Dear ladies,
A news about Vijay:
நடிகர் விஜய் தமிழக வீட்டு வசதி வாரியத்திடமிருந்து வாங்கிய நிலம் விதிமுறைகளுக்கு புறம்பானது என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு விளக்கமளிக்கும்படி விஜய்க்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது நீதிமன்றம். இந்த நிலையில் இந்த நிலம் தொடர்பாக தனது விளக்கத்தை அளித்திருக்கிறார் விஜயின் அப்பா எஸ்.ஏ.சி.
உதயம் தியேட்டருக்கு எதிரிலிருக்கும் நிலத்தை வீட்டு வசதி வாரியம் ஏலம் விட்டது. நடிகர் என்ற எந்த பந்தாவும் காட்டாமல் பொதுமக்களில் ஒருவனாக இந்த நிலத்தை நான் முறைப்படி ஏலம் எடுத்தேன். விஜய் ஜோசப் என்ற சொந்தப் பெயரில் இந்த நிலம் ரிஜிஸ்தர் செய்யப்பட்டது. ஆனால், பக்கத்தில் இருக்கிற கல்யாண மண்டபத்தையும் நான் சேர்த்து வாங்கிவிட்டதாக புரளி கிளப்பினார்கள். இதற்கிடையில் இந்த இடத்தில் பறக்கும் ரயில் திட்டம் வர இருப்பதால் எங்களுக்கு மாற்று இடம் தருவதாக கூறிய வீட்டு வசதி வாரியம் வேறொரு இடத்தை கொடுத்தது. அதில்தான் இப்போது பிரச்சனை.
விஜய் சாதாரண நடிகராக இருக்கும் போது எங்கள் உழைப்பில் நாங்கள் சம்பாதித்த பணத்தில் வாங்கிய இடங்களை பற்றி யாரும் முணுமுணுக்கவில்லை. ஆனால், இன்றைய தினம் அவர் வளர்ந்திருக்கிறார். தேசிய அளவில் அவரது புகழ் விரிவடைந்திருக்கிறது. இது சிலருக்கு பொறுக்காமல்தான் இப்படி புரளி கிளப்புகிறார்கள். இதை சட்டரீதியாக சந்திப்பேன் என்று கூறியிருக்கிறார்.
அடுத்த ஸ்டெப் என்னவாக இருக்குமோ?
with love
pad