நாளொரு சென்ட்டி மீட்டரும், பொழுதொரு மில்லி மீட்டருமாக சேதாரமாகிக் கொண்டிருக்கிறது நயன்தாராவின் அழகு. "தல... இனிமே அந்த பெரியம்மாவுடன் நடிச்சிராதீங்க" என்று ஏராளமான கடிதங்கள் வருகிறதாம் அஜீத்திற்கு. இதே போல தமிழின் முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேருக்கும் கடிதம் எழுதி கவலை தெரிவிக்கிறார்கள் ரசிகர்கள். வலைப்பூக்களிலும், இணையதளங்களிலும் கூட நயன்தாராவின் அழகு குறித்து வெட்டி மன்றங்கள் நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு பாடலுக்காவது ஆடியே ஆக வேண்டும் என்று ஒரு டைரக்டர், அதுவும் வெற்றிப்பட டைரக்டர் நயன்தாராவை தொடர்பு கொண்டால் எப்படியிருக்கும்?
கோவா படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்று அழைத்தாராம் வெங்கட் பிரபு. முதலில் 'பிகு' பண்ணிய நயன்தாரா, பிறகு வெங்கட்டின் அழைப்புக்கு 'எஸ்' சொல்லியிருக்கிறாராம். ஒரு பெரும் தொகையை நயன்தாராவுக்கு சம்பளமாக வழங்கவும் சம்மதித்திருக்கிறார்கள். கோவாவில் சினேகா உட்பட ஏராளமான அழகிகள் நடித்திருக்கிறார்கள். இது போதாதென்று இப்போது நயன்தாரா.
ஏற்கனவே சொன்ன பட்ஜெட்டை இரண்டு மடங்காக்கி சவுந்தர்யா ரஜினியை சங்கடத்தில் ஆழ்த்தியவர்கள் தேவையில்லாமல் இப்படி ஒரு செலவை தந்திருப்பது யாருக்காக?
ரசிகர்களுக்காக என்றால்... அது நமக்கு நாமே ஏமாற்றிக் கொள்கிற பதில்தான்!