரவால் சிந்தை
    பக்தியில் லயிக்க மறுக்க ஒருவழியாய்
    பாதணிகள் வைத்த இடத்தை நான் அடைய
    பின்னால் அவன் குரல் " ஐயா..."

    பழியாய் வந்தது கோபம்
    ஓங்கிய கையுடன் நான் திரும்புகையில்
    நீட்டிய கையுடன் அவன் ......
    " ஐயா... இந்தாங்க உங்க மோதரம்..
    கீழ விழுந்திருச்சு ..."
    திரும்பிப் பாராமல் நடந்தான் அவன்.
    சிலையாக நின்றேன் நான்.

    இல்லாமை எனும் ஏழ்மை அவன் உருவத்தில்
    அறியாமை எனும் ஏழ்மை என் மனத்தினில்.

    அன்புடன் சமர்ப்பிக்கும்,
    இந்து.
     
    Last edited: Oct 30, 2008
    Loading...

  2. Anandchitra

    Anandchitra IL Hall of Fame

    Messages:
    6,617
    Likes Received:
    2,620
    Trophy Points:
    345
    Gender:
    Female
    என் அன்பு இந்து

    நீங்கள் எயுதும் கவிதை
    ஒரு மிக அழகான பூ மாலை
    அதில் ஒவ்வரு பூவும்
    மனதையும் கண்ணையும்
    பரிகின்றன என்றால் மிகை இல்லை
    என்ன ஆய்ந்த கருத்து

    இந்த மாலை சூட்டினதுக்கு மிக
    நன்றி நன்றி நன்றி
     
  3. Anandchitra

    Anandchitra IL Hall of Fame

    Messages:
    6,617
    Likes Received:
    2,620
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Dear Indhu
    When I started to read I wondered where its going.. and I thought it will end the usual way about giving money or something.
    The end was super. Very unusual and most meaningful.

    In a small and short and sweet poem you managed to capture an important essence of life.

    Thanks for writing this and I went ahead and nominated your for FP as well. Richly deserves that and more.
     
  4. sreshta

    sreshta New IL'ite

    Messages:
    91
    Likes Received:
    3
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Dear Indhu,
    Lovely poem with a very touching message!
    Love
    Sreshta
     
  5. Lalitha Shivaguru

    Lalitha Shivaguru Platinum IL'ite

    Messages:
    3,774
    Likes Received:
    310
    Trophy Points:
    215
    Gender:
    Female
    Dear Indhu,

    :clap:clap:clap Your 500th post is superb.

    I was also wondering where you will take us but never expected this twist. Wonderful is all that I can say.

    You make be spell bounded..... what a thought, what wordings.... simple yet soooo profound. You touched my heart Indhu..

    Kudos dear..... Keep coming more.

    BTW: like your DH who made me read tamil, you will make be appreciate poetry....Big Laugh

    Congratulations once again dear.
     
  6. sundarusha

    sundarusha Gold IL'ite

    Messages:
    3,427
    Likes Received:
    181
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Indhu

    I just managed to recollect one word after reading your poem---SUPER!!
     
  7. Gowri66

    Gowri66 Gold IL'ite

    Messages:
    2,637
    Likes Received:
    106
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Indhu,

    Superb !!

    இல்லாமை எனும் ஏழ்மை அவன் உருவத்தில்
    அறியாமை எனும் ஏழ்மை என் மனத்தினில்.

    These two phrases... speaks a lot !!

    Keep it up !! with love,
     
  8. Sindhuja

    Sindhuja Silver IL'ite

    Messages:
    1,104
    Likes Received:
    19
    Trophy Points:
    68
    Gender:
    Female
    அன்புள்ள இந்து,
    உங்கள் கவிதை மிகவும் அற்புதம்!
    படித்தேன் இந்த கவிதையை
    மறந்தேன் என்னையே!
    மல்கியது கண்ணீர்
    ஒரு புறம் சோகம்-அந்த சிறுவனின் ஏழ்மையை கண்டு (
    உண்மையில் என்னோ மக்கள் உள்ளனர் இந்த சிறுவனை போல்)

    இன்னொரு புறம் ஆனந்தம்-என் அன்பு தோழியின் கவிநயம் கண்டு

    :bowdown

    என் மனதை மிகவும் கவர்ந்த இரு வரிகள்:

    "இல்லாமை எனும் ஏழ்மை அவன் உருவத்தில்
    அறியாமை எனும் ஏழ்மை என் மனத்தினில். "


    அன்புடன்,
    சிந்து
     
  9. indhusri

    indhusri Bronze IL'ite

    Messages:
    646
    Likes Received:
    9
    Trophy Points:
    38
    Gender:
    Female
    அன்புமிக்க சித்ரா(ac) ,
    என் கவிதையைப் பூமாலை என்று சொல்லி எனக்குப் புகழ்மாலை சூட்டியமைக்கு நன்றிகள் பலகோடி ! மிக்க மகிழ்ச்சி சித்ரா ! :)
    அன்புடன் ,
    இந்து.
     
  10. indhusri

    indhusri Bronze IL'ite

    Messages:
    646
    Likes Received:
    9
    Trophy Points:
    38
    Gender:
    Female
    Dear AC ,
    My heart-felt thanks for appreciating my simple poem & nominating it for the FP of this month ! I'm honoured ! Thanks , AC !
    Love,
    Indhu.
     

Share This Page