1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

இதம் தரும் இனிய தமிழ் பாடல் வரிகள்

Discussion in 'Music and Dance' started by veni_mohan75, Aug 17, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்பு நண்பர்களே,

    முன்னர் வந்த திரை இசைப் பாடல்கள் எப்போதும் மனம் கவர்வதாய், கேட்போருக்கு இதம் தருவதாய் இனிமை நிறைந்து இருந்தது. பின்னணி இசை ஒரு படத்திற்கு எவ்வளவு முக்கியமோ, அது போலவே பாடல்களும் ஒரு படத்துக்கும் முக்கியம். அதிலும் பாடலும்.. பாடல் வரிகளும் மிக முக்கியம்.

    இசையமைப்பாளர் மற்றும் கவிஞர்கள் கூட்டணி கூட சிறப்பாய் பேசப்பட்டதுண்டு. பழைய பாடல்களில் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்களும் திரு.கண்ணதாசன் அவர்களும் சேர்ந்து செதுக்கிய இசைச் சிற்பங்கள் இன்றும் இனிதாய் நம் நினைவலைகளில் வலம் வருகின்றன.

    அவர்கள் இசை அலை ஓயும் வேளையில் அதை மீட்க வந்த இருவர் திரு.இளையராஜா அவர்களும்..திரு.வைரமுத்து அவர்களும் ஒரு வெற்றிக் கூட்டணி. எண்பதுகளில் அவர்கள் கூட்டணியில் வந்த பாடல் பெரும்பாலும் வெற்றிப் பாடல்கள் தான். அதிலும் ஏராளமானோர் முணுமுணுத்த பாடல் இருக்கும் ஆயிரம். கவிஞர்.வாலி அவர்களின் வரிகளும் சாமான்யப் பட்டது அல்ல.

    அதன் பின்னர் தொன்னூறுகளில் வந்த கூட்டணி.. திரு.ரஹ்மான் அவர்களும், திரு.வைரமுத்து அவர்களும்... இதுவும் ஒரு வெற்றிக் கூட்டணி. முதல் முயற்சியிலே தேசிய விருது வாங்கிய கூட்டணி. எல்லைகள் தாண்டி தமிழ் திரை உலகை கொண்டு சென்ற பெருமை இவர்களையே சாரும்.

    தற்போது இருக்கும் இசையமைப்பாளர்கள், திரு.ஹாரிஸ் ஜெயராஜ், திரு.வித்யாசாகர், திரு.யுவன் ஷங்கர் ராஜா, திரு.தேவி ஸ்ரீ பிரசாத், திரு.விஜய் ஆன்டனி திரு.ஸ்ரீகாந்த தேவா மற்றும் பலர் ஒரு குறிப்பிட்ட கவிஞர்கள் என்று இல்லாமல்.. பலரை கொண்டு எழுதிய பாடல்களுக்கு இசை அமைத்து வருகின்றனர். அவர்களில் ஒரு குறிப்பிட்ட சிலரின் வரிகள் ரசிக்கும் படி உள்ளன. திரு.பா.விஜய், திரு.யுகபாரதி, திரு. அறிவுமதி, திரு.கபிலன், திரு.முத்துக்குமரன் மற்றும் திருமதி.தாமரை.

    இன்றைய பாடல்களில் வரிகள் நன்றாகவே இருந்தாலும், வார்த்தைகளை மீறிய இசை இருப்பதால் வரிகளின் சுகம் தெரிவதில்லை. இங்கே பகிரப் போகும் பாடல் வரிகள் அனைத்துமே.. வரியோடு சேர்ந்த இசையை.. கேட்க இதமாய்.. மனதை மயக்கிய பாடல் வரிகள். எண்பதுகளில் துவங்கி இன்று வரை இருக்கும் மெல்லிசை பாடல் வரிகளை இங்கே பகிரலாம்.

    நீங்களும் பகிருங்கள் உங்கள் மனம் கவர்ந்த பாடல் வரிகளை....
     
    Last edited: Aug 17, 2010
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: வாரணம் ஆயிரம்
    வெளிவந்த வருடம்: 2008
    இயற்றியவர்: கவிஞர் தாமரை
    இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
    பாடியவர்கள்: ஹரிஹரன், தேவன், பிரசன்னா

    நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!
    நீருக்குள் மூழ்கிடும் தாமரை!
    சட்டென்று மாறுது வானிலை!
    பெண்ணே உன் மேல் பிழை!!!

    நில்லாமல் வீசிடும் பேரலை!
    நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை!
    பொன்வண்ணம் சூடிய காரிகை!
    பெண்ணே நீ காஞ்சனை!!!

    ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
    என் உயிரை உயிரை நீ ஏந்தி
    ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
    இனி நீதான் எந்தன் அந்தாதி
    (நெஞ்சுக்குள்..)

    ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
    மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
    கள்ளத்தனம் ஏதும் இல்லா
    புன்னகையோ போகன்வில்லா!

    நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ?!
    நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ?!
    என்னோடு வா வீடு வரைக்கும்!
    என் வீட்டை பார் என்னை பிடிக்கும்!

    இவள் யாரோ யாரோ தெரியாதே!
    இவள் பின்னால் நெஞ்சே போகாதே!
    இது பொய்யோ மெய்யோ தெரியாதே!
    இவள் பின்னால் நெஞ்சே போகாதே!
    (நெஞ்சுக்குள்…)

    தூக்கங்களை தூக்கிச் சென்றாள்!
    ஏக்கங்களை தூவிச் சென்றாள்!
    உன்னை தாண்டி போகும் போது
    வீசும் காற்றின் வீச்சு வேறு!
    நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே!
    நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே!
    காதல் எனை கேட்கவில்லை!
    கேட்டால் அது காதல் இல்லை!

    என் ஜீவன் ஜீவன் நீதானே!
    என தோன்றும் நேரம் இதுதானே!
    நீ இல்லை இல்லை என்றாலே
    என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே!
    (நெஞ்சுக்குள்..)
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: திருடா திருடா
    வெளிவந்த வருடம்: 1993
    இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
    இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
    பாடியவர்கள்: மனோ மற்றும் சித்ரா



    புத்தம் புது பூமி வேண்டும்..
    நித்தம் ஒரு வானம் வேண்டும்..
    தங்க மழை பெய்ய வேண்டும்..
    தமிழில் குயில் பாட வேண்டும்!

    சொந்த ஆகாயம் வேண்டும்..
    ஜோடி நிலவொன்று வேண்டும்..
    நெற்றி வேர்க்கின்ற போது- அந்த
    நிலவில் மழை பெய்ய வேண்டும்!

    வண்ண விண்மீன்கள் வேண்டும்..
    மலர்கள் வாய் பேச வேண்டும்..
    வண்டு உட்காரும் பூ மேலே – நான்
    வந்து உட்காரும் வரம் வேண்டும்!

    கடவுளே, கொஞ்சம் வழிவிடு..- உன்
    அருகிலே ஒரு இடம் கொடு..
    புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு..
    பூமியில் சில மாறுதல் தனை வர விடு!

    யுத்தம் காணாத பூமி – ஒரு
    சத்தம் இல்லாமல் வேண்டும்.
    மரணம் காணாத மனித இனம் – இந்த
    மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்!

    பஞ்சம் பசி போக்க வேண்டும்..
    பாலைவனம் பூக்க வேண்டும்..
    சாந்தி,சாந்தி என்ற சங்கீதம் – சுகம்
    ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்!

    போனவை அட,போகட்டும்..
    வந்தவை இனி வாழட்டும்..
    தேசத்தின் எல்லைக் கோடுகள்..அவை தீரட்டும்..
    தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்!
     
    1 person likes this.
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: சத்தம் போடாதே
    வெளிவந்த வருடம்: 2007
    இயற்றியவர்: கவிஞர் தாமரை
    இசை: யுவன் ஷங்கர் ராஜா
    பாடியவர்கள்: நேஹா பேசின்



    பேசுகிறேன் பேசுகிறேன்
    உன் இதயம் பேசுகிறேன்

    புயல் அடித்தால் கலங்காதே
    நான் பூக்கள் நீட்டுகிறேன்

    எதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே
    அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா….
    (பேசுகிறேன்..)

    கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
    இளைப்பாற மரங்கள் இல்லை
    கலங்காமலே கண்டம் தாண்டுமே.. ஓஹோ

    முற்றுப்புள்ளி அருகில் நீயும்
    மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்
    முடிவென்பதும் ஆரம்பமே….

    வளைவில்லாமல் மலை கிடையாது
    வலியில்லாமல் மனம் கிடையாது
    வருந்தாதே வா…..

    அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..

    காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
    தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
    தன்னைக் காக்கவே தானாய் வளருமே

    பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்
    பெண்ணே கொஞ்ச நேரம்தானே
    உன்னைத் தோண்டினால்
    இன்பம் தோன்றுமே

    விடியாமல்தான் ஓர் இரவேது
    வடியாமல்தான் வெள்ளம் கிடையாது
    வருந்தாதே வா…
    அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..

    (பேசுகிறேன்..)
     
    3 people like this.
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: நிலவே மலரே
    வெளிவந்த வருடம்: 1986
    இயற்றியவர்: கவிஞர் தாமரை
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்கள்: பி.சுசிலா



    மண்ணில் வந்த நிலவே
    என் மடியில் பூத்த மலரே!
    அன்பு கொண்ட செல்லக் கிளி
    கண்ணில் என்ன கங்கை நதி
    சொல்லம்மா!

    நிலவே………..! மலரே………..!
    நிலவே, மலரே
    மலரின் இதழே
    இதழின் அழகே!

    -மண்ணில் வந்த நிலவே….

    எட்டி நிற்கும் வானம்
    உன்னைக் கண்ட நேரம்
    பக்கம் வந்து தாலாட்டும்!
    அந்தி மழை மேகம்
    இந்த மலர் தேகம்
    தொட்டுத் தொட்டு நீராட்டும்! (எட்டி)

    விழிகளில் கவிநயம்
    விரல்களில் அபிநயம்
    கண்ணே நீ காட்டு!
    விடிகிற வரையினில்
    மடியினில் உறங்கிடு
    பாடல் நீ கேட்டு!

    நிலவே………..! மலரே………..!
    நிலவே, மலரே
    மலரின் இதழே
    இதழின் அழகே!

    மண்ணில் வந்த நிலவே
    என் மடியில் பூத்த மலரே!

    புன்னை இலைபோலும்
    சின்னமணிப் பாதம்
    மண்ணில் படக் கூடாது!
    பொன்னழகு மின்னும்
    உன்னழகு பார்த்து
    கண்கள் படக் கூடாது! (புன்னை)

    மயில்களின் இறகினில்
    அழகிய விழிகளை
    நீதான் தந்தாயோ?
    மணிக்குயில் படித்திடும்

    கவிதையின் இசையென
    நீதான் வந்தாயோ!

    நிலவே………..! மலரே………..!
    நிலவே, மலரே
    மலரின் இதழே
    இதழின் அழகே!
     
    1 person likes this.
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: புன்னகை மன்னன்
    வெளிவந்த வருடம்: 1984
    இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
    இசை: இளையராஜா
    பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்



    என்ன சத்தம் இந்த நேரம்
    என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
    என்ன சத்தம் இந்த நேரம் கதிரின் ஒளியா
    கிளிகள் முத்தம் தருதா
    அதனால் சத்தம் வருதா…அடடா…

    (என்ன சத்தம்)

    கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
    கண்களில் ஏனந்தக் கண்ணீர் அது யாராலே
    கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே
    காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே
    மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
    ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு
    ஆரிரரோ இவர் யார் எவரோ பதில் சொல்வார் யாரோ

    (என்ன சத்தம்)

    கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ
    தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ
    உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உணர்ந்து போனதோ
    உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ
    மங்கையிவள் வாய்திறந்தால் மல்லிகைப்பூ வாசம்
    ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
    யார் இவர்கள் இரு பூங்கொடிகள் இளம் காதல் மான்கள்

    (என்ன சத்தம்)
     
    1 person likes this.
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: அங்காடி தெரு
    வெளிவந்த வருடம் : 2009
    இசை: விஜய் ஆண்டனி, g.v.பிரகாஷ் குமார்
    பாடியவர்கள் : வினித் ஸ்ரீநிவாஸ், ரஞ்சித், ஜானகி ஐயர்
    பாடலாசிரியர் : நா. முத்துகுமார்


    அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
    அவளுக்கு யாரும் இணையில்லை
    அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
    ஆனால் அது ஒரு குறையில்லை
    அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
    அவளை படித்தேன் முடிக்கவில்லை
    அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
    இருந்தும் கவனிக்க மறுக்கவில்லை

    அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
    நான் காவல் இருந்தால் தடுக்கவில்லை
    அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
    நான் பொம்மை போலே பிறக்கவில்லை


    அவள் கூந்தல் ஒன்றும் நீளம் இல்லை
    அந்த காற்றில் தொலைந்தேன் மீளவில்லை
    அவள் கைவிரல் மோதிரம் தங்கவில்லை
    கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை
    அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
    எனக்கு எதுவுமில்லை

    அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
    அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
    அவள் திட்டும் போது வலிக்கவில்லை
    அந்த அக்கறை போலே வேறில்லை

    அவள் வாசல் ரோஜா வாசமில்லை
    அவள் இல்லாமல் சுவாசமில்லை
    அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
    அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
    எனக்கு எதுவுமில்லை
     
    1 person likes this.
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வாழ்த்துக்கள் வேணி புதிய இசை நூலுக்கு. :thumbsup
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    வாழ்த்துக்கள் மட்டும் சொல்லி தப்பிக்கக் கூடாது ஜே வீ. :rant உங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும்.. என வேண்டும் நான். :)
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: காதலில் விழுந்தேன்
    வெளி வந்த வருடம் : 2008
    இயற்றியவர் : தாமரை
    இசை: விஜய் ஆந்தோனி
    பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, மேகா, ஸ்ரீ சரண்

    தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
    தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
    மடி மீது தூங்க சொல்கிறாய்
    தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
    நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
    ஓஹோஹோ பெண்ணே

    ஏனடி என்னை கொல்கிறாய்
    உயிர் வரை சென்று தின்கிறாய்
    மெழுகு போல் நான் உருகினேன்
    என் கவிதையே என்னை காதல் செய்வாய்

    கனவிலும் நீ வருகிறாய்
    என் இமைகளை தொட்டு பிரிக்கிறாய்
    இரவெல்லாம் செத்து பிழைக்கிறேன்
    உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி
    (தோழியா..)

    ஒரு துளி நீர் வேண்டி நின்றேன்
    அடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய்
    சிலுவைகளை நான் சுமந்து நின்றேன்
    சுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய்
    விழிகள் ஓரம் நீர் துளியை
    மகிழ்ச்சி தந்து உளர வைத்தாய்
    பாலைவனத்தில் பூக்கள் தந்து
    சொர்க்கங்களை கண் அருகில் காட்டினாய்
    கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்
    காலை நேரத்தில் இரவு கண்டேன்
    வெள்ளை நிறத்து தேவைதையே
    வண்ணங்களை தந்து விட்டு
    என் அருகில் வந்து நில்லு
    (தோழியா..)

    இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்
    மின்மினி பூச்சிகள் மிதக்க விட்டாய்
    தனி அறையில் அடைந்து விட்டேன்
    சிறகுகள் கொடுத்து என்னை பறக்க விட்டாய்
    அலைகள் அடித்து தொலைந்து விடும்
    தீவை போல மாட்டிக் கொண்டேன்
    இறுதி சடன்கில் மிதிகள் படும்
    பூவை போல் கசங்கி விட்டேன்
    தெய்வம் பூகிக்கு வருவதில்லை
    தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான்
    தாயும் இங்கு எனக்கு இல்லை
    எனக்கு தாயை உன் உருவில் தந்து விட்டான்
    (தோழியா..)
     
    1 person likes this.

Share This Page